தைத் திருநாளில் தமிழர் சித்திரங்கள்!

தமிழர் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது பொங்கல் பண்டிகை. கிராமங்களில் அத்திருநாள் நான்கு நாட்கள் கோலாகலமாக நடக்கும். புத்தாடை அணிந்து, கோலமிட்டு, கரும்பு ,சர்க்கரை பொங்கலுடன் இனிக்க இனிக்க பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். மாட்டுப் பொங்கலில், வீட்டில் உள்ள மாடுகளையும் அலங்கரித்து, தோரணம் கட்டி, ஆரத்தி எடுத்து வழிபடுவர்.

கரிநாள் அன்று, தலையில் மலர் தரித்து, பெண்கள் கும்மியடித்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்ததுவர். இளங்காளையர் மாடுபிடி திருவிழாவில் பங்கேற்பர். பல இடங்களில் ஜல்லிக்கட்டும் களைகட்டும். இவையெல்லாம் தைத் திருநாளில் தமிழர் சித்திரங்கள்!

கடந்த ஆண்டில் மெரினாவில் நம் உரிமையை மீட்டெடுத்தோம். புதிய தலைமுறையின் போர்க் குணத்துக்கு வெற்றி மாலைகளே பரிசாக கிடைத்தன. ஒரு இனத்தின் அடையாளமும், பண்பாடும், கலாச்சாரமுமாக மாறிப்போன ஜல்லிக்கட்டு, இளைஞர்களின் மனதில் தீபமாய் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் அதன் கொண்டாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது!

இத்தகைய சிறப்பு மிக்க நாட்களில் தான், 41வது சென்னைப் புத்தகக் காட்சியும் துவங்கியுள்ளது. வருகிற 22 ஆம் தேதி வரை இது நடக்கும். உலகின் புகழ்பெற்ற பல நூல்களும், தமிழின் முன்னணி எழுத்தாளர்களின் படைப்புகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. ஒரு ஆண்டின் துவக்கம் என்பது முக்கியமானது. அதை புத்தகங்களோடு ஆரம்பிப்பது இன்னும் சிறப்பு. வாசிப்பே நம்மை பண்படுத்தும்; வழிநடத்தும். கை கோர்த்துக்கொண்டு வாசிப்போமா!

இனிய பொங்கல் வாழ்த்துகள்!

@மனம்

ஆசிரியர்


ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிப்பில், வெளியாகி உள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஜோடி நடித்துள்ளது. நீண்ட நாளாக சூர்யாவுக்குள் இருந்த ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளார் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன். அதுபற்றி சூர்யாவே சொல்கிறார்.

“இதுவரை நான் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் புதுமையான படமாக ‘தானா சேர்ந்த கூட்டம்’ இருக்கும். இயக்குநர் விக்னேஷ் சிவனோடு பணியாற்றிய அனுபவம் நன்றாக இருந்தது. நான் படத்தில் பிரெஷாக இருப்பதாக அனைவரும் கூறுகிறார்கள். அதற்கு முழு காரணம் விக்னேஷ் தான். எனக்கு முன்பை போல் பெரும்பாக்கம் சென்று சாதாரணமான ஒரு கடையில் டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளாக உண்டு. அதை அவர்தான் நிறைவேற்றி வைத்தார்!”

எவ்ளோ பெரிய ஆசை!

சூர்யாவின் ஆசையை நிறைவேற்றிய விக்னேஷ் சிவன்!

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'. அண்மையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். படத்தின் பாடல்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், படத்தின் டீசர் யூ டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது.

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பிரபல தொலைக்காட்சி பெற்றுள்ளது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளதால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்!

வாவ்.. அப்போ படம் ஹாட்ரிக் வெற்றிதான்!

பல மில்லியன் வியூஸை கடந்த‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’!

பொங்கல் விருந்து குலேபகாவலி!

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக கோட்டபாடி ஜே. ராஜேஷ் தயாரித்துள்ள படம் ‘குலேபகாவலி’. இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா ஜோடி நடித்துள்ளது. மேலும், ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இசையில், ‘குலேபகாவலி’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. அதிலும் ‘குலேபா’ பாடல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் பெரும் ஹிட்டாகியுள்ளது. காமெடி த்ரில்லர் வகையை சேர்ந்த இப்படம் பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ளது.

கலகல காமெடி விருந்துன்னு சொல்லுங்க!

'கிளம்பிட்டாங்கய்யா ஜெயிச்சுடுவாங்கய்யா'

மிழ் சினிமாவில் ஒரு படத்தில் 4,500 ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ எனும் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் ரசாக். படம் குறித்து அவர் பேசும்போது,

“படத்தில் ஆறு டைரக்டர்ஸ் நடிச்சிருக்காங்க. அவங்க எனக்கு கொடுத்த ஆலோசனைகள் நூறு படத்தில் வேலை செய்ததற்கு சமம். நிறைய கற்றுக்கொண்டேன். படத்தோட டிரைலர் பார்த்தா உங்களுக்கு சீரியஸான படம் போல தோன்றும். ஆனால், உண்மையில் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா' நல்ல எண்டெர்டெயின்மென்ட் பண்ணக்கூடிய காமெடி படம். கண்டிப்பா இதை தியேட்டரில் வந்து பாருங்க..!” என்றார். இந்தப் படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு பலரும் பேசுவது, ‘கிளம்பிட்டாங்கய்யா.. கண்டிப்பா ஜெயிச்சுடுவாங்கய்யா..’ என்பதுதான்!

உழைப்புக்கு எப்போதுமே பலன் உண்டு பாஸ்!


இருநாள் முதல்வர்! ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் 'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'. இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா நாயகியாகவும் அறிமுகமாகி உள்ளார்கள். படத்தின் திரைக்கதையை எழுதி, இயக்கியுள்ளார் ரசாக். பவர் ஸ்டார் சீனிவாசனும் நடித்துள்ளார்.

அண்மையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது, விழாவில் கலகலப்பாக பேசி, எல்லோரையும் கவர்ந்தார் பவர் ஸ்டார். “நிஜ வாழ்க்கையில் நான் முதல்வராவேனா என்பது தெரியாது. ஆனால், இந்தப் படத்தில் இரண்டு நாட்கள் முதல்வராகவே வாழ்ந்தேன். ஏராளமான கார்கள், போலீஸ் படை என அதகளப்படுத்திவிட்டார் இயக்குநர் ரசாக்!” என்றார். அவரது பேச்சுக்கு அரங்கமே அதிர்ந்தது!

பவர் ஸ்டாரா.. கொக்கா!

‘இனியா’வுக்கு நான்தான் காஸ்ட்யூமர்!

‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ படத்தில் நடித்துள்ள தாரா, நடிகை இனியாவின் தங்கை. தமிழ் சினிமாவுக்கு புது வரவு. பேச ஆரம்பித்தாலே அக்கா புராணம் பாடுகிறார். படத்தில் அவருக்கு மலைவாழ் பெண் வேடம். அதனால் ஒரே காஸ்ட்யூமில்தான் படம் முழுக்க வருகிறாராம். அவருக்கு ரொம்பவும் பிடித்தது எளிமையான ஆடைகள் தானாம். புடவை, சுடிதார் எல்லாம் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் மட்டுமே. “இனியாவுக்கு நான்தான் காஸ்ட்யூம் டிசைனர். இதையும் மறந்துடாம எழுதுங்க!” என்று, அன்பு கட்டளை இடுகிறார்.

உதவி இயக்குநர் நோட் பண்ணுங்கப்பா..!