தலையங்கம்

காய்ச்சலைத் தடுக்க கை கோர்ப்போமா?

சென்னையில் வேகமாக பரவி வருகிறது காய்ச்சல். அதற்கு என்ன பெயர் வைப்பது என்பதில் மருத்துவர்கள் இடையே பலத்த போட்டிகள் நிலவி வருகின்றன. இச்சூழலில், ‘பருவநிலை மாறுதலால் வருகிற வழக்கமான காய்ச்சல்’தான் என்று ஒருசாரார் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாலும், ‘உண்மையில் இது என்ன மாதிரியான ஜுரம்?’ என்று தெரியாமல் பலரும் வாய் பிளந்தபடியே கேள்வியை கடந்து செல்கின்றனர்.

“தமிழகத்துக்கு பல்வேறு பிரச்னைகள். அதை விட இது முக்கியமான ஒன்றா?” என்கிற கோணத்திலும் விவாதங்கள் சூடுபறக்கின்றன. ஆனால், உயிர் விஷயத்தில் அப்படியெல்லாம் நாம் அலட்சியம் காட்டிவிட முடியாது. ‘சென்னையில் தான் 70 சதவீதம் பேர் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்கிறது புள்ளி விவரம். “மெய்யாலுமா?” என்பது போல, அசட்டையாக இல்லாமல் கொஞ்சம் அக்கம் பக்கத்தில் விசாரித்தால் காய்ச்சலின் தீவிரத்தை உணர முடிகிறது!

‘காய்ச்சல் வந்தால், அதை அலட்சியப்படுத்தி பாராசிட்டமாலோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம். அருகில் உள்ள அரசு சுகாதார மையத்தில் காட்டி, ரத்த பரிசோதனை செய்துகொள்வது நல்லது’ என்று மருத்துவர்கள் ஒருபக்கம் எச்சரிக்கின்றனர். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பை விட அதிகமாக சோஷியல் மீடியாக்களிலும் வாட்ஸ் அப்பிலும் ‘டெங்கு’வை தடுக்கும் முன் நடவடிக்கைகள் பற்றி செய்திகள் பகிரப்படுகின்றன. இது யாரால் முன்னெடுக்கப்படுகிறது? எனும் கேள்வியையும் அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியவில்லை.

‘டைகர் மஸ்கிட்டோ’ என அழைக்கப்படும் டெங்குவைப் பரப்பும் ஈடிஸ் கொசு நம்முடைய வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தான் உற்பத்தி ஆகின்றனவாம். எனவே அதை தடுக்கும் பொருட்டு வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதும், தண்ணீர் டிரம்களை மூடி வைப்பதும், வாரத்துக்கு ஒருமுறையாவது குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வதும், காய்ச்சிய நீரை பருகுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும். ஆனால், மிக வேகமாக முன்பை விட அதிக பலத்துடன் நம்மை தாக்கும் கொசுக்களிலிருந்து தப்பிக்க, இவை மட்டும் போதாது.

ஊர் கூடி தேர் இழுத்தால் தான் வெற்றி வந்து சேரும் என்பது போல, அரசுடன் சேர்ந்து நமது ஊரையும், நகரத்தையும் சுத்தமாக வைத்திருக்க மிஸ்டர் பொதுஜனம் கைகோர்த்து நிற்க வேண்டிய தருணம் இது. விலகி நின்றால் வேட்டு வைக்க தயாராகி விட்டார் மிஸ்டர் கொசு!

ஆசிரியர்

@மனம்

ம்முடைய வாழ்க்கை நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் முற்றிலும் மாறிவிட்டது. இதன் விளைவாக நாம் பல சௌகர்யங்களை பெற்றுள்ளோம். அதனால் கிடைக்கும் சந்தோஷத்தை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறோம். ஒவ்வொரு செயலிலும் வெற்றியையே எதிர்பார்த்தே பணியாற்றுகிறோம். வெற்றி எனும் பொருள் நம்மை பொருத்தவரை பணம் ஈட்டுவதே. ஆனால், அது மட்டுமே வெற்றியா?

தவழும் குழந்தை எழுந்து, நடக்க செய்யுமே அதுவும் கூட வெற்றி தான். மனிதனுக்கு மனிதன், இடத்துக்கு இடம், சூழலுக்கு சூழல் வெற்றி மாறுபடுகிறது. ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபட்டு, நாம் தங்கம் பதக்கம் பெறுவது என்பது வெற்றிதான். ஆனால், அதற்கு முன்னோட்டமாக அதை நோக்கி முதல் அடி எடுத்து வைப்பது கூட வெற்றிதான்.

வெற்றி என்பது முயற்சிக்கு கிடைத்த பலன் என்கிறோம். நம்முடைய கனவை விடாமுயற்சியுடன் தொடர்ந்தால், இறுதியில் கிடைக்கும் பலனே வெற்றி என்பது நேற்றுவரை நமக்கு வேதவாக்காக இருந்து வந்தது. ஆனால், இப்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது.


ஒருவேலையை இலகுவாக செய்தால் அதுதான் வெற்றி. ஆனால், பெரும்பாலும் ஒரு வேலையை அடுத்தவருக்கு தள்ளிவிட்டு, அதன் மூலம் கிடைக்கும் பலனை, நாம் பெறுவதே வெற்றி அல்லது ஸ்மார்ட் வொர்க் என பார்க்கப்படுகிறது. ஆனால், இது உண்மையான வெற்றி ஆகாது. ஸ்மார்ட் வொர்க் என்பது வேலையை இலகுவாக செய்வதே தவிர; தள்ளிவிடுவதல்ல!.
ஒருவர் தன்னுடைய லட்சியத்தை அடைவதை பெரிய வெற்றி எனலாம். அப்படியாக, ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்றவர்களை பார்த்து, அவர்கள் செய்ததை அப்படியே காப்பி அடித்தாலும் வெற்றி கிட்டாது. மாறாக, அவர்கள் கடைபிடித்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு போன்றவற்றை பின்தொடர்ந்து, நம்முடைய சொந்தப் வழியில் முயற்சித்தால் வெற்றி உறுதி.ன்ன சின்ன விஷயங்களில் கிடைக்கும் ஆத்ம திருப்தி கூட வெற்றிதான்.

சின்ன சின்ன நீர்த்துளி சேர்ந்து சமுத்திரமாவது போல, சின்ன சின்ன வெற்றிகள் சேர்ந்து மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கும். நம்முடைய ஒரு செயலால் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் பலன் கிடைத்தால் அது உண்மையான வெற்றி. அதுவே அனைவருக்கும் பயன்பட்டால் அதுதான் மிகப் பெரிய வெற்றி!


‘பொட்டு’ பயங்கரமான ஹாரர் படம்!

இயக்குநர் வடிவுடையான்

"திகில் படத்தை எப்படியெல்லாம் எடுக்கணும், எடுக்கக்கூடாதுன்னு ‘சவுகார்பேட்டை’ படத்துலதான் கத்துக்கிட்டேன். அப்படியாக வேறொரு பரிணாமத்தில் அழுத்தமான கதையமைப்பில் உருவாக்கியுள்ள படம் தான் ‘பொட்டு’. நிச்சயம், ஹாரர் ரசிகர்களுக்கு இந்தப் படம் விருந்தாக அமையும்..” ஓபனிங்கிலேயே வேகமும் விறுவிறுப்பும் காட்டுகிறார் இயக்குநர் வடிவுடையான். கோலிவுட்டில் மறைந்த இயக்குநர் ராம.நாராயணன் இடத்தை நிரப்பி வரும் டைரக்டர்.. தொடர்ந்து பேசும்போது,

“திகில் படத்தை விறுவிறுப்பான திரைக்கதையின் மூலமாக மக்கள் மத்தியில அழுத்தமாக சொல்ல முடியும் என நான் உணர்ந்த படம் தான் ‘பொட்டு’. பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்கிறது.நடிகர் பரத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து செல்லும் படமாக ‘பொட்டு’ இருக்கும் என உறுதியாக சொல்ல முடியும். தன்னுடைய பாத்திரத்துக்கு அவர் தந்துள்ள உழைப்பும் அர்ப்பணிப்பும் ரசிகர்களால் நிச்சயம் உணர முடியும்!

திகில் காட்சிகள், ஆடியன்ஸ் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். பொட்டு பயங்கரமான ஹாரர் படம் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை!.ஆக்ஷன் படமான ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ எப்படி வித்தியாசமாக இருந்ததோ, அதேபோல் திகில் படங்களில் ‘பொட்டு’ மாறுபட்டு இருக்கும். சண்டைக் காட்சிகளை சூப்பர் சுப்புராயன் மாஸ்டர் தான் அமைச்சிருக்காரு. சில காட்சிகளில் அவரே கீழே குதித்து, பைட் பண்ணியிருக்கார். இந்த வயதிலும் அவருடைய அர்ப்பணிப்பை பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது!

இசையமைப்பாளர் அம்ரீஷுக்கு இதுதான் முதல் ஹாரர் படம். பிளாஷ்பேக் காட்சிககளில் அவருடைய பின்னணி இசை பிரமாதமாக இருக்கும். மொத்த படத்துலயும் திகில் காட்சிகளில் பூந்து விளையாடி இருக்காரு மனுஷன்!. மொத்தத்தில் தமிழ் சினிமாவில் எங்க படக்குழு அனைவருக்குமே பேர் சொல்கிற, அடையாளமான படமாக ‘பொட்டு’ இருக்கும்!” பொட்டில் அடித்தாற்போல நச்சென்று முடிக்கிறார் இயக்குநர் வடிவுடையான்.


கதையை, முழுக்க இரவில் நடக்கிற மாதிரிதான் அமைத்திருக்கேன். அதனை விஷுவலாக எடுத்துட்டு வருவதற்கு ஒளிப்பதிவாளர் இனியன் ஹரீஷ் கடுமையாக உழைத்திருக்கார். ஒவ்வொரு காட்சிகளை பார்க்கும்பொழுது பார்வையாளர்களுக்கு பிரமிப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது.

“டாக்டர் எப்படி சொல்றதுன்னு தெரியல. சொல்லியே ஆகணும். அது வந்து இந்த கேஸ் ட்ரபிள் தான் பெரிய பிரச்னையா இருக்கு. முக்கியமான மீட்டிங்குல இருக்கும்போது சங்கடமா இருக்கு. என்ன செய்றதுன்னே தெரியல”

“உடம்பு முழுக்க ஒரு குத்துற மாதிரியா வலி. வலிக்குற இடத்துல அமுக்கினா ஏப்பம் வருது. இங்க பாருங்க.. முதுகுல இங்க அமுக்கங்க டாக்டர். அப்பத்தான் ஏவ்வ்..”


“வயித்துக்குள்ள எப்பவும் கடாமுடா தான் சார். காத்தடைச்ச மாதிரி உப்பிக்கு. இவ்வளவுக்கும் நா ஒண்ணும் அதிகம் சாப்பிடுறது இல்ல..”

“வாயுத்தொல்லைக்கு மருந்து இருக்கா சார். நானும் பாக்காத வைத்தியமில்லை. இஞ்சி, பூண்டு எல்லாம் கிலோ கணக்குல உள்ள தள்ளியாச்சு. ஒரு பிரயோசனமும் இல்ல. படார் படார்ன்னு என்னத்த சொல்ல..”

“ஒரு இடத்துல பத்து நிமிசத்துக்கு மேல இருக்க மாட்டேன் டாக்டர். எவ்வளவு கண்ட்ரோல் பண்ணாலும் கேஸ் கீழே வந்துடுமோன்னு பயம். சீக்கிரம் ஏதாவது கொடுங்க டாக்டர். ஏ.சி. ரூம்ல ரொம்ப நேரம் தாங்காது”


“ஒண்ணு மேலே அல்லது கீழே காத்துப் பிரியலேன்னா மூச்சு விடவே கஷ்டமா இருக்கும் டாக்டர். காத்துப் பிரியாம இருக்க மருந்து வைச்சுருக்கீகளா”
“எனக்குப் பேரே வைச்சுடானுக சார் ஹாஸ்டல்ல.. லீவு முடிஞ்சு போகும்போது என் பெயரை அவங்க சொல்லணும் சார். எவ்வளவு கசப்பா இருந்தாலும் கொடுங்க சார்..”

காற்றை வெளியேற்றுபவர்களின் அவலச் சொற்கள் காற்றில் மிதந்து வருகின்றன கட்டுரையை எழுத நினைக்கும் முன்.

நோய் விளக்கம் :

வாத நாடியும், பித்த நாடியும் பாதிக்கப்படுவதால் வாயுத்தொல்லை ஏற்படும். முறையற்ற உணவுப் பழக்கம், மலச்சிக்கல், செரியாமை, போதிய உறக்கமின்மை போன்றவை பித்தம், வாத நாடிகளைப் பாதிக்கச் செய்து வாயுத்தொல்லையை உருவாக்கும்.

குறி குணங்கள்:

பசியின்மைவயிறு வலித்தல்ஏப்பம்கீழ்வாய் வழியே காற்று வெளியேறுதல்உடம்பில் குத்தல், குடைச்சல்


சித்த மருத்துவம் :

உணவே மருந்து :

எளிதில் சீரணிக்கக் கூடிய உணவு வகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உணவில் இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம், வெந்தயம், பூண்டு, மஞ்சள், ஏலக்காய் ஆகிய பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

நண்பகலில் சுக்குநீர் அருந்தி வர வாயுத்தொல்லை நீங்கும்.

தினமும் இரசம், மோர் சேர்ந்த உணவுகள் எடுத்துக்கொள்ள வாயுத்தொல்லை குறையும்.

கீரை வகைகள் சேர்த்து, மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொண்டால் வாயுத்தொல்லை குறையும்.


உணவிற்கு பின் சுடுநீர் அருந்துவது வாயுத்தொல்லையைக் குறைக்கும்.

பசியறிந்து உண்ணும் முறையைக் கடைப்பிடித்து வர வாயுத்தொல்லை முற்றிலும் அகலும்.

எண்ணெய்ப் பலகாரங்களை தவிர்த்தால் வாயுத்தொல்லை குறையும்.

சித்த மருந்துகள் :

பஞ்ச தீபாக்கினி சூரணம் - மூன்று விரல் அளவு - உணவிற்கு முன் காலை, மதியம், இரவு

சீரக சூரணம் - மூன்று விரல் அளவு - உணவிற்கு பின் இருவேளை

ஏலாதி சூரணம் - இரண்டு விரல் அளவு - உ. பின் இருவேளை

அஷ்ட சூரணம் - ஐந்து விரல் அளவு - முதல் வாய் சோற்றில் பிசைந்து - மதியம்

குன்மகுடோரி மெழுகு - பாக்கு அளவு - உணவிற்கு பின் இருவேளை

அடுத்த இதழில் ‘குரற்கம்மல்’


சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்தேன்!

பவித்ரா

கோலிவுட்டில் டப்பிங் தேவைப்படாத நடிகை இனியா. தமிழ் அவரிடம் கொஞ்சி விளையாடும். தமிழ் சினிமாவில் தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்கும் நடிகைகளில் அவரும் முக்கியமானவர். ‘பொட்டு’ படத்தில் மாறுபட்ட பாத்திரத்தில் அசத்தியுள்ளவர் பேசும்போது..

“எனக்கு பல படிப்பினைகளை கொடுத்த படம் ‘பொட்டு’. டைட்டில் ரோல்ல நான் நடிக்கிற இரண்டாவது படமும் இதுதான். ஏற்கனவே திகில் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு முக்கியமான காரணங்கள் இருக்கு. நான் நடிக்கும் படங்களில் என்னுடைய பாத்திரம் சவாலானதாக அமைக்கப்பட்டிருக்கான்னு பார்ப்பேன். ‘பொட்டு’ படத்திலும் அப்படியான காட்சிகள் நிறைய இருக்கு. கதையோட சேர்ந்து பயணிக்கும்படியான, முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்திருக்கேன். என்னுடைய பாத்திரத்தை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போகிறமாதிரி பரத்தும் நடித்திருப்பது சந்தோஷம்!


பொதுவாக நடிப்பில் அழுகை, சிரிப்பு, காதல் உணர்வுகளை சுலபமாக வெளிப்படுத்தலாம். ஆனால் ஆக்ஷனுடன் சேர்த்து திகிலை வெளிப்படுத்தணும்னா ரொம்ப கஷ்டம். நான் ஏற்கனவே கற்று வைத்திருந்த மார்ஷியல் ஆர்ட்ஸ்தான் இந்தப் படத்தில் எனக்கு உதவியாக இருந்தது. சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்தேன்.

‘பொட்டு’வில் இடம்பெறும் இடுகாடு எல்லாம் செட் போடாமல் உண்மையாக அங்கேயே படம் பிடிக்கப்பட்டிருக்கு. அங்கே போகுறதுக்கு முன்னாடி, சில பிரார்த்தனைகளை செஞ்சுட்டுதான் போனோம். அப்படி செய்ததால் எங்களுக்கு எந்த விதமான அசம்பாவிதமும் நடக்கலை!

இயக்குநர் வடிவுடையான் ரொம்ப சுறுசுறுப்பானவரு. என்னுடைய சினிமா பயணத்தில் இவ்ளோ சீக்கிரம் ஒரு படத்தில் நடித்து, முடித்தில்லை. ஷுட்டிங் ஸ்பாட்டில் அவர் எப்படி நடித்து, காட்டுகிறாரோ அதை மட்டும் செய்தால் போதும். நம்முடைய நடிப்பு மிகச் சிறப்பாக அமைஞ்சுடும். நீண்ட நாளைக்கு பிறகு தமிழில் என் நடிப்பில் வெளிவரப்போகும் படம் ‘பொட்டு’.

எல்லோரும் தியேட்டரில் வந்து படம் பார்த்துட்டு சப்போர்ட் பண்ணுங்க!” கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுக்கிறார் இனியா!
பேருந்து கங்காவதியை அடைந்த போது பிற்பகல் ஒரு மணி ஆகி விட்டது. அங்கிருந்து ஹோஸ்பேட் செல்லும் பேருந்தில் ஏறி ஆனேகுந்தியில் இறங்க வேண்டும். “ஹோஸ்பேட் செல்லும் பேருந்து புறப்பட பத்துப் பதினைந்து நிமிடங்கள் ஆகும்” என்று ஒரு கண்டக்டர் கன்னடத்தில் கூறினார். தொண்டை வறண்டிருந்தது. சுற்று முற்றும் பார்த்து ஒரு பெட்டிக்கடையில் எலுமிச்சம் பழங்கள் அடுக்கி வைத்திருந்ததைக் கண்டு வறண்டிருந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு அங்கே சென்று ‘லெமன் ஸால்ட் சோடா’ சொன்னோம்.

கடைக்காரர் ‘பொய்ங்க்’ என்ற வினோத சத்தத்துடன் கோலி சோடாவை உடைத்து இரண்டு கண்ணாடி டம்ளர்களிலும், இரண்டு எவர்சில்வர் தம்ளர்களிலும் ஊற்றி எலுமிச்சை பிழிந்து, உப்பு சேர்த்து, கோணியில் மூடி வைத்திருந்த பனிக்கட்டிகளை உடைத்து தம்ளர்களில் போட்டு என்னவோ மாக்டெய்ல் தயாரிப்பது போன்ற பாவனையுடன் குலுக்கோ, குலுக்கென்று குலுக்கி நீட்டினார். ஆவலுடன் சீப்பினோம்.

சொர்க்கம் எங்கேயோ இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோமே, அது எங்கேயும் இல்லை, கங்காவதி பேருந்து நிலையப் பெட்டிக்கடை ‘லெமன் ஸால்ட் சோடா’வில்தான் இருக்கிறது என்று அப்போதுதான் புரிந்தது. நாய் போல் நாக்கை வெளியே நீட்டி ஹா, ஹா என்று தவித்துக் கொண்டிருந்த எங்களுக்கு அந்த எளிமையான பானம் அப்படித்தான் தோன்றியது.

இரண்டு வாய் கூட சீப்பியிருக்க மாட்டோம். கன்னட போர்டுடன் ஒரு பேருந்து புறப்பட்டது. எங்களிடம் 10, 15 நிமிடங்கள் ஆகும் என்று சொன்ன அதே கண்டக்டர் பேருந்தின் கடைசிப் படியில் நின்று ‘ஆனேகுந்தி, ஹோஸ்பேட்’ என்று குரல் கொடுத்தபடி டிரைவரிடம் ‘ரை, ரைய்ட்’ என்றார். எங்களைப் பார்த்து நக்கலாக ஒரு புன்னகை வேறு!

‘லெமன் ஸால்ட் சோடா’வை விட மனமில்லாமல் அந்தப் பேருந்தை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றோம். அடுத்த பேருந்து எப்போது வருமோ என்ற எண்ணத்துடன் காலி தம்ளரை கடைக்காரரிடம் நீட்டிய போது, அவர் வெளியே கை நீட்டிச் சுட்டிக்காட்டினார். அங்கே ஓர் ஆட்டோ நின்றிருந்தது.

“ஆனேகுந்தி, ஷேர் ஆட்டோ..” என்று கடைக்காரர் திருவாய் மலர்ந்து அபயம் அளித்தார். ‘அட.. இப்படி ஒரு வசதி இருக்கிறதா இங்கே?” என்று ஷேர் ஆட்டோவை நெருங்கி, ‘ஆனேகுந்தி?’ என்று விசாரித்து ஏறி அமர்ந்தோம்.

அரை மணி நேரப் பயணத்துக்குப் பிறகு ஷேர் ஆட்டோ ஆனேகுந்தியில் எங்களை இறக்கிவிட்டது. சரியான வெயில். ஆலம் விழுதுகளில் தொங்கிக் கொண்டிருந்த நான்கு வானரங்கள் ஊஞ்சலாடியபடி எங்களை நோக்கி வந்து தலைக்கு மேலே சென்றன.

‘ஊய்..’ என்று பயத்தில் அலறினோம். எங்களுடைய பயத்தைப் பார்த்து விட்டு அவை சிரித்த மாதிரி கூடத் தோன்றியது.

இரண்டு நாய்கள் தெருவோர குப்பை மேட்டில் உறங்கிக்கொண்டிருந்தன. (உண்ட மயக்கம்?) தெருவில் வேறு யாரும் இல்லை. நவபிருந்தாவனத்துக்குச் சென்று வந்தவர்களிடம் விசாரித்து, ‘வைபவா தங்கும் விடுதி, ராகவேந்திர மடம் எதிரில்’ என்று ஒரு முகவரியைப் பெற்றுக் கையில் வைத்திருந்தோம். சாலையில் சைக்கிளில் தலைப்பாகையுடன் வந்த உள்ளூர்க்காரர் ஒருவரை வழிமறித்து நிறுத்தினோம். எங்களுடைய முக லட்சணங்களைப் பார்த்து வழிப்பறிக் கொள்ளையர்கள் என்று நினைத்தாலும் நினைத்திருப்பார்.

அவரிடம் முகவரியைச் சொல்லி எங்கே இருக்கிறது என்று வினவினோம். ராகவேந்திர மடத்துக்குப் போகும் வழியை விசாரிக்கிறோம் என்று தெரிந்த பிறகுதான் அவருடைய அரண்ட முகத்தில் ஒளி பிறந்தது. வழிகாட்டினார். அவர் காட்டிய இடம் நாங்கள் நின்றிருந்த இடத்தில் இருந்து நூறடி தூரத்தில் இருந்தது. மடத்தை நெருங்கினோம். அதன் எதிரில்தான் வைபவா கெஸ்ட் ஹவுஸ் இருந்தது. ஏறக்குறைய ஒரு வீடு போல்தான் இருந்தது. ரிசப்ஷன், லிப்ஸ்டிக் பூச்சு உதடுகளுடன் இளம்பெண், பெல்பாய் எதுவுமே இல்லாத எளிமையான கட்டிடம்.

‘நான்கு பேரும் ஒன்றாகப் போய் விடுதி சொந்தக்காரரைக் கலவரப்படுத்த வேண்டாமே’ என்று ஓவியர் ஜெ.பி. யோசனை கூறினார். அவரே உள்ளே சென்று விசாரித்து விட்டு வருவதாகக் சொன்னார். அவருக்குத் தெலுங்கு தெரியும். தெலுங்கு மொழிக்கும், கன்னட மொழிக்கும் ஒரே எழுத்து என்பதால் தெலுங்கு மாதிரியே கன்னட மொழியும் இருக்கும் என்பது அவர் கருத்து. எங்களுக்கு இரண்டு மொழிகளும் தெரியாததால் அவர் கருத்தை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. விசாரித்து விட்டு வரட்டும் என்று காத்திருந்தோம்.

சில நிமிடங்களில் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரும்பி வந்தார். “அறை இல்லையாம் சார்..” என்றார்.

‘என்ன இது? சென்னையில் இருந்து ஃபோனில் தொடர்பு கொண்டபோது அறை இருக்கிறது என்று கூறினாரே. இப்போது இல்லை என்றால் எப்படி? இந்தக் கிராமத்தில் எங்கே தங்குவது? மரத்தடியில்தானா? ராகவேந்திரா, இது என்ன சோதனை?’ என்று எண்ணியபடி, நால்வருமே விடுதிக்குள் சென்றோம்.

யாரிடம் ஜெ.பி. விசாரித்திருந்தாரோ அவரையே அணுகினோம். எங்களைப் பார்த்துப் புன்னகை செய்தார். பெயரைச் சொன்னோம். சென்னை என்றோம். அறை இருக்கிறது என்று ஃபோனில் அவர் கூறியதை நினைவு படுத்தினோம்.

“யார் இல்லை என்றார்கள். அறை இருக்கிறதே..” என்றார் அவர். “பின்னே எங்கள் நண்பர் வந்து கேட்ட போது அறை இல்லையென்று சொல்லிவிட்டீர்களாமே..?”

“சார். அவர் உங்களை மாதிரி இங்கிலீஷில் பேசியிருக்கலாம். தெலுங்கில் பேசினார் போல. எனக்குத் தெலுங்கு அந்த அளவுக்குத் தெரியாது. கன்னடத்தில் பதில் சொன்னேன். எத்தனை பேர், நீங்கள் மட்டுமா என்று கேட்டதற்கு ‘ஆமாம்’ என்றாரே.. தனியாக வருபவர்களுக்கு எல்லாம் பொதுவாக ரூம் தருவதில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்து இங்கே வந்து துங்கபத்ராவில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். அப்படி இறந்து போகிறவர்கள் எங்கள் விடுதியில்தான் தங்கி இருந்தால் என்று தெரிந்தால் அவ்வளவுதான். போலீஸ்காரர்கள் நோண்டி நுங்கெடுத்து விடுவார்கள். இவருடைய முகம் வேறு வாட்டமாக இருந்ததா, எதற்கு வம்பு என்று அறை இல்லை என்று சொல்லி விட்டேன்..” என்றார் சர்வ சாதாரணமாக.

கன்னடம் தெரியாமல் சொதப்பிய ஜெ.பி.யைப் பார்த்தோம். அவரோ எங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். அறை கிடைத்தது.

“சார். நல்ல பசி..” என்றோம்.

“அடடா.. முன்கூட்டியே ‘இந்த நேரத்துக்கு வரப் போகிறேன்’ என்று சொல்லியிருந்தால் சாப்பாடு எடுத்து வைத்திருப்பேன். இப்போது சாப்பாடு இல்லை. பரவாயில்லை... ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. பக்கத்திலேயே ஒரு ஹோட்டல் இருக்கிறது .

போய்ச் சாப்பிட்டு வாருங்கள்.. மற்றதை அப்புறம் பேசிக் கொள்ளலாம்..” என்றார்.

அருகில் இருக்கும் ஹோட்டலை நோக்கி ஓடினோம். வெளிப்பார்வைக்கு ஹோட்டல் மாதிரியே தெரியவில்லை. யாராவது தடியை எடுத்துக் கொண்டு துரத்தி வரப் போகிறார்கள் என்ற ஐயத்துடனேயே உள்ளே நுழைந்தோம். சாம்பார் வாசனை! ஹையோ.. அது ஹோட்டல்தான்!

சாப்பாடு பரிமாறப்பட்டது. சௌ சௌ இனிப்புக் கூட்டு. உருளைக்கிழங்கு வெல்லம் இனிப்புக் காரக்கறி, வெண்டைக்காய் சர்க்கரை இனிப்பு சாம்பார், சுண்டைக்காய் இனிப்பு வற்றல் குழம்பு, இனிப்பு ரசம்- நல்ல வேளை அப்பளமும், ஊறுகாயும் தயிரும் இனிப்பாய் இல்லை. சாப்பிடத் தொடங்கினோம்.

சொர்க்கம் எங்கேயோ இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோமே, அது எங்கேயும் இல்லை, ஆனேகுந்தியில், ஒளிந்து நின்ற அந்த ஹோட்டல் சாப்பாட்டில்தான் இருக்கிறது என்று அப்போதுதான் எங்களுக்குப் புரிந்தது. பின்னே? சிறு குடலை பெருங்குடல் தின்று கொண்டிருக்கும் பசி நேரத்தில் வயிறார சாப்பாடு கிடைத்தால், அது கர்நாடக பாணியில் இனிப்பாக இருந்தாலும் சொர்க்கம்தானே?

எங்களது நவபிருந்தாவன யாத்திரைப் பயணத்தில் இந்த மாதிரியான சின்னச் சின்ன சொர்க்கங்களை நிறையவே சந்தித்தோம்.

வயிறு நிறைந்த திருப்தியுடன் விடுதிக்குத் திரும்பினோம். வைபவா விடுதியை நடத்தும் திரு.பரசுராம் எங்களை வரவேற்றார். “கொஞ்ச நேரம் தூங்குங்கள். மாலையில் ஆனேகுந்தியைச் சுற்றிப் பாருங்கள். இன்றைக்கு ஓய்வு எடுத்துக் கொண்டு, காலையில் நவபிருந்தாவனத்தை தரிசிக்கச் செல்லலாம்” என்றார்.

“சரி..” என்று மண்டையை ஆட்டி விட்டு அறைக்குச் செல்லத் தயாரானோம். “பொறுங்கள். நவ பிருந்தாவன தரிசனத்துக்கு வந்து விட்டீர்கள். ரொம்ப, ரொம்ப நல்ல விஷயம். ஆனால் நவபிருந்தாவனம் இந்த ஆனேகுந்திக்கு அருகில், துங்கபத்ரா நதிக்கு நடுவில், ஒரு பெரும் பாறைத் திட்டில் உண்டானது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?” என்றார்.

அப்படியே தரையில் சுவரோரமாய் சாய்ந்து அமர்ந்தோம்.

“இப்போது நவபிருந்தாவனங்கள் அமைந்திருக்கும் பாறைத் திட்டில்தான் பக்தப் பிரஹலாதர் யாகங்கள் செய்து, தவம் செய்திருக்கிறார்.." என்று ஓர் ஆன்மிக வெடிகுண்டை எடுத்த எடுப்பில் அவர், எங்கள் மீது வீசினார்!

(பயணம் தொடரும்)

ஹாரர் பட பிரியர்களுக்கு ‘பொட்டு’ நல்ல விருந்து!

நடிகர் பரத்

பவித்ரா

மிழ் சினிமாவில் 'பாய்ஸ்', ‘காதல்’, ‘வெய்யில்’, ‘போர் ஸ்டூடண்ட்ஸ்’ என மாறுபட்ட படங்களில், வித்தியாசமான பாத்திரங்களில் நடித்து, தொடர்ச்சியாக ஹிட்டடித்தவர் நடிகர் பரத். ‘எந்தவொரு பாத்திரத்திலும் கச்சிதமாக பொருந்தக்கூடியவர்’ என கோலிவுட்டில் பெயரெடுத்தவருக்கு, அடுத்தடுத்து அமைந்த படங்கள் ஏனோ சறுக்கலாகவே இருந்தது. “எங்கே போனார் பரத்?” என்று எல்லோரும் தேடிக்கொண்டிருந்த சூழலில், “வந்துட்டேன்னு சொல்லு..” என ‘பொட்டு’ படத்தின் ஸ்டில்களிலேயே அசரடித்தார். வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள இப்படத்தில், மூன்று வேடங்களில் மிரட்டியிருக்கிறார். அவர் படம் குறித்து பேசும்போது,

“என் சினிமா கேரியர்ல நான் இதுவரைக்கும், திகில் படங்களில் நடித்தது இல்லை. ‘பொட்டு’ படத்தின் கதையை இயக்குநர் வடிவுடையான் சொல்லும்போதே எனக்குப் பிடித்துவிட்டது. ஏன்னா, கதையில் என்னோட பாத்திரம் வித்தியாசமாக இருந்தது. படத்தில் மருத்துவக் கல்லூரியில் படிக்கிற மாணவனாக முதலில் வர்றேன். அதற்குப் பிறகு, அமானுஷ்யத்தால எனக்கு சில மாற்றங்கள் நடக்குது.

இதுவரை நான் நடித்த படங்களில் ஹீரோயிசம் கலந்த ஆக்ஷன்தான் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் பெண்மை கலந்த ஆக்ஷன் பாத்திரத்தில் நடிப்பது சவாலாக இருந்தது. அதுமட்டுமில்லாமல், வயதான வேடத்திலும் நடித்திருக்கேன். இப்படி மூன்று வெவ்வேறான பாத்திரங்கள், என்னுடைய நடிப்புக்கு தீனி போட்டிருக்கு. அதேபோல, படம் வித்தியாசமான அனுபவத்தையும் கொடுத்தது! படத்தில் எனக்கு ஜோடியா சிருஷ்டி டாங்கே நடித்திருக்காங்க. டைட்டில் ரோல்ல இனியா நல்லா பெர்பார்ம் பண்ணியிருக்காங்க. முக்கியமாக, நமீதாவை நாம எல்லாரும் ‘கிளாமர் டால்’லாகத்தான் பல படங்களில் பார்த்திருப்போம். ஆனா, இந்தப் படத்துல வித்தியாசமான ஒரு பரிமாணத்துல மிரட்டியிருக்காங்க!திகில் படம் எடுப்பதும், ஒரு கலைதான். ‘சவுகார்பேட்டை’ என்கிற ஹாரர் படத்தை ஏற்கனவே இயக்குநர் வடிவுடையான் இயக்கியிருக்காரு. அதனால, அமானுஷ்யம் கலந்த ஒரு படத்துக்கு என்ன வேண்டும்? வேண்டாம்கிறது? அவருக்கு தெளிவாகத் தெரியும். ஆக, அவருக்கு ‘பொட்டு’ படத்தை இயக்குவதும் சுலபமாக இருந்தது! ஷூட்டிங்கில் இருந்த ஒவ்வொரு நாளும் என்னால மறக்க முடியாது. இயக்குநர் தினம் தினம் ஒரு திகில் அனுபவத்தை எங்களுக்கு கொடுத்துட்டே இருப்பாரு. அதுமட்டுமில்லாம ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், தம்பி ராமையா போன்றவங்களோட எனக்கு காம்பினேஷன் சீன் நிறைய இருந்தது. அவங்ககிட்டே இருந்தும் நான் நிறைய கத்துக்கிட்டேன். பக்கா என்டர்டெய்ன்மெண்ட் கலந்த திகில் படம் ‘பொட்டு’. எல்லா வயதினரும், படத்தை விரும்பிப் பார்க்கும்படி இயக்கியிருக்காரு வடிவுடையான் சார். ஹாரர் பட பிரியர்களுக்கு பொட்டு நல்ல விருந்தாக அமையும்!” என்றார்.

இன்றைய தினசரி நாளிதழ்களில் தவறாமல் இடம்பிடிப்பது கருப்பை கட்டிகள் நோய் விளம்பரங்கள்’ தான். இந்த இதழில் இந்நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து, விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன்.

“போராட்டம் நிறைந்த வாழ்க்கையில், பிரச்னைக்கு தீர்வே காண்கிறேன் பேர்வழி என்று, வேரோடு கிள்ளி எறிவது என்பது மிகப்பெரிய முட்டாள்தனம். உடல் உறுப்பில் ஏதேனும் உபாதை ஏற்பட்டால் சரியான தீர்வு காணாமல், அவ்வுறுப்பை வெட்டி எறிவது என்பது இப்போது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இங்கே உடல் உறுப்பு என்று சொல்வதை விட உள்ளுறுப்பு என்று கூறுவதுதான் மிகவும் சரியாக இருக்கும்.

கைகளிலோ கால்களிலோ அல்லது முகத்திலோ பிரச்னை ஏதேனும், ஏற்பட்டால் நாம் அவற்றை அகற்ற முடியுமா? பின்னர் ஏன் உள்ளுறுப்பு பாதிக்கப் பட்டால் மட்டும் அவ்வுறுப்பை நீக்கலாம் என்றால் யோசிக்காமல் கூட நாம் ஏன் சம்மதிக்கிறோம்?. இதனைப் பற்றி என்றாவது நாம் தீவிரமாக சிந்தித்தது உண்டா?

கருப்பை கட்டிகள் வந்து விட்டது என்றாலே உடனே பெண்கள் பதட்டமடைந்து கருப்பை நீக்கம் செய்து கொள்கின்றனர். அது முற்றிலும் தவறான ஒன்று. பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் பொழுது, கருப்பையில் தோன்றும் திசுக்கள் முழுமையாக வெளியேற வேண்டும்.

ஆனால், சில நேரம் அவை முழுமையாக வெளியேறாமல் அங்கு தசைகளிலேயே ஒட்டிக் கொண்டு இருக்கும். அதுதான் கருப்பை கட்டி என்று நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இது தெரியாமல் கருப்பை கட்டி என்றாலே அது ஏதோ வளர்ச்சி என்று தவறாக புரிந்து கொண்டு கருப்பையை நீக்கவும் சம்மதிக்கின்றனர்.

கருப்பை நீக்கினால் ஏற்படும் விளைவுகள்!

உடலில் இயற்கையாக எலும்புச் சத்து சேரும் திறன் குறைகிறது.

தைராய்டு சுரப்பி செயல்பாடு நோய் ஏற்படுகிறது.

உடல் பாரம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகிறது.

கை, கால்கள் சுருங்குதல், வயிறு உப்பிக் கொண்டே இருத்தல்.

மனஉளைச்சலுக்கு உள்ளாக நேரிடுதல்.

அறுவை சிகிச்சை இல்லாமல், கருப்பை கட்டிகளை எவ்வாறு நாம் குணப்படுத்த முடியும்!

கருப்பை கட்டிகள்

ஆயுர்வேதம் மற்றும் சித்த முறைகளில் முதலில் கருப்பையை பலப்படுத்த ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும். கஷாயமோ அல்லது மருந்தூட்டப்பட்ட நெய்யாகவோ இருக்கலாம். இதனை தொடர்ச்சியாக உட்கொண்டால் நாளடைவில், கருப்பை கட்டிகள் படிப்படியாக குறைவதை பார்க்கலாம்.

அதோடு மட்டுமில்லாமல் சில உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொண்டால் கருப்பைக்கட்டி நன்றாக கறைந்து விடும்.

முருங்கைக்கீரை

முளைக்கீரை

உளுத்தங்களி

மேற்கூறிய முறைகளினால் கருப்பை கட்டிகள் அகன்றாலும், அது திரும்ப வராமல் இருக்குமா ? என்று கேட்பவர்களுக்கு முறையான உடற் பயிற்சி

முறையான மனப்பயிற்சி தேவைப்படும் ஆயுர்வேத மருந்துகள்

உணவுக் கட்டுப்பாடு

இவற்றை சரியாக பின்பற்றினாலே கருப்பை கட்டியிலிருந்து எளிதாக விடுபடலாம். எனவே கருப்பை கட்டி என்றாலே, கருப்பையையே அகற்றிடலாம் என்கிற எண்ணத்தை தூக்கி எறியுங்கள். பதற்றம் இல்லாமல் நலமான வாழ்க்கையை வாழுங்கள்!

பவித்ரா

பேயைக் கண்டு பயமா?

நடிகை சிருஷ்டி டாங்கே

‘பொட்டு’ படத்தில், நாயகன் பரத்தை துரத்தி துரத்தி காதலிக்கும், துறுதுறு பெண்ணாக நடித்திருக்கிறார் நாயகி சிருஷ்டி டாங்கே. எதைக் கேட்டாலும் வெள்ளந்தியாக சிரித்தபடியே பதிலளிக்கிறார். அப்போது அவரது கன்னத்தில் விழும் குழியில் விழுந்த செத்துப் போகலாம் போல இருக்கிறது. ‘கன்னக்குழி அழகி’ என பட்டம் கொடுத்து, கோலிவுட் கௌரவப்படுத்தியுள்ளது சரிதான் போல!. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தவரை ஓரங்கட்டி பேசினோம்.

“இயக்குநர் வடிவுடையான் என்கிட்டே ஒன் லைன் மட்டும்தான் சொன்னாரு. ஆனால் செட்டுக்கு வந்த உடனே நிறைய மாற்றங்கள் செஞ்சாரு. உதாரணத்துக்கு சொல்லணும்னா, படத்தில் ‘மலைமேல சாமியாம்..’ ன்னு ஒரு பாடல் இருக்கு. வெறும் பூஜை செய்கிற மாதிரிதான் முதலில் முடிவானது. நான் அந்தக் காட்சிக்கு ஏற்ற மாதிரி காஸ்ட்யூம் போட்டுட்டு வந்ததும், டைரக்டருக்கு என்ன தோண்றியதுன்னு தெரியல, அம்மன் கோயில்ல சாமியாடுற மாதிரி என்னை ஆட வச்சிட்டாரு. நான் ஆடிப்போயிட்டேன்!

திடீர்னு உடம்புல ரோப்ஸ் எல்லாம் கட்டி விட்டுட்டு சண்டை காட்சியில நடிக்க வைத்தாரு. இப்படி பல மாற்றங்கள் படப்பிடிப்பின்போது செய்வாரு. அவர் ஒரு கடினமான உழைப்பாளி. எந்நேரமும் சினிமாவைப் பற்றித்தான் சிந்திப்பார். சில நேரங்களில் நாம கூட சோர்ந்துடுவோம், ஆனால், அவர் மட்டும் ஸ்பாட்டில் சுறுசுறுப்பாகவே இருப்பாரு. செட்டில் மைக் தேவைப்படாத ஆள் என்றால் அது டைரக்டர் தான்!

படத்துல என்னோட பாத்திரத்துக்கு பேய் என்றாலே ரொம்ப பயம். ஒரு மருத்துவ மாணவியாக பிணவறைக்கு போகக் கூட பயப்படற ஆளு. என்னோட பாத்திரம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன். இந்தப் படத்துல எனக்கு போட்டியே நடிகர் பரத் தான். பெண் வேடத்துல அவரோட அழகு, நம்ம எல்லோரையும் கட்டிப்போட்டுடும். கண் கொட்டாம பரத் என்கிற அழகியை பார்த்துட்டே இருக்கலாம் போல இருந்தது! (சொல்லிவிட்டு லகலகவென சிரிக்கிறார்)

மன அழுத்தம் நிறைந்த நம்ம வாழ்க்கையில, மாற்றம் கொடுக்கிற மாதிரியான படம்தான் ‘பொட்டு’. இரண்டு மணிநேரம், உங்கள கவலை எல்லாத்தையும் மறக்கச் செய்யும் திகில், காமெடி, காதல் நிறைந்த படம். தியேட்டருக்கு வந்து பாருங்க!” என்றவரிடம், அப்படீன்னா உங்களுக்கு பேயைக் கண்டால் பயமில்லையா? என கொக்கிப் போட்டால், “அய்யோ.. என்னோட ரியல் கேரக்டரே அதுதான்..” என விழிகளை உருட்டி மிரள்கிறார்!

பவித்ரா

கிராபிக்ஸால் ரசிகர்களைமிரட்டும் பொட்டு!

இசையமைப்பாளர் அம்ரீஷ்

மிழ் சினிமாவில் இப்போது இசையைமப்பாளர்களுக்கான காலம். அதிரடியாக இசையிலும் நடிப்பிலும் கலந்து கட்டி விருந்து படைக்கின்றது இளைய தலைமுறை. அந்த வரிசையில் நிற்பவர் அம்ரீஷ். சீனியர் நடிகை ஜெயசித்ராவின் புதல்வர். மொட்ட சிவா கெட்ட சிவா வில் தன்னுடைய வித்தையை காட்டியவர், தொடர்ச்சியாக பொட்டு, கர்ஜனை, யங் மங் ஜங், பாஸ்கர் ஒரு ராஸ்கல் என டாப் படங்களின் ரேஸில் முன்னணியில் நிற்கிறார். ஹாரர் படமான ‘பொட்டு’வில் பணியாற்றியது பற்றி மனம் திறக்கிறார்.

“ ‘மொட்ட சிவா கேட்ட சிவா’ படத்துக்கு பிறகு நான் இசையமைக்கும் படம் ‘பொட்டு’. படத்தின் கதையை விறுவிறுப்பாக எழுதியிருக்காரு இயக்குநர் வடிவுடையான். படத்தில் அமானுஷ்ய காட்சிகள் அதிகமாக இருக்கிறதால, இசையமைக்கிறது எனக்கு சவாலாக இருந்தது. இயக்குநர் கதையை என்கிட்டே சொல்லும்போது “தலை நாலா பிரியும், அஞ்சா பிரியும்”னு சொன்னாரு. கேட்கும்போதே கொஞ்சம் பயங்கரமாகத்தான் இருந்தது.

படத்துக்கு பின்னணி இசை அமைக்கும்போது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அதாவது, ப்ளூ மேட் பேக்ரவுண்டுல ஒண்ணும் பெருசா தெரியல. ஆனா, அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி, வீ.எப்.எக்ஸ் பண்ணியதும் படம் வேற லெவலுக்கு போயிடுச்சு. ஹாரர் படத்துக்கு கிராபிக்ஸ் எவ்வளவு முக்கியம், குறைந்த பட்ஜெட்டில் எப்படி சிறப்பாக செய்ய முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். ‘பொட்டு’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை மிரட்டும்!

படத்துக்கு பின்னணி இசை அமைக்கும்போது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. அதாவது, ப்ளூ மேட் பேக்ரவுண்டுல ஒண்ணும் பெருசா தெரியல. ஆனா, அஜாக்ஸ் மீடியா டெக்னாலஜி, வீ.எப்.எக்ஸ் பண்ணியதும் படம் வேற லெவலுக்கு போயிடுச்சு. ஹாரர் படத்துக்கு கிராபிக்ஸ் எவ்வளவு முக்கியம், குறைந்த பட்ஜெட்டில் எப்படி சிறப்பாக செய்ய முடியும்னு தெரிஞ்சுக்கிட்டேன். ‘பொட்டு’ படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் ரசிகர்களை மிரட்டும்!

‘பொட்டு’ படத்தின் பாடல்களில் “அடி போடி சண்டாளி..”’ பாடல், ‘ஐ ட்யூன்ஸ்’ல இரண்டாவது இடம் பெற்றுள்ளது. அதற்கு நான், ரசிகர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். இந்த தீபாவளியில் ‘பொட்டு’ படத்தின் மாறுபட்ட அனுபவத்துக்கு தயாராகுங்கள்!” என்று கூறி, மெல்லியதாக நம்மை மீட்டுகிறார் அம்ரீஷ்!