@மனம்

ஆசிரியர்

ந்தியா தனது 71-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிற தருணம் இது. அறிவுசார் சமூகமாக இன்று வளர்ந்து, நிற்கிறோம். பொருளாதாரத்தில், தொழில்நுட்பங்களில் அசரடிக்கிற முன்னேற்றத்தை நாம் அடைந்துள்ளோம். ஆங்கிலேயர்களின் பிடியில் இருந்த பழமையின் சின்னமாக உருவகப்படுத்தப்பட்ட இந்தியாவின் முகம் இப்போது டிஜிட்டலாக மாறியிருக்கிறது. டேட்டா இன்றி வாழ இயலாது என்கிற நிலைமைக்கு நம்முடைய வாழ்க்கை உருப்பெற்றுவிட்டது!

ஒரு நாளில் அதிகமாகக் குடும்பத்தோடு இருப்பதை விட, சோஷியல் மீடியாக்களில் இணைந்தே வாழ்வின் பல பிரச்னைகளை அலசி, ஆராய்கிறோம். அற்ப விஷயங்களுக்கு கோபப்படுகிறோம், சண்டையிட்டு பிரிகிறோம். பேச வேண்டிய பிரச்னைகளுக்கு மௌனம் காக்கிறோம். உணர்ச்சியின் வேகத்தில் எடுக்கப்படுகிற எந்த முடிவும் ஆபத்தானவை தான். அத்தகைய முடிவுகளை நாள்தோறும் எடுக்கிறோம். எதிர்காலம் குறித்த அச்சத்தை ஒரு அங்கியைப் போல அணிந்துகொண்டு அலைகிறோம். அவை தரும் மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டு திணறுகிறோம். இவையெல்லாம் நவீன வாழ்க்கை நமக்கு அளித்துள்ள வெகுமானங்கள்!

உண்மையில், மனித வாழ்வு இதற்காகத்தான் படைக்கப்பட்டதா? நாம்வளர்ச்சியின் பாதையில் தான் இருக்கிறோம். அதில் சந்தேகமே இல்லை; ஆனால், மானுட மாண்பை இழந்துவிட்டோமே? அது தெரியுமா நமக்கு? கூடி வாழ்தல் எனும் போக்கு அரிதாகிக்கொண்டே வருகிறதே. அதை அறிந்தோமா? கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக் குடும்பங்களான போதும் கூட தனித்திருக்கிறோமே? நம் கலாச்சாரம் கண்டு, தம்மை மாற்றிக்கொண்டனர் அயல் தேசத்தார். ஆனால், அதை மறந்துவிட்டு அவர்களாக மாறிவருகிறோமே!

மானுடத்தின் சுதந்திரம் என்பது வாழ்வின் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவது தான்; சக மனிதனின் மீது அன்பு செலுத்தி அரவணைத்து செல்வது தான். தனித்திருத்தல் என்பது வேறு, தனித்து விடப்படுவது அல்ல. புறக்கணிப்பு எனும் கொடிய ஆயுதத்தையே முதலில் நாம் அழித்தொழிக்க வேண்டும். இனிவரும் தலைமுறைக்காவது மானுடத்தின் மாண்புகளை சொல்லி, வளர்ப்போம். அப்போதுதான் ஒளிரும், நம் கனவு காணும் இந்தியா. அதை இப்போதே செய்வோமா?

மாறி வருகிறதா மானுட மாண்புகள்!

கிராபியென் ப்ளாக்

ரு போலீஸ் அதிகாரி தொடர் கொலைகளை தேடிப் போறாரு. அப்படி போகும்போது, அவருக்கு கிடைக்கிற தகவல்களும் புரிதல்களும் அதிரடியாகவும் ஆச்சர்யமூட்டும்படியாகவும் இருக்கு. அதுதான் மாயவன் படத்தோட ஒன்லைன். ஒரு வெற்றிகரமான சினிமாவுக்கு உண்டான எல்லா அம்சங்களும் இந்தப் படத்துல இருக்கு. அதையெல்லாம் டீடெய்லா சொன்னா படத்தோட கதை வெளியே தெரிஞ்சுடும். மிஸ்ட்ரி த்ரில்லர் வகை தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்லை; ஆனா, மாயவன் படம் நம்முடைய வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான, யதார்த்தப் படமாக இருக்கும்!” எளிமையாக, எந்த அலங்கார வார்த்தைகளின்றி பேசுகிறார் இயக்குநர் சி.வி. குமார். தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த தயாரிப்பாளர்களில் ஒருவர். மனம் இதழுக்கு அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது!படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறதே?

“படத்தோட ஹீரோ சந்தீப், ‘மாநகரம்’ படத்திலேயே திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதேபோல, இந்தப் படத்திலேயும் அவருடைய நடிப்பு பேசப்படும். ஹீரோயின் லாவண்யா திரிபாதியை ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட்னுதான் சொல்லணும். ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துல நடித்திருக்கும் ஆர்ட்டிஸ்ட் எல்லோருமே தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை நிறைவா செஞ்சிருக்காங்க. இந்த கேரக்டரில் இவங்க இல்லாம வேறொருத்தரை நடிக்க வைத்திருக்கலாமோன்னு யோசிக்கறதுக்கான இடத்தை யாரும் தரல. நான் எடுத்த முடிவு சரிதான் என்பது போல அவர்களுடைய பங்களிப்பு இருந்துச்சு. அதிலும் டேனியல் பாலாஜி ரொம்ப சிறப்பாகவே நடித்துக் கொடுத்திருக்காரு. ஸ்கீரினில் அவர் வருகிற காட்சியெல்லாம் அவ்வளவு அருமையாக வந்திருக்கு!”.


இந்திய சினிமாவின் மகுடம் ஜாக்கி ஷெராப். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பு எப்படி?

“இந்தப் படத்துல வெவ்வேறு வயது உடைய வெவ்வேறு வில்லன்களை நீங்க பார்க்கலாம். சுமார் ஐந்து வில்லன்களில் இருந்து ஜாக்கி ஷெராப் தனித்து தெரிவார். அவர் நடிக்கிற எல்லா காட்சிகளுமே நல்லா இருக்கும். எதை எடுத்துக்கிறது, எதை தவிர்க்கிறது என்கிற குழப்பம் வர்ற அளவுக்கு நடிப்பில் மிரட்டிவிடுவார். அவர் பாத்திரத்தை புரிந்துகொண்ட விதமும் அதை வெளிப்படுத்திய விதமும் எங்கள் படக்குழுவையே சந்தோஷத்தில் ஆழ்த்தியது. மக்கள் மனதில் அவருடைய பாத்திரம் நின்று பேசும்!”ஜிப்ரான் இசையமைப்பு படத்துக்கு பலம் சேர்க்குமா?

“ஒரு படத்துக்கு ஸ்கிரிப்ட் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் படத்தோட இசையும் தான். அதை சரியாக உள்வாங்கிட்டு செய்திருக்கிறார் ஜிப்ரான். இந்தப் படம் ஒரு மிஸ்ட்ரி த்ரில்லர். நாங்க ஐம்பது சதவீதம் கொடுத்தா, அவர் அதை நூறு சதவீதமா மாற்றிக் கொடுப்பாரு. மாயவனுக்கு அவருடைய இசையமைப்பு பெரிய பலம் தான்!”

உங்களுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களில் படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால் இடம்பிடித்து விடுகிறாரே?


“எடிட்டர் தான் படத்தோட பர்ஸ்ட் ஆடியன்ஸ். கட் பண்ணி கட் பண்ணி நாம எடுக்கிற காட்சிகளை ஒரு படமாக ஓட்டிப் பார்க்கிறது அவர்தான். அதனால எடிட்டரும் இயக்குநரும் நல்ல ஜோடியாக இருக்கணும். அப்படி இல்லன்னா, நல்ல படங்கள் கூட ஆடியன்சிடம் எடுபடாமல் போய்டும்.

ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான படத்தொகுப்பாளர் லியோ ஜான்பால். அவருடைய வேலையில் ரொம்ப தீவிரமாகவும், நேர்மையாகவும் இருப்பார். இந்தப் படம் ஆரம்பிக்கும்போது, “என்னுடைய எடிட்டிங் அறைக்குள் நீங்க ஒரு இயக்குநராகத்தான் வரணும். தயாரிப்பாளராக வரக் கூடாது. அப்படி வந்தீங்கன்னா நமக்குள்ள இருக்குற ரிலேஷன்ஷிப் கெட்டுப்போயிடும்”னு கண்டிப்பாக சொல்லிவிட்டார். என் தயாரிப்பில் உருவாகுற படங்களில் எல்லோருமே தனித்துவமாக வேலைப் பார்க்க அனுமதிப்பேன். அதுல லியோவுக்கும் இடமுண்டு. அந்தவகையில் ‘மாயவன்’ படத்துக்கு அவரும் ஒரு பில்லர்தான்னு சொல்லுவேன்!”

இயக்குநர் நலன் குமாரசாமி திரைக்கதை எழுதியுள்ளாரே?


“உண்மையைச் சொல்லணும்னா, ‘மாயவன்’ படத்துக்கான முழு திரைக்கதையை நானும் என்னுடைய நண்பரும் சேர்ந்து உருவாக்கி, ஒரு நாள் படப்பிடிப்பையும் நடத்திவிட்டோம்.

ஆனால், இந்தப் படம் ஜெயிக்குமா? நாம பண்ணியிக்கிற கதை சரிதானா? என்கிற சந்தேகம் எனக்குள்ளே வந்துடுச்சு. அப்படியான ஒரு சூழலில் நலன் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவரிடம் பேசினேன். “நானே முழு திரைக்கதையையும் எழுதறேன். எப்போதும் ஒரு ரைட்டரா இருக்கத்தான் ஆசைப்படறேன். ஒரு படம் இயக்கினா, மூன்று படங்களுக்காவது திரைக்கதை எழுதணும்னு நினைக்கிறேன்”னு சொல்லி, இந்தப் படத்துக்குள்ளே வந்துட்டார். ஏறக்குறைய இருவரும் ஒரு வருடம் சேர்ந்து இந்தப் படத்தினுடைய கதையை மூன்று முறைக்கு மேலாக திருத்தி, எழுதி, இறுதி செய்தோம். எனக்கு பெரிய பக்க பலமாக நலன் எப்போதும் இருப்பார்!”

இயக்குநர் அவதாரம் ஏன்?

“இந்தக் கேள்விக்கான பதிலே மனிதன் தான். அடுத்தக் கட்ட வளர்ச்சின்னு ஒண்ணு இல்லாம போயிருந்தா, நாம எல்லோரும் இன்னும் குரங்குகளாகவே இருந்திருப்போம். தேடல் உள்ள எவரும் முன்னோக்கி போய்க்கிட்டேதான் இருப்பாங்க. அப்படித்தான் நானும். எந்த இடத்திலேயும் தேங்கிவிடக் கூடாதுன்னு நினைப்பேன்!”

படப்பிடிப்பின்போது மறக்க முடியாத சம்பவங்கள் நடந்திருக்குமே?


“ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாளாகத்தான் இருந்துச்சு. படத்தின் கதையமைப்புப்படி கடலுக்குள்ளே ஒரு காட்சியை எடுத்தோம். அப்போ மீன் பிடி தடைக்காலம். நடுக் கடலில் போய் ஷுட் பண்ணிக்கிட்டு இருக்கும்பேது, கடற்படையினர் சுத்தி வளைச்சுட்டாங்க.
துப்பாக்கி முனையில் வைத்து விசாரணை பண்ணினாங்க. பிறகு, அனுமதி எல்லாம் வாங்கிட்டு வந்துதான் படப்பிடிப்பு நடக்குதுன்னு தெரிந்ததும், கெடுபிடியை தளர்த்தி, ஆதரவாக நடந்துக்கிட்டாங்க. “மீன்பிடி தடைகாலத்தில் மற்றொரு படகு உள்ளே வந்தா, அனேகமாக அது கடத்தல்காரர்களாகவோ, தீவிரவாதியாகவோ இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் தான் வந்தோம். ஏதாவது பிரச்னைனா உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்க. உதவிக்கு வர்றோம்”னு சொல்லிட்டுப் போனாங்க. எப்போதுமே மறக்க முடியாத அனுபவமாக அது ‘மாயவன்’ படத்தோட சேர்ந்து என்னோட இருக்கும்!” திகில் அனுபவத்தை த்ரில்லாக முடித்தார் சி.வி.குமார். ‘மாயவன்’ நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என உறுதியாக நம்பலாம்!லக்கணத்தைத் தொடராக எழுத முடியுமா, அப்படி எழுதினால் யார் விரும்பிப் படிப்பார்கள், முதலில் நான் இலக்கணக் கூறுகளை விரித்து எழுதத்தக்க ஆற்றல் கைவரப் பெற்றிருக்கிறேனா, அப்படியும் எழுதினால் பத்துக் கட்டுரைகளுக்கு மேல் தொடர்ந்தியங்க முடியுமா, எழுதுகின்றவை எளிமையாய் விளங்கிக்கொள்ளத் தக்கனவாய் இருக்குமா… என்று பலப்பலவாறான கேள்விகள் இத்தொடரை எழுதத் தொடங்கும்போது எழுந்தன. மனம் இதழாசிரியர் ஐஸ்வர்யா என்னை முகநூல் உள்ளஞ்சலில் தொடர்பு கொண்டபோது ஏதோ சிறப்பிதழுக்காக அணுகுகிறார்கள் போலும் என்றே எண்ணினேன். இதுவரை என்னை எண்ணற்ற ஊடக நண்பர்கள் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அதைச் செய்துவிடலாம், இதைச் செய்துவிடலாம் என்று கனவுகளையும் கற்பனைகளையும் தொடர்ந்து விதைத்திருக்கிறார்கள். எல்லாரும் தொடர்ந்து இயங்கக் கூடியவர்கள்தாம். பல்வேறு பேரூடங்களில் நற்பொறுப்புகளில் இருப்பவர்களும் கூட. ஆனால், அப்படிக் கேட்டுக்கொண்டவர்களின் சொற்கள் மறுநாளே மறக்கப்பட்டன.

முதன்மைத் தொலைக்காட்சியொன்றில் தமிழ் இலக்கணப் பயிற்றுவிப்பு சார்ந்து அரைமணி நேரத் தொடர் ஒன்றை வழங்கும்படி தொடக்கநிலைப் பேச்சுகள் நடந்தன. நானும் தமிழ்மொழி அறிவை முடிந்தவரைக்கும் பரப்பிவிடலாம் என்ற கனவில் மிதந்தேன். ஆனால், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை… ஆளையே காணவில்லை. இப்படியே போனால் “கொட்டையை நோக்கி ஊர்வலம்” என்று சுவரொட்டி அடித்து ஒட்டாமல் என்ன செய்வார்கள் ?

எந்தத் தொலைக்காட்சியாகட்டும் இதழாகட்டும்… தவறாமல் சோதிட நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள்.

இன்று நாள் எப்படி இருக்கும் என்று குத்து மதிப்பாக அடித்து வீசுகிறார்கள். ஒரு காலப்போக்கு எப்படியிருக்கும் என்பதில்கூட நிலையாமையின் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும் கணக்கு இருக்கிறது. ஒரு நாள் எப்படி இருக்கும் என்பதை யார் விளக்கிவிட முடியும் ? ஆனால், அத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து தயாரிக்கப்படுகின்றன. ஒரு சோதிடப் பண்டிதர் இவற்றைத் தொடர்ந்து விளக்குகிறார்.

நான் தமிழகமெங்கும் பல்வேறு ஊர்ப்புறங்களில் திரிந்திருக்கிறேன். நாட்டுப்புறப் பேருந்து நிறுத்தங்களில் உள்ள தேநீர்ச் சிறுகடையில் அமர்ந்து காத்திருந்திருக்கிறேன். அங்கே அவ்வூரார் யாரேனும் இருவர் அமர்ந்து சோதிடக்கூறுகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பத்தில் ஒரு பாவியேனும் அமர்ந்தால்தான் சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்கிறார்கள்.


ஏழரைச் சனி குறித்த அறிவும் தீமை தவிர்ப்பு முறைகளும் நம்மவர்களுக்குத் தண்ணீர் பட்டபாடு. ஆனால், நம்மவர்களுக்குத் தாய்மொழியைப் பிழையில்லாமல் எழுதத் தெரியவில்லை. நீ எதைப் பயன்படுத்துகிறாயோ, எது உன் உணர்வுகளின் ஒரே வெளிப்பாட்டு மொழியோ, எது உன் பன்னெடுங்காலப் பரம்பரைச் சொத்தோ… அதைக் குறித்த சிற்றறிவுகூட இருப்பதில்லை. இதையெல்லாம் எண்ணி மனம் வெதும்பித்தான் என் இலக்கிய அங்கியைக் கழற்றி ஓரத்தில் வைத்துவிட்டு இலக்கணக்காரனாக மாறினேன். அம்முயற்சியில் என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கத் தயாராக இருந்தேன். அதற்கு எனக்கு அருமையான வாய்ப்பைக் கொடுத்தது மனம் இதழ்தான்.

இணையத்தில் வெளியாகும் இதழை யார் படிப்பார்கள், எத்தனை படிப்பாளிகளைப் போய்ச்சேரும் என்கின்ற தொடக்க நிலைத் தயக்கங்கள் எல்லாம் முதற்சில இதழ்களிலேயே காணாமல் போயின. என்னைத் தொடர்புகொண்ட மனம் ஆசிரியர் ஐஸ்வர்யாவும் உதவி ஆசிரியர் கிராபியன் பிளாக்கும் இறுதிவரை வியக்கத்தக்க ஒத்துழைப்பை நல்கினார்கள்.

இவர்களைப் போன்ற இதழாசிரியர்கள் வாய்க்கப்பெற்றால் மலையையும் தூக்கிச் சுமந்துவிடலாம். பல நேரங்களில் பயணங்களில் இருந்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் கைப்பேசியிலோ வரைபட்டிகையிலோ (டேப்) நான் எழுத வேண்டிய கட்டுரைகளை எழுதி அனுப்பியிருக்கிறேன். ஒரு கட்டுரைக்காக நான்கைந்து நாள்கள் ஆராய்ந்து தரவுகளைத் திரட்டி எளிமைப்படுத்தி எழுதியெழுதிப் பார்த்துத் தொடர்ந்து பாடுபட்டிருக்கிறேன்.
இவ்வாறெல்லாம் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் தமிழ் இலக்கண அடிப்படைகளின் பல்வேறு நுட்பங்களைத் தெற்றென விளக்கி அமைந்தன. இன்று வெகுமக்கள் இதழில் இதுபோன்ற ஒரு தொடரை எழுதுவதற்கு எனக்கு வாய்க்குமா என்பது தெரியவில்லை. ஆனால், மனம் இதழ் அதைச் சாதித்தது. இதை எழுதத் தொடங்கும்போது எனக்குள் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டேன். தமிழ் இலக்கணத்தின் ஒரு பெயர்ச்சொல்லை விளக்கியுணர்த்தும் ஒரு கட்டுரை இருக்கிறதா என்று எங்கு வேண்டுமானாலும் தேடிப் பாருங்கள். இல்லவே இல்லை. எடுத்துக்காட்டாக குற்றியலுகரம் என்பதை விளக்கி ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்க வேண்டும். எங்கேனும் உள்ளதா ? இல்லை இல்லை. ஏன் ? உரைநடையில் பெரிதாகப் பாய்கின்ற இக்காலத்தில் ஏன் குற்றியலுகரத்தைப் பற்றி ஒரு கட்டுரை இல்லை ? புனைவின் வழியே அல்லது நிகழ்காலக் கட்டுரைகள் என்ற பெயரில் வேண்டாத குப்பைகள் சேர்ந்து போன அளவுக்கு இலக்கணத் தன்மைகளை விளக்கி எழுதி ஒரு கட்டுரை எழுதப்படவே இல்லை. அந்த வசை ‘அழகு தமிழ் பழகு’ என்னும் இத்தொடரால் கழிந்தது.


அந்த வெற்றிடத்தை நிரப்பவே இங்கே என் கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். இன்று உயிரளபெடை என்றால் என்ன என்பது தெரியும். ஐகாரக் குறுக்கம் என்றால் என்ன என்பது தெரியும். முதலெழுத்து சார்பெழுத்து தெரியும். ஒவ்வொன்றைப் பற்றியும் விரிவாக விளக்கமாக முப்பத்திரண்டு கட்டுரைகள் வழியாக எழுதிவிட்டேன். இவ்வரிசையில் நான் ஆயிரம் கட்டுரைகள் எழுதுதற்குத் திட்டமிட்டிருந்தேன். அதில் முதல் முப்பத்திரண்டை இங்கே நிகழ்த்தினேன். எனக்கே நம்பிக்கை பெருகியிருக்கிறது. என்மீது பெருமித உணர்ச்சி கொள்கிறேன். நல்ல இதழாளர்களை நான் கண்டடைந்து நண்பர்களாகப் பெற்றுவிட்டேன். இனி இது எப்போதும் தொடரும்.

இணையத்தில் இதழ் நடத்துவது என்பது பொருட்செலவு பிடிக்கும் செயல். அதை விளங்கிக்கொள்கிறேன். இவ்விதழோடு மனம் இதழ் அடுத்தக் கட்டத்துக்கு நகர்வதாக அறிந்தேன். அதே நேரத்தில் காணொளி சார்ந்து இவ்விதழின் செயல்கள் தொடரும் என்பது ஆறுதல். இவ்வழியே காணொளித் தொடர்களாக தமிழ் இலக்கணம் கற்பித்தலை நாங்கள் தொடர்வதற்கு எண்ணுகின்றோம். வெறும் கட்டுரைகளாக இல்லாமல் தமிழ் இலக்கணத்தைக் கரும்பலகையில் எழுதிக் கற்பிக்கும் என்னை நீங்கள் அக்காணொளிகளில் காணலாம்.

அது எல்லாவற்றையும் பன்மடங்கு எளிமையாக்கிவிடும். நம் நோக்கம் செம்மையாய் நிறைவேறும். தமிழ் கற்றலில் அக்காணொளிகள் மொழிமக்களுக்கு முதல்வேட்டலாக மாறும். அவ்வுறுதியை என்னால் மண்ணில் அடித்துத் தரமுடியும். நல்லது நண்பர்களே… மீண்டும் ஒரு நற்றொடர் வழியாகச் சந்திப்போம். வாழ்க தமிழ் !


மூக வாழ்வில் ஒவ்வொருவரும் வெவ்வேறு சூழல்களில் மாறுபட்ட பல பணிகளை பார்க்க வேண்டியிருக்கிறது. நம் பணிக்கு ஏற்ப அமர்ந்தோ, நின்றுகொண்டோ அல்லது நடந்துகொண்டே பார்க்கும் பணிகளே ஏராளம். இதில் அதிக நேரம் நிற்கும் பணியாளருக்கு மட்டுமில்லை. நமது இல்லங்களில் கிச்சனில் நின்றுகொண்டு இருக்கும் பெண்களையும் தாக்கும் நோய் ‘வெரிகோஸ் வெயின்ஸ்’. இந்நோயின் அறிகுறிகள் மற்றும் அதனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன்.

வெரிகோஸ் வெயின்ஸ் என்பது நரம்பு முடிச்சு நோய். மனித உடலில், இரண்டு வகையான இரத்தக் குழாய் உள்ளது. நல்ல இரத்தத்தை எடுத்துச் செல்வதை ஆர்டெரிஸ் என்றும், உடலிலுள்ள எல்லா பாகங்களிலும் இருக்கக் கூடிய கெட்ட இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லக்கூடியது வெயின்ஸ் என்றும் கூறுவர் .


கால் மூட்டுக்கு பின்புறம் உள்ள நரம்பு மண்டலமானது, சற்று வலுவிழந்தால், அந்தப் பகுதியில், பின்னங்காலில் உள்ள நரம்புகள் பச்சை கோடாக வெளிப்படையாக தெரிய ஆரம்பிக்கும். இதனையே ‘வெரிகோஸ் வெயின்’ என்று கூறுகிறோம். நரம்பு மண்டலம் தொய்வடைந்ததால், வால்வின் வழியே செல்லக் கூடிய கெட்ட இரத்தம் தடை படும். இதனால், இரத்தம் கட்டியாக உறைந்து மாரடைப்பு வரக் கூடிய சத்தியம் அதிகம். எனவே, கால்களில் ஏற்படக்கூடிய சிறிய பிரச்சினை தானே என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. இதற்கு தீர்வுதான் என்ன? என்று கேட்பவர்களுக்கு, ஆயுர்வேதத்தில் சில எளிய தீர்வுகளை நாங்கள் பரிந்துரைக்க முடியும்.முதலில் வெரிகோஸ் வெயின் நோயாளிகளை நாங்கள் ஐந்து நிலைகளில் பிரிக்கிறோம்.

கால்தொடை பகுதிகளில், மெல்லிய வெளிர்பச்சைக் கோடு போலவோ அல்லது சிலந்தி வலை பின்னல் போலவோ நரம்புகள் காணப்படும். இந்நிலையில் அதிகமாக வலியோ எரிச்சலோ ஏற்பட வாய்ப்பு இல்லை இது முதல் நிலை ஆகும்.

இரண்டாவது நிலையில், வெளிர் பச்சை நிறமாக இருந்த நரம்பு மண்டலம், அடர் பச்சையாகவோ அல்லது கரும் பச்சையாகவோ நிறம் மாறும். இப்பொழுது, அந்நோயாளிகளுக்கு சற்று வேதனை தெரிய ஆரம்பிக்கும்.

தொண்ணூறு சதவீதம் நோயாளிகள், மூன்றாவது நிலை வந்த பின்புதான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஒரு நூலை இழுத்து முடிச்சு போட்டு வைத்தால் எப்படி இருக்குமோ, நோயாளிகளின் கால்களும் அப்படிதான் நரம்பை இழுத்து முடிந்ததுபோல் இருக்கும்.


அதனால் இரத்தக் குழாய் வெளியே வந்து தொங்கிக் கொண்டிருக்கும். தூக்கத்தில் தெரியாமல் கால்களை சொறிந்தால் கூட, இரத்தம் வெளியாகும்.

நான்காம் நிலையில், மூட்டுக்கு கீழ் இருக்கக் கூடிய தசைகளில் உள்ள அனைத்து இரத்தக் குழாயும் வெளி வந்துவிடும். அரிப்பு அதிகமாக இருக்கும், காலையில் கால்களில் வீக்கம் இல்லாமல் இருக்கும். மாலை முடிவதற்குள் கால்களில் வீக்கம், மிகுந்து அவர்கள் செருப்புகளே, அவர்களுக்கு பொருந்தாத நிலையில் இருக்கும். .


கால்களில், கொப்புளங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். அதாவது வெரிகோஸ் வெயின்ஸ் என்பது வெரிகோஸ் அல்சராக மாறும்.

சிகிச்சை :

வெரிகோஸ் வெயினை குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவ முறைப்படி நாங்கள் பஞ்சகர்ம சிகிச்சை அளிக்கிறோம்.


அட்டை பூச்சி பஞ்சகர்ம சிகிச்சை :

மருந்துக்காக, உபயோகப் படுத்தும் அட்டைப் பூச்சிகளை வெரிகோஸ் வெயின் பாதித்த இடங்களில் இடுவோம். அட்டைப் பூச்சியானது கெட்ட இரத்தத்தை எளிதில் உறிஞ்சி விடும். சிகிச்சை தொடங்கிய மூன்று நாட்களிலேயே, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

நோயாளிகள் செய்ய வேண்டியவை:

அதிகம் காரமுள்ள உணவுகளை தவிருங்கள்.தயிர் சாப்பிடுவதை தவிருங்கள்.அசைவ உணவுகள் அதிகமாக உண்பதை நிறுத்துங்கள்.கட்டாயம் தினம் மூன்று லிட்டர் தண்ணீரையாவது பருகுங்கள்.ஆல்கலின் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்க்கத் தொடங்குங்கள்.தரையில் கால்களை நீட்டி அமருங்கள்.உடற்பயிற்சி செய்தல் மிக அவசியம்.குறைந்தது 15 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

தொடர் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டால், வெரிகோஸ் வெயின் நோயிலிருந்து எளிதில் வெளிவரலாம்!
வெறும் 140 எழுத்துகள். அதை எழுதி ஒருவர் கோடீஸ்வரரானார். இந்த நூற்றாண்டில்மட்டுமே நிகழக்கூடிய அதிசயம் இது. உண்மையில் ஒரு ட்வீட்டால் யாரும் கோடீஸ்வராக இயலாதுதான். அந்த ட்வீட்டை எழுதியவர் அதன்பிறகு நிறைய உழைத்துதான் பெரிய நிலைக்கு வந்தார். ஆனாலும், அந்த ஒரு ட்வீட் அவருடைய பணிவாழ்க்கையைத் திருப்பிப்போட்டது உண்மை. அவர் பெயர் ரயான் க்ரேவ்ஸ். 2010ல் அந்தப் புகழ்பெற்ற ட்வீட்டை எழுதியபோது அவருக்கு வயது இருபத்தேழுதான். அப்போது அவர் ஏதோ ஒரு நிறுவனத்தில் ஒரு சிறிய வேலையில் இருந்தார், நல்ல திறமைசாலிதான், ஆனால், அதை நிரூபிப்பதற்கு நல்ல வாய்ப்பு ஏதும் அமைந்திருக்கவில்லை.

இந்த நேரத்தில்தான் ரயான் அந்த ட்வீட்டைப் பார்த்தார்:

'ஒரு புதிய நிறுவனம், இடம் அடிப்படையிலான சேவை, இன்னும் சந்தைக்கு வரவில்லை, ஆனால், இதில் பெருந்தலைகள் முதலீடு செய்திருக்கிறார்கள். இதை ஏற்று நடத்த ஒரு நல்ல மேலாளர் தேவை. யாராவது ஆட்டத்துக்கு வருகிறீர்களா?'


இங்கே ஓரளவு தூய்மையாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற இந்த ட்வீட், உண்மையில் கொச்சையான ஆங்கிலத்தில்தான் இருந்தது. போதாக்குறைக்கு, எஸ்.எம்.எஸ். சுருக்கமொழி வேறு. பொதுவாக வேலைக்கு ஆள் தேவை என்று எழுதுகிறவர்கள் பந்தாவான மொழிநடையைப் பயன்படுத்துவார்கள். அப்போதுதான் திறமைசாலி ஆட்கள் புருவத்தை உயர்த்துவார்கள், நம் நிறுவனத்தைத் தேடி வருவார்கள் என்று நினைப்பார்கள். ஆனால், அதுபோன்ற எதிர்பார்ப்புகளெல்லாம் இன்றைய தலைமுறையில் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த ட்வீட்டை எழுதிய ட்ராவிஸ் கலானிக் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சாதாரணமாக, 'அந்த சினிமா செம போர் மச்சி' என்று எழுதுவதுபோல் இதையும் எழுதிவிட்டார்.


அதைப் படித்த ரயானும் இளைஞர். ஆகவே, மொழியைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அந்த ட்வீட்டுக்குப் பதில் எழுதினார். 'எனக்கு ஆர்வமுண்டு. மின்னஞ்சலில் பேசுவோம். விரைவில், ட்ராவிஸும் ரயானும் பேசினார்கள். ட்ராவிஸ் தொடங்கி நடத்திவந்த நிறுவனத்தில் ரயான் இணைந்தார்.
அவர் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்த 'சேவை'யை மேம்படுத்தத்தொடங்கினார். இங்கே 'சேவை' என்ற சொல்லை மேற்கோள்குறிக்குள் குறிப்பிடக் காரணமுண்டு. பொதுவாக இந்தச் சொல்லைத் தன்னலம் எதிர்பாராத பணி என்கிற பொருளில்தான் நாம் பயன்படுத்துகிறோம். 'சமூக சேவை' என்கிறோம், 'சேவை செய்யும் நோக்கத்துடன் அரசியலுக்கு வந்தார்' என்கிறோம்.

தொழிலுலகத்தில் 'சேவை' என்பதன் பொருள், 'பணி' என்பதுதான். அதற்காகக் காசு பெற்றுக்கொண்டாலும், அதன்மூலம் லாபம்பார்த்தாலும், அது சேவைதான். எடுத்துக்காட்டாக: தொலைபேசிச்சேவை, இணையச்சேவை, விமானச்சேவை. ஆக, எந்தவொரு நிறுவனமும் இரண்டுவிதங்களில் சந்தைக்கு வரலாம்: தயாரிப்புகளை வழங்கலாம், அல்லது, சேவைகளை வழங்கலாம். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேனாக்களை விற்கிறார் என்றால், அவர் 'தயாரிப்பு'களின்மூலம் தொழில் செய்கிறார் என்று பொருள். இவற்றை Product-based Companies என்பார்கள்.மாறாக, கண்ணால் பார்க்கமுடியாத, கையால் தொட்டுப்பார்க்கமுடியாத பணிகளின்மூலம் தொழில் செய்கிறவர்களை Service-based Companies என்பார்கள். எடுத்துக்காட்டாக, தையல்காரர் எந்தப் பொருளையும் விற்பதில்லை, தைத்தல் என்கிற சேவையைதான் விற்கிறார். ட்ராவிஸ் தொடங்கி நடத்திவந்த நிறுவனமும் இந்தச் சேவை வகையில்தான் வரும். அவர்கள் டாக்ஸி சேவையை விற்கத் திட்டமிட்டிருந்தார்கள். அதாவது, ஒருவர் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குச் செல்லவேண்டுமென்றால், தெருவில் இறங்கி ஒரு டாக்ஸியைக் கை நீட்டி நிறுத்தவேண்டும். அதற்குப்பதிலாக உட்கார்ந்த இடத்திலிருந்து டாக்ஸியை அழைத்தால் எப்படியிருக்கும்?


ட்ராவிஸின் அந்த ட்வீட்டிலிருந்த 'இடம் அடிப்படையிலான சேவை' என்ற சொற்றொடருக்கு இப்போது பொருள் புரிந்திருக்கும். ஒருவர் எந்த இடத்தில் (GPS Location) இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அங்கேயே டாக்ஸியை அனுப்பக்கூடிய புதுமையான சேவை இது. ஆரம்பத்தில் இதற்கு ரொம்பச் செலவானது.

சாதாரண டாக்ஸியைவிட இதற்கு அதிகக் கட்டணம் வசூலிக்கவேண்டியிருந்தது. அதேசமயம், இருக்கும் இடத்திலிருந்து டாக்ஸியை அழைக்கலாம் என்கிற சவுகர்யத்துக்காக மக்கள் அந்தக் கூடுதல் தொகையைத் தருவார்கள் என்று நினைத்தார் ட்ராவிஸ்.

அதற்குமுன் ஓரிரு நிறுவனங்களைத் தொடங்கி நடத்திய அனுபவம் ட்ராவிஸுக்கு உண்டு. அவற்றில் ஒரு நிறுவனம் அவரை நீதிமன்றத்துக்கே இழுத்துச்சென்றது; இன்னொரு நிறுவனத்தில் ஓரளவு சம்பாதித்தார்; அந்தத் தைரியத்தில்தான் இந்தப் புதிய முயற்சியில் இறங்கியிருந்தார். உண்மையில் இது ட்ராவிஸின் யோசனையே இல்லை. அவரோடு சேர்ந்து இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த கார்ரெட் காம்ப் என்பவருடைய யோசனைதான். ஒரு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, கார்ரெட்டும் அவருடைய நண்பர்களும் ஒரு காரை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அதற்கு ஏகப்பட்ட செலவாகிவிட்டது.

அப்போதிலிருந்து, 'இந்த டாக்ஸிக் கட்டணத்தைக் குறைக்க ஏதாவது வழி உண்டா?' என்று யோசித்துக்கொண்டிருந்தார் கார்ரெட். 'ஒரு காரில் பல பேர் செல்லும்போது ஆளாளுக்குக் கொஞ்சம்கொஞ்சம் பணம் தந்தால் எல்லாருக்கும் செலவு குறையுமே' என்று ஒரு யோசனை கிடைத்தது. இதுதான் பின்னர் வேறுவிதமாக மாறி 'ஊபர்கேப்' என்ற பெயரில் புதிய சேவையாக அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவில் அந்தப்பெயர் இன்னும் சுருங்கி ‘ஊபர்’ என்றானது.


'ஊபர்' டாக்ஸியின் கட்டணம் தொடக்கத்தில் அதிகமாக இருந்தபோதும், மக்கள் இதனை விரும்புவார்கள் என்று பலரும் நினைத்தார்கள். அந்த நிறுவனத்தில் முதலீடுசெய்ய முன்வந்தார்கள். அதேசமயம், இந்தச் சேவை வெற்றிபெறவேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் மிக எளிதாக ஓர் ஊபர் டாக்ஸியைப் பதிவுசெய்ய இயலவேண்டும், அவர்கள் க்ளிக் செய்கிற நேரத்தில் சட்டென்று ஒரு டாக்ஸி கிடைக்கவேண்டும், அது சரியாக அவர்கள் வீட்டு வாசலுக்கே வந்து நிற்கவேண்டும், அந்த டாக்ஸிக்கு அவர்கள் எளிதில் பணம் செலுத்துகிற சவுகர்யங்கள் வேண்டும்... இவை அனைத்தையும் பார்த்துப்பார்த்துச் செய்துகொண்டிருந்தார் ரயான்.

ஊபருக்கு வசதியாக, ஸ்மார்ட்ஃபோன்கள், அதிவேக இணையம், கூகுள் மேப்ஸ் என்னும் வரைபடச்சேவையின் துல்லியம் என அனைத்துமே இந்தக் காலகட்டத்தில் மேம்பட்டன. இதன்மூலம் முன்பு எப்போதுமில்லாத ஒரு சேவையை அவர்களால் வழங்க இயன்றது.


2011ம் ஆண்டு, ஊபரின் சேவை முதன்முதலாக சான்ஃப்ரான்சிஸ்கோவில் அறிமுகமானது. அதன்பிறகு, படிப்படியாக மற்ற நகரங்கள், நாடுகளுக்குச் சென்றார்கள்.

ஆனால், இப்படிப் புதிய சந்தைகளுக்குச் செல்லச்செல்ல, புதிய பிரச்னைகளும் வந்தன. ஊபரின் வருகை தங்களுடைய வருவாயைப் பாதிப்பதாகப் பலரும் நினைத்தார்கள்.

அவர்களுக்குப் போட்டியாகப் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. சில இடங்களில் ஊபர் நுழையமுடியாதபடி, அப்படியே நுழைந்தாலும் லாபகரமாக இயங்கமுடியாதபடி நெருக்கடிகள் தரப்பட்டன. ஊபர் தன்னுடைய ஓட்டுநர்களைச் சரியாக விசாரித்துச் சேர்ப்பதில்லை, இதனால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்று சர்ச்சைகள் எழுந்தன.

இன்றைக்கும் ஊபர்பற்றி நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளன. இவற்றில் பலவற்றில் ஊபர்மீது தவறு இருக்கக்கூடும். அதேசமயம் டாக்ஸி சேவை என்கிற துறையை அவர்கள் புரட்டிப்போட்டது உண்மை. இனி அந்தத்துறை பழைய நிலைக்குச் செல்லவேமுடியாது. ஊபர் இல்லாவிட்டால் இன்னொருவர் இந்தப் புதிய சவுகர்யங்களை வழங்கியே தீரவேண்டும்.

சில வருடங்களுக்கு முன்புவரை டாக்ஸி என்றாலே அது பணக்காரர்கள்மட்டும் பயன்படுத்துகிற விஷயம் என்கிற நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு, எல்லாரும் டாக்ஸியை அழைக்கலாம், ஒரு ஸ்மார்ட்ஃபோனும் இணையவசதியும் இருந்தால் நம் இருப்பிடத்துக்கே டாக்ஸியை வரவழைக்கலாம், செல்லவேண்டிய இடத்துக்கு விரைவாகவும் குறைந்த செலவிலும் சென்றுசேரலாம். ஒரே காரைப் பலர் பகிர்ந்துகொள்ளும் வசதியைப் பயன்படுத்தினால் செலவு இன்னும் குறையும்.


ஆனால், இந்த வசதி வாடிக்கையாளர்களுக்குப் பலன் தந்ததைப்போல் ஓட்டுநர்களுக்கு, கார் உரிமையாளர்களுக்குப் பலன் தந்திருக்கிறதா? அவர்கள் லாபம்சம்பாதிக்கிறார்களா? மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?

இந்தக் கேள்விக்கு நிச்சயமான பதிலைக் கண்டறிவது சிரமம். ஏராளமானோர் புதிய கார்களை வாங்கி ஊபர்போன்ற சேவைகளில் இணைந்திருப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் நன்கு சம்பாதிப்பதாகவும் சொல்கிறார்கள். இன்னொருபக்கம், 'இதெல்லாம் நமக்குச் சரிப்படாது' என்று கார்களை விற்றுவிட்டுச் செல்கிறவர்களும் இருக்கிறார்கள். இன்றைக்கு ஊபர் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை இதுதான்: டாக்ஸி ஓட்டுநர்களை, உரிமையாளர்களை மகிழ்ச்சியாக வைத்தபடி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த செலவில் எளிதாக டாக்ஸி சேவையைத் தருவது எப்படி? இந்தப் புதிரைத் தீர்த்தால்தான் அவர்கள் அடுத்தகட்டத்துக்குச் செல்ல இயலும்.


இந்தவிஷயத்தில் தொழில்நுட்பம் அவர்களுக்கு உதவக்கூடும். வருங்காலத்தில் ஓட்டுநரில்லாத கார்கள் அறிமுகமாகும் என்கிறார்கள். ஊபர்போன்ற நிறுவனங்கள் அதைப் பயன்படுத்திக்கொண்டு செலவைக்குறைக்கலாம், சேவையை மேம்படுத்தலாம். ஊபர் ஏற்கெனவே இதுபோன்ற தொழில்நுட்பங்களை ஆராயத்தொடங்கிவிட்டது. ஒரு சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட ஊபர் இன்றைக்கு உலகிலேயே மிக அதிக மதிப்புகொண்ட நவீன நிறுவனமாகக் கருதப்படுகிறது. சர்வதேச அளவில் அறுநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கிவரும் ஊபரின் இப்போதைய சந்தைமதிப்பு கிட்டத்தட்ட எழுபது பில்லியன் டாலர்.

இதன் பொருள், மக்களுக்குத் தேவையுள்ள ஓர் இடைவெளியைக் கண்டறிந்து, தொழில்நுட்பத்தின் துணையோடு அதை நிரப்பி, அந்தத் தீர்வைச் சரியானமுறையில், சரியானவிலையில் சந்தைக்குக் கொண்டுசென்றால், அதைத் தொடர்ந்து மேம்படுத்திவந்தால், எத்தகைய போட்டிக்கு மத்தியிலும் நிச்சயம் வெற்றிபெறலாம்!

(நிறைவடைந்தது)து செல்வந்தர்களின் உலகம். அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை. பொருள் இருந்தால்தான் இன்று இவ்வுலகில் வாழவே முடியும். எண்பதுகளைப் பற்றிய என் கவிதையொன்றில் ஒரு வரியை இப்படி எழுதி இருந்தேன் “வேலைக்குப் போகாதவன் தன் வீட்டுக்குப் பாரமாய் இருந்ததில்லை” என்று. முப்பதாண்டுகளுக்கு முன்பு வீட்டின் பிள்ளைகளில் ஒருவர் வேலைக்குச் செல்லாவிட்டாலும்கூட அவர் அவ்வீட்டுக்கு ஒரு சுமையாய் இருக்கவில்லை. ஆனால், இன்றைக்கு நிலைமை அவ்வாறில்லை. வேலைக்குச் செல்லாவிடில் அவர் அவ்வீட்டுக்கு ஓர் உறுத்தலாய் மாறிவிடுகிறார். சில பத்தாயிரங்களால் ஆன வீட்டுப் பொருளாதாரத்திற்கு அவர் ஒரு விரயமாய் மாறிவிடுகிறார். “எங்காச்சும் ஒரு வேலைக்குப் போயி ஐயாயிரம் பத்தாயிரம் கொண்டு வந்தீன்னா அது எவ்வளவு உபயோகமா இருக்கும்…” என்று தந்தையை மனம் குமைந்து கூற வைத்துவிடுகிறார். ஏனென்றல் இன்றைக்கு ஒருவர் பொருளீட்டாமல் உண்ணுவது கடினம். எல்லாம் விலைமயம்.


நான் வேலை வினைக்கெட்டு ஒரு நாள் மதியச் சாம்பாரின் இடுபொருள்களில் அடங்கியுள்ளவற்றின் விலைத்தொகுப்பு என்ன என்று பார்த்தேன். குறைந்தது அறுபது உரூபாய்ப் பொருள்கள் இல்லாமல் ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளைக்கான சாம்பாரைக் காய்ச்சி இறக்க முடியாது என்பது விளங்கியது. ஆக, இங்கே எல்லாம் பொருள் மயம். அதனால் என்ன செய்கிறோம் ? பள்ளியோ கல்லூரியோ முடித்தவுடனே வேலைக்கு ஓடுகிறோம்.


வேலை என்ற பெயரில் எங்கேனும் ஒரு கட்டடத்திற்குள் நம்மைத் திணித்துக்கொண்டு திங்களூதியத்திற்குத் துன்பப்படுகிறோம். ஏதேனும் ஒரு தொகையை ஊதியமாகப் பெற்று வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது நமக்குப் போதிக்கப்பட்டிருக்கிறது. பொருளீட்டாமல் உண்ணும் ஒரு கவளம் நம் தன்மானத்திற்கு இழுக்காகிறது.

இப்படி இளமை முழுவதும் ஓடியோடி என்ன ஆகின்றோம் ? இஞ்ஞாலத்தின் பெருஞ்செல்வந்தன் ஆகின்றோமா ? இல்லை. நாற்பதுகளை எட்டும்போது உடல்வளம் குன்றிவிடுகிறது. முதுகும் மூட்டுகளும் வலிக்கின்றன. கண்ணாடி அணிந்தே ஆகவேண்டும். சூரிய வெளிச்சத்தோடு தொடர்புடையதாக இருந்தால்தானே நமது பார்வை தெளிவாய் இருக்கும் ? இங்கே நாம் பகலிலும் இரவிலும் மின்னொளிர் விளக்குகளுக்கு அடியிலேயே திரிய வேண்டியவர்களாக இருக்கிறோம். பார்வை மங்காமல் என்ன செய்யும் ?முறையற்ற உணவுப் பழக்கம், தொடர்ந்து மாவுச் சத்து தின்னும் பழக்கம். இரத்தத்தில் சர்க்கரை சேர்ந்துவிடுகிறது. இரத்த அழுத்தம் கூடிவிடுகிறது. நம் அகவை ஐம்பது என்னும்போது முதுமையை உணரத் தொடங்கிவிடுகிறோம். அறுபத்தேழுக்குள் செத்துப் போய்விடுகிறோம். ஓடோ ஓடென்று ஓடியவர்கள் இத்தகைய வாழ்க்கைச் சுற்றோட்டத்தைத்தான் அமைத்துக்கொள்கிறார்கள். இவை அனைத்துமே தவறு.

வாழ்க்கைக்கு வேலை தேவைதான். அது தேவையடிப்படையில் இருப்பது நன்று. சிறு தேவைகளின் வாழ்வினராக நம்மை ஆக்கிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் நோய்க்கு இரையாக நம்மை வளர்த்துக்கொண்டிருக்கிறோம் என்று பொருள்.


மகாபாரதத்தில் தர்மரின் பேரறிவை அறியத் தரும் கேள்வி பதில் பகுதியொன்று வரும். அங்கே ஒரு கேள்வி கேட்கப்படும் “மனிதன் ஈட்டவேண்டிய மகத்தான செல்வம் எது ?” என்பது கேள்வி. “ஆரோக்கியம்” என்பது தர்மரின் பதில். இதைத்தான் தமிழில் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று கவிதைச் சுருக்கமாகச் சொன்னார்கள்.

எத்தகைய செல்வமும் அழியும். நோயற்ற செல்வம்தான் குறையாது. அழியாது. இன்று எவ்வளவு பொருட் செலவு செய்தாலும் ஆளைக்காப்பாற்ற முடியாத நோய்கள் மலிந்திருக்கின்றன. அதனால் உடல் நலத்தைக் காப்பாற்றுவோம். நோய்கள் அண்டாதபடி அரண்செய்து கொள்வோம். உடல் தரம் பேணுவோம். அதுதான் நாம் ஈட்டவேண்டிய முதற்பெருஞ்செல்வம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
“ஸாரி.. கோமல் .. நான் இந்த படத்த ரிலீஸ் பண்ண போறதில்ல” . சதீஷ் சொல்லி முடிச்ச அடுத்த செகண்ட் அவரோட போன் அடிச்சுது. பாத்தா எதோ புது நம்பர்.. அட்டெண்ட் பண்ணலாமா? வேணாமான்னு யோசிச்சுட்டே சதீஷ் அந்த போன் கால அட்டெண்ட் பண்ணாரு. எதிர்ல பேசுனது பிரபல புரொடியூசர் கல்பாத்தி அகோரம் . சதீஷ்கிட்ட அவர் சொன்ன முதல் வார்த்தையே “சார்.. உங்க படம் நல்லா வந்து இருக்குன்னு கேள்விபட்டன்.. படத்த எப்ப பாக்கலாம்?” இத கேட்டதும் சதீஷ்க்கு கையும் ஓடல.. காலும் ஓடல.. படபடப்புல சதீஷ் “சார்.. நீங்க எப்ப வேணாலும் பாக்கலாமுன்னு சொல்ல. அடுத்த நாளே படம் பாக்கறதுக்கு ரெடி ஆனாங்க!

அடுத்த அவங்க படம் பாக்க வர்றப்ப கோமல் வேண்டாத தெய்வம் இல்ல.. சென்னைல போகாத கோயில் இல்ல. வடபழனி முருகன் கோயில்ல ஆரம்பிச்சு எதோ ஒரு முட்டு சந்துல இருந்த முண்டக்கன்னி அம்மன் கோயில் வரைக்கும் கோமல் விசிட் அடிச்சான்.
கேப்ல ஒரு சர்ச்சுக்குள்ள போய் யேசு நாதர்கிட்டயும். மசூதி வாசல்ல நின்னு அல்லாகிட்டயும் எக்ஸ்ட்ராவா வேண்டிக்கிட்டான்.


ப்ரீவ்யூ ஷோ நுங்கம்பாக்கத்துல இருக்கற 4 ப்ரேம்ஸ் தியேட்டர்ல பாக்கறதா ப்ளான் பண்ணி இருந்தாங்க. பொதுவா ஒரு படத்த வாங்க நினைக்கற வினியோகிஸ்தர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு படம் ரிலீஸ்க்கு முன்னாடியே படத்த ஒரு ஸ்பெஷல் ஸ்கீரினிங்ல போட்டு காட்டறதுதான் ப்ரீவ்யூ ஷோன்னு சொல்லுவாங்க. கோமல் படத்த 4 ப்ரேம்ஸ்ல மதியம் 3 மணிக்கு பாக்கறாதா சொல்லி இருந்தாங்க. கோமல் காலைல 11 மணிக்கே அங்க வந்துட்டான். வந்ததும் முதல் வேலையா தியேட்டர் சவுண்ட்ல இருந்து புரொஜக்‌ஷன் வரைக்கும் எல்லாத்தையும் செக் பண்ணான். படம் பாக்கும் போது ஆடியோ, வீடியோ ரெண்டுமே துல்லியமா இருக்கணும் அப்பதான் பாக்கறவங்க என்ஜாய் பண்ண முடியும்.


கரெக்டா மதியம் 2.55 மணிக்கு படத்த பாக்க அந்த புரொடியூசரும், அவர்கூட அவரது கம்பெனி ஆட்கள் சில பேரும் வந்தாங்க. சரியா 3 மணிக்கு படம் ஓட ஆரம்பிச்சது. அந்த செகண்ட்ல இருந்து கோமலோட நல்ல நேரமும் ஸ்டார்ட் ஆச்சு. படம் பாத்து முடிச்சுட்டு வெளில வந்தததும் கல்பாத்தி. அகோரம் சார் படத்த வாங்கி ரிலீஸ் பண்றதா சொன்னாரு. படம் அவருக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு. உடனே ஒரு பெரிய அமௌண்ட அட்வான்ஸா குடுத்து அக்ரிமெண்ட் போட்டாரு. கோமலுக்கு இதெல்லாம் கனவா, நனவான்னு ஒரே குழப்பமா இருந்துச்சு. அடிக்கடி கை, கால் எல்லாம் கிள்ளி பாத்து கன்பார்ம் பண்ணிக்கிட்டான்.

படத்த உடனே ரிலீஸ் பண்றதா சொன்ன அகோரம் சார் உடனே அதுக்கான வேலைல இறங்குனாரு. அடுத்த ரெண்டு வாரத்துல படம் ரிலீஸ்க்கு டேட் குறிச்சாங்க. சரியா 10 நாளைக்கு முன்னாடி புரமோஷன் வேலைகள ஸ்டார்ட் பண்ணும் போது ஒரு கெட்ட செய்தி வந்து கோமல் காதுல பெரிய கொடுக்கு இருக்கற குழவி மாதிரி கொட்டுச்சு. ரெண்டு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றதா இருந்த ரஜினி சார் படம் திடீர்ன்னு ரிலீஸ்க்கு ரெடி ஆகி அனென்வுன்ஸ்மெண்ட் வந்துச்சு. அவரு படத்தோட இந்த படத்த ரிலீஸ் பண்றதா வேணாமான்னு எல்லாருக்கும் ஒரே குழப்பம்.

ரஜினி சார் படம் ஒரு சுனாமி மாதிரி.. அந்த படத்தோட ஓப்பனிங் முன்னாடி கோமல் படம் எல்லாம் அடி பைப்ல வர்ற தண்ணி மாதிரி ரொம்ப சப்பையா இருக்கும். அதனால அவரு கூட போட்டி போட வேணான்னு ரெண்டு வாரம் ரிலீஸ தள்ளி வெச்சாங்க. கோமல் அந்த ரெண்டு வாரமும் ஒரே பட படப்பா இருந்தான். ஹை பிரஷர், லோ பிரஷர், ப்ளட் பிரஷர்ன்னு எல்லா பிரஷரும் அவனுக்கு அப்ப வந்துச்சு. கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு கோமல் இரண்டு வாரங்கள் காத்திருந்தான்.


சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகி ரெண்டு வாரம் கழிச்சு கோமல் படம் ரிலீஸ் ஆச்சு. படம் ரிலீஸ் ஆன முதல் நாள் எல்லா தியேட்டர்லயும் 10 பேர் கூட இல்ல. படத்த பாத்த பத்திரிக்கையாளர்களும், பொது ஜனமும் பேஸ்புக், ட்விட்டர்ன்னு எல்லா சோஷியல் மீடியாவுலயும் படத்த பத்தி பாராட்டி தள்ள அடுத்த நாள் தியேட்டர் 40% புல் ஆக ஆரம்பிச்சது. பொதுவா வதந்தி பரவற வேகத்த விட ஒரு நல்ல படத்த பத்தின டாக் வேகமா பரவிடும். கோமல் படத்த பத்தி அப்படி பரவுன பாஸிட்டிவ் விமர்சனங்கள் அதுக்கு அடுத்த நாள் 80% கூட்டத்த தியேட்டருக்கு கூட்டிட்டு வந்துச்சு. வழக்கமா எல்லா படத்தையும் கழுவி ஊத்தற ப்ளூ சட்டை அண்ணாச்சி கூட படத்த பத்தி பாஸிட்டிவா ரிவ்யூ குடுத்து இருந்தாரு.

முதல் நாள் முதல் ஷோ படத்த பார்த்த பவித்ரா கோமலுக்கு போன் பண்ணி பாராட்டி தள்ள.. அதுக்கு அடுத்த ஷோ திருட்டுத்தனமா படம் பார்த்த பவித்ராவோட அப்பா, படம் முடிஞ்சு வெளில வரும் போது மானசீகமா கோமல தன் மருமகனா ஏத்துக்கிட்டாரு. உண்மைய சொல்லுனுன்னா படத்துக்கு கோமலே எதிர்பார்க்காத அளவுக்கு பயங்கர ரெஸ்பான்ஸ் கிடைச்சுது, தியேட்டர்ல எல்லாம் ஹவுஸ்புல் போர்டு வெக்கற அளவுக்கு படம் மாஸ் ஹிட் ஆச்சு.

படம் ஹிட்டுன்னு இண்டஸ்ட்ரி புல்லா பேச ஆரம்பிச்சாங்க. அந்த செகண்ட்ல இருந்து கோமலுக்கு நிறைய புரொடியூசர்கிட்ட இருந்து போன் கால் வர ஆரம்பிச்சது.
கொட்டற கலெக்‌ஷன பாத்துட்டு சதீஷ் அடுத்த படத்தையும் கோமல்தான் பண்ணனுன்னு ஒரு பெரிய தொகைய அட்வான்ஸா குடுத்து, கூட ஒரு ஆடி காரையும் பரிசா குடுத்தாரு. கோமல் கோனேரிப்பட்டிக்கு ஆடி கார்ல போய் இறங்க, விளக்கு மாற எடுத்துட்டு துரத்துன அப்பாவும், அம்மாவும் ஆரத்தி எடுத்து அவன வரவேற்றாங்க. கோமல் புகழ் கோனேரிபட்டியோட சந்து பொந்து, ஏரிக்கரை எல்லாம் ஓங்கி ஒலிச்சுது.

அடுத்த நாள் கோமல் தன் அப்பா, அம்மாவோட பவித்ரா வீட்டுக்கு கெத்தா போய் பொண்ணு கேட்டான். பவித்ராவோட அப்பா அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்த வெச்சுக்கலான்னு பிக்ஸ் பண்ணாரு.

கட் பண்ணா கோமல் கல்யாணம் இனிதே நடந்து முடிஞ்சுது. அவனோட அடுத்த படமும் அட்டகாசமா ஸ்டார்ட் ஆச்சு. கோனேரிப்பட்டில இருந்து கோமல் எந்த கனவ நோக்கி சென்னை வந்தானோ அது அவன் கண்ணு முன்னாடி நிஜம் ஆகி இருந்துச்சு. கோமல் தமிழ் சினிமாவின் தலை சிறந்த இயக்குநர்களில் ஒருவனா மாறினான். அதுக்கப்புறம் என்ன நன்றி, வணக்கம், சுபம்தான்!!!

(கோமலின் கலைப்பயணம் இனிதே நிறைந்தது!)
விக்னேஷ் .

பவித்ரா

திரைப்பட வர்த்தகம் என்பது இன்று மிகப் பெரும் சந்தையாக மாறியுள்ளது. ஆனால், அது பற்றிய விழிப்புணர்வு என்பதோ, இப்போதுதான் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்திருக்கிறது. அதற்கு பலர் காரணமாக இருந்தாலும், குறிப்பிட்ட ஒருவரை கோடிட்டு காட்டாமல் இருக்க முடியாது. அவர் கேபிள் சங்கர். எழுத்தாளர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். சினிமா சந்தையின் சீக்ரெட் குறித்து இங்கே பேசியுள்ளார்!

“எல்லாக் காலக்கட்டங்களிலும், சினிமா சந்தை என்பது பணத்தை நோக்கித்தான் இருக்கு. பதினைந்து வருடங்களுக்கு முன், பத்து திரையரங்குகளில் மட்டும் ஓடக் கூடிய திரைப்படமானது, இன்று ஐநூறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய தேதியில் படம் வெளியான முதல் மூன்று நாட்களில்தான் படத்தின் வசூல் என்பது நிர்ணயிக்கப்படுகிறது!

திரைப்படம், தியேட்டர்ல இருக்குற நாட்கள் குறைவாக இருந்தாலும், அதோட வசூல் குறைவில்லாம இருந்துட்டுதான் வருது. சினிமாவோட ஆக்சிஜென்னா அது டிஜிட்டல் மார்க்கெட்டிங் தான். உதாரணத்துக்கு சொல்லணும்னா, ஆன்லைன் ஸ்ட்ரீமிங், இணையதளம், தொலைக்காட்சி, மொபைல், ஏர் கிராப்ட் இப்படி பல தளங்கள்ல நாம சினிமாவை வியாபாரம் செய்ய முடியும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் தான் திரைப்படங்களை, இத்தனை தளங்களின் வழியே மக்களுக்கு கொண்டு செல்லுது. தியேட்டர்கள்ல மட்டுமே இருந்த சினிமா, இன்று புதிய தொழில்நுட்பங்களை அரவணைச்சுக்கிட்டு பயணிக்குது!

டிஜிட்டல் மீடியா குறித்த விழிப்புணர்வு இன்று பல தயாரிப்பாளர்களுக்கு வந்திருக்கு. டிஜிட்டல் வியாபாரத்தை எப்படி தனக்கு சாதகமாக பயன்படுத்துறதுன்னு இப்போதான் புரிந்துகொண்டு, களத்துல இறங்கியிருக்காங்க. இந்த வியாபார சூட்சுமம் சின்ன தயாரிப்பாளர்களும் தெரிஞ்சுக்கணும். அவங்களுக்கு தெரியப்படுத்துறதுக்கு என்னால முடிஞ்ச அளவுல முயற்சி எடுக்கிறேன்!” சினிமா வியாபாரம் பற்றிய புரிதல் புதிய தயாரிப்பாளர்களுக்கு வேண்டும் என்ற கேபிள் சங்கரின் கூற்று சரியே!

கிராபியென் ப்ளாக்

லக சினிமா என்கிற வார்த்தை இன்று தமிழ் சினிமா உதவி இயக்குநர்களின் மத்தியில் அதிகம் புழக்கத்தில் உள்ள வார்த்தையாக மாறிவிட்டதற்கு காரணம், நவீன இலக்கிய உலகில் நிகழ்ந்த மாற்றங்கள் தான். குறிப்பாக, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் (உலக சினிமா பாகம் 1, 2), எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (உலக சினிமா), இயக்குநர் எம். சிவக்குமார் (சினிமா கோட்பாடு), எழுத்தாளர் அஜயன் பாலா (மார்லன் பிராண்டோ) உள்ளிட்ட பலர் தொடர்ச்சியாக பல தரப்பட்ட கோட்பாடுகளையும், திரைக்கதை உத்திகளையும், கதையமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாகவே, உலக சினிமா குறித்த பார்வை விரிவடைந்திருக்கிறது!

அதுமட்டுமா? கூடவே, தமிழ் சினிமாவும் தனக்குள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. மாறுபட்ட கதைகள், பரிசோதனை முயற்சிகள் என உலக அரங்கில் நாம் கம்பீரமாய் நிற்கவும் வைத்திருக்கிறது. உதாரணத்துக்கு இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றோர் உலக சினிமாவின் பாதிப்புகளில் இருந்து தொடர்ச்சியாக படங்களை இயக்கி, வருகின்றனர். அதுபற்றிய விவாதங்களும் விமர்சனங்களும் ஜரூராக கோலிவுட்டில் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.

ஆரம்பத்தில், உலக சினிமா டி.வி.டி.க்களை சென்னையில் ‘டிக் டாக்’ என்கிற ஒரேயொரு கடையில் மட்டுமே வாடகைக்கு எடுக்க முடியும். வாய்ப்பும் வசதியும் இருந்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அந்நாட்டு படங்களைப் பார்த்துவிட்டு வந்து கோடம்பாக்கத்தில் வந்து படங்களை இயக்கி, வெற்றிவாகை சூடி, கல்லா கட்டிய கதைகளும் இங்கே ஏராளம். இப்படியாக இருந்த தமிழ் சினிமாவின் சூழல் தான் இணையம் என்கிற வரத்தின் வாயிலாக எல்லோரும் உலக சினிமாக்களை தேடிப் படிக்கவும், தரவிறக்கம் செய்து பார்க்கவும் வழி பிறந்தது. இதனால் பல நாடுகளின் திரைப்படங்கள் பலரின் பார்வைக்கு வந்தன.

வழக்கம்போல, முதலில் கமர்ஷியல் பக்கம் மட்டுமே திரும்பிய கவனம், பிறகு மெல்ல நவீன யதார்த்த வகை சினிமாக்களின் மீதும் திரும்பியது.

அப்படித்தான் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மட்டுமே கண்டு வந்த ‘பை சைக்கிள் தீவ்ஸ்’, ‘தி சில்ரன் ஆஃப் ஹெவன்’ போன்ற படங்கள் பெரும் பார்வையாளர்களை சென்றடைந்தது. இதுபோலவே, சென்னையில் உலக சினிமா ஆர்வலர்களால் பல்வேறு அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில், பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளின் உதவியோடு திரைப்படங்கள் பெறப்பட்டு, சினிமா ஆர்வலர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டன. இதில் காலப்போக்கில் பல காணாமல் போய்விட்டாலும், தொடர்ந்து களத்தில் நின்று உலகத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பௌண்டேஷன்’ என்ற அமைப்பினர். அவர்களால், இணையத்திலும் காணக் கிடைக்காத ‘கான்ஸ்’ உள்ளிட்ட திரைப்பட விருதுகளை பெறும், புதிய படங்களும் உலக சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது.

இப்படியான நீண்ட வரலாற்றை கொண்ட உலக சினிமாவில் இப்போது சிறுவர் சினிமா, அயல் சினிமா போன்ற வார்த்தைகளில் தனித் தனியே படங்கள் பிரிக்கப்பட்டு, எழுதப்படுகின்றன. அந்த அடிப்படையில் உருவானதுதான் ‘பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்’. ஏறக்குறைய 24 படங்களை இதுவரை மனம் இதழில், நாம் அலசி வந்தோம். உண்மையில், இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி.

வாசகர்களாகிய உங்களின் ஆதரவால் தான் இது சாத்தியமானது. அதற்காக, இங்கே நான் நன்றி கூற கடமைப்பட்டவனாகிறேன். 25 என்பது எப்போதும் ஒரு நிறைவுக்கான குறியீடு. அப்படியே, இந்த இதழில் ‘தி ஹெல்ப்’ என்கிற படத்தோடு இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்.

படத்தின் தலைப்பே கதையை உங்களுக்கு சொல்லியிருக்கும். அமெரிக்க செல்வந்தர்களிடம் அடிமையாக வாழ்ந்த ஆப்பிரிக்க மத்திய வயதுடைய பெண்களின் துயரக் கதைதான் ‘தி ஹெல்ப்’. அந்தப் பெண்களுக்கு ஒரு நிருபர் வாயிலாக விடியல் பிறக்கிறது. அது எப்படி? என்பதுதான் படத்தின் டீடெய்ல். இப்படத்தை டேட் டெய்லர் என்பவர் இயக்கியுள்ளார். கேத்ரின் ஸ்டாக்கெட்ஸ் என்பவர் எழுதிய ‘தி ஹெல்ப்’ நாவலை அடிப்படையாக வைத்து, இப்படம் உருவாகியுள்ளது.

அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டில் வெளியான இப்படம், ஆஸ்கர் விருது உள்பட 79 சர்வதேச விருதுகளை பெற்றது. மேலும் 116 உலகத் திரைப்பட விழாக்களில் பரிந்துரைக்கப்பட்டது.

இப்படம் பற்றி, வழக்கம்போல, நான் விரிவாக சொல்லப்போவதில்லை. காரணம், இதுவரை நீங்கள் இத்தொடரை தொடர்ச்சியாக வாசித்திருந்தால் அது உங்களுக்கு அவசியமானதாக இருக்காது. ஆகவே, கூடுமானவரை இந்தப் படத்தை தரவிறக்கம் செய்தாவது பார்த்து விடுங்கள். இப்படத்தை எனக்கு பரிந்துரைத்தவரும் ஒரு பெண்தான். ஆகவே, இந்தத் தொடரை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்!

(தி என்ட்)

நீரில் மூழ்கிய போட்டோகிராஃபரும், ஓவியரும் வெளிப்படவில்லை என்று நினைத்து மனதில் திடுக் எழுந்த காரணத்தால் ஆற்று நீரில் சிகப்பு நிறத்தில் வண்ணத்தீற்றலைப் பார்த்தவுடன் அது இரத்தமாகத்தான் இருக்க வேண்டும் என ஏற்கெனவே பயந்திருந்த மனம் கன்னா பின்னா என்று கற்பனை செய்து விட்டது.

“ஹலோ..” என்று சற்று தூரத்தில் இருந்து குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் கரை ஓரத்தில் இருந்த ஒரு பாறை மீது ஓவியரும், ஃபோட்டோகிராஃபரும் உட்கார்ந்திருந்தார்கள். “நாங்கள் தண்ணீரில் முங்கி உடனே எழுந்து வந்து உட்கார்ந்து விட்டோம். நீங்கள் எவ்வளவு நேரம் தண்ணீருக்கடியில் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் அந்தப் போட்டியையே வைத்தோம்… “ என்றார் ஓவியர் ஜெ.பி. சிரித்துக் கொண்டே.

அடப்பாவிகளா.. அப்படியானால் ஆற்றுநீரில் வந்த அந்த இரத்தச் சிவப்புத் தீற்றல்?

சுற்றிலும் பார்த்தோம். சற்றுத் தொலைவில் வரிசையாக அமர்ந்திருந்த புது மண ஜோடிகளுக்கு ஆரத்தி எடுத்து, கரைசலை ஆற்றில் ஊற்றிய காட்சி தென்பட்டது. அடச் சே, இவ்வளவுதானா? அதன் பின் ஒழுங்காக நீராடி விட்டுக் கரையேறினோம். புத்தாடை உடுத்திக் கொண்டு மந்திராலய மகானின் தரிசனத்துக்காகச் சென்றோம்.

ஆலய வாசலை நோக்கிச் செல்லுமுன் மாஞ்சாலம்மா தேவி சன்னிதி எதிர்கொண்டது. ஸ்ரீ ராகவேந்திரரின், பிருந்தாவன ஆலயத்துக்கு, இடது புறம் நதியின் திசையில் மாஞ்சாலம்மா சன்னிதி அமைந்துள்ளது. இந்த அன்னையிடம் தான் மகான் ராகவேந்திரர், 'அன்னையே! என்னை நாடி வரும் பக்தர்கள் மந்திராலயம் வந்ததும் உன்னை வணங்கிப் பின்னரே என்னைத் தேடி வரட்டும். உன் தரிசனம் கிட்டியவர்களுக்கே எனது அருள் கிட்டும்' என்று உறுதி அளித்திருக்கிறார்.

மாஞ்சாலம்மா மந்திராலயப் பிரதேசத்தின் காவல் தெய்வம். பிரகலாதரின் குல தெய்வம். அன்னை மாஞ்சாலம்மா பட்டாடை உடுத்தி, முகத்தில் புன்னகை தவழ எழுந்தருளி இருக்கிறாள். ஒரு கரம் அபயம் அளிக்கிறது. இன்னொரு கரம் வரதானம் அளிக்கிறது. அன்னையின் முன்னால் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மாவிளக்கு ஏற்றி வணங்குகிறார்கள். பொங்கல் இட்டுப் படைக்கிறார்கள்.

அன்னையை தரிசித்த மன நிறைவுடன் அடுத்திருக்கும் பிருந்தாவன ஆலயத்துள் நுழைகிறோம். உள்ளே அமைதி நிலவும் சூழல். எங்கெல்லாமிருந்தோ வந்து குவிந்திருக்கும் பக்தர்கள். வெள்ளிக் கவசமிட்ட ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்துக்கு எதிரில் நின்று விழிகளை மூடினால் உள்ளம் நிறைகிறது. மகானின் திருவருள் நம்மை ஊடுருவித் தன்னைப் பதிவு செய்கிறது. பிரசாதமாக மிருத்திகா என்ற மண் கலந்த அட்சதை வழங்கப்படுகிறது. தீர்த்தம் தரப்படுகிறது.

ஸ்ரீ ராகவேந்திரரின் பிருந்தாவனத்துக்கு எதிரில் வெகு அழகான, வேலைப்பாடுகள் நிறைந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் சிற்பம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவரையும் வணங்குகிறோம். ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தை அடுத்து அவர் வழியில் வந்த ஐந்தாவது பீடாதிபதி ஸ்ரீ வாதீந்திரரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது.

ஸ்ரீ வாதீந்திரர், தேவ குருவான பிருகஸ்பதியின் அம்சமாக அவதரித்தவர். பெரிய பண்டிதரான இவர் ராகவேந்திரர் மீது 'குருகுணஸ்தவனம்' என்னும் கவிதை நூலை இயற்றி, அதை ராகவேந்திரரின் பிருந்தாவனத்தின் முன்னர் அரங்கேற்ற, மூலபிருந்தாவனம் குலுங்கி நூலை அங்கீகரித்தது. பிருந்தாவனத்திலிருந்து துளசி மாலை அவர் கழுத்தில் ராகவேந்திரரின் ஆசியாக விழுந்தது.

அவர் பிருந்தாவனஸ்தராக வேண்டிய சமயம். சீடர்கள் சிலரின் கனவில் தோன்றிய ராகவேந்திரர், தன் பிருந்தாவனத்துக்கு அருகில் உள்ள பிருந்தாவனம் வாதீந்திரருக்காக கட்டப்பட்டதே என்று அருளி அவருக்குத் தன்னருகே தனி இடம் அளித்தார். ராகவேந்திரரின் பிருந்தாவனத்தை வலம் வரும் பக்தர்கள் இன்று வாதீந்திரர் பிருந்தாவனத்தையும் வலம் வருகிறார்கள்.

ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தாவன சன்னிதியில், மகானின் திருப்பிரசாதமாக மிருத்திகா என்னும் மண் கலந்த அட்சதை வழங்கப்படுகிறது. மந்த்ராலயத்து மூல பிருந்தாவனத்திலிருந்து புனித மண் கொண்டு வரப்பட்டு, பாரதத்தின் பல்வேறு நகரங்களில் மிருத்திகா பிருந்தாவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் திருவல்லிக்கேணியிலும், தியாகராய நகரிலும் இத்தகைய மிருத்திகா பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. மந்திராலயம் செல்லும் பக்தர்கள் இங்கு சங்கல்ப சேவை செய்வது வழக்கம். சங்கல்ப சேவை என்பது குறிப்பிட்ட வழியில், குறிப்பிட்ட நாட்கள், குறிப்பிட்ட முறை பிருந்தாவன வழிபாடு செய்வதாக வேண்டிக் கொண்டு பின்னர், அந்த வகையில், அதைச் செய்து முடிப்பது.

அது பிராகார பிரதட்சணமாகவோ, அடிப் பிரதட்சணமாகவோ, அங்கப் பிரதட்சணமாகவோ இருக்கலாம். சங்கல்ப சேவை செய்பவர்களுக்கு உடல் தூய்மையும், மனத்தூய்மையும் அவசியம். மேலும் உடல் சௌகரியங்களைக் குறைத்துக் கொண்டு, நாள் முழுவதும் ராகவேந்திரர் தியானத்தில் அந்த நாட்களில் ஈடுபடுதல் அவசியம்.

ஏதாவது காரியப் பூர்த்திக்காக சங்கல்ப சேவை செய்பவர்கள் கனவில் இன்றும் ராகவேந்திரர் தோன்றுவதோடு, இஷ்ட பலனையும் தவறாமல் அளித்து வருகிறார். நாங்கள் சென்றிருந்த சமயத்திலும் ஏராளமான பக்தர்கள் அடிப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தார்கள்.

மந்திராலயத்தில் எல்லா நாட்களும், நல்ல நாட்களே என்றாலும் குருவுக்கு உகந்த வியாழக்கிழமை புனிதமான நாளாகும். வியாழக்கிழமைகளில் பிருந்தாவனம் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை வஸ்திரம் சாத்தப்படுகிறது. துளசி மாலை மட்டும் அணிவிக்கப்பட்டு அன்று ஒரு நாள் கவசங்கள் இல்லாமல் பிருந்தாவன தரிசனம் கிட்டுகிறது. இந்த தரிசனத்துக்கு நிர்மால்ய பிருந்தாவன தரிசனம் என்று பெயர். தவிர, ஒவ்வொரு ஏகாதசி அன்றும் நிர்மால்ய பிருந்தாவன தரிசனம் கிட்டும்.மத்வ மடங்களில் ஏகாதசி நாள் பூரண உபவாச நாளாக அனுசரிக்கப்படுவதால் அன்று இங்கு பூஜை எதுவும் செய்யப் படுவதில்லை. பிரசாதமும் வழங்கப்படுவதில்லை. உபவாச நாள் என்பதால் ஆலய உணவும் சமைக்கப்படுவதில்லை. மந்திராலய மடத்தின் பிராகாரங்களில் நடைபெறும் உத்சவ மூர்த்தியின் உலா மிகவும் பிரசித்தமானது. விசேஷ நாட்களில் நடைபெறும் யானை வாகன சேவையும், ரதோத்சவமும், பல்லக்கு உலாவும் குறிப்பிடத்தக்கவை.

மந்திராலயத்தில் மாலை வேளைகளில் வெள்ளி ரதமும், சந்தனமர ரதமும் உத்சவ மூர்த்தியை சுமந்து பிராகார வலம் வருகின்றன, உத்சவ காலங்களில் தங்க ரத தரிசனமும் கிடைக்கும். உத்சவ மூர்த்தியுடன் மடத்தின் யானையும் பிரகார வலம் வருவதும், வணங்கித் தொழுவதும் கண் கொள்ளாக் காட்சிகளாகும். எனவே மந்திராலயம் செல்பவர்கள் அங்கே மூன்று நாட்களாவது தங்கியிருந்து காலை, மாலை இரு வேளைகளிலும் பிருந்தாவன தரிசனம் செய்து , அங்கே நிகழும் உற்சவங்களைக் கண்டு களித்து, அதன் பின்னர் மகானிடம் மானசீகமாக புறப்படுவதற்கான அனுமதி பெற்று புறப்படுதல் நலம்!

த்வ மடத்தின் பீடாதிபதி மந்திராலயத்தில் இருக்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மூலராமர் தரிசனம் கிட்டும். மூலராமர் ஸ்ரீ மடத்தின் விலை மதிக்க முடியாத சொத்து. இன்றும் ஸ்ரீ மட பீடாதிபதிகள் தங்களது திருக்கரங்களால் மூலராமர் விக்கிரக ஆராதனையை, தங்களின் முக்கியமான தொண்டாகச் சிரமேற்று செய்து வருகிறார்கள். மூலராமர் மடத்துக்கு வந்து சேர்ந்ததும் சாதாரணமாக நடந்த நிகழ்ச்சி அல்ல. நான்முகன், பரந்தாமனைப் பல கோடி வருடம் வழிபட்டு வந்தார். இருந்தாலும் பத்மநாபனின் அர்ச்சா ரூபத்தைக் காண அவருக்கு அவா மிகுந்தது. விசுவகர்மாவிடம் தன் இச்சையை அவர் உரைக்க, தேவ சிற்பி ஒரு திவ்ய மங்கள விக்கிரகம் வடித்தார்.

அந்த அற்புத விக்கிரகத்தை 'ராமா' என்றழைத்து, பிரம்மா ஆராதனை செய்து வந்தார். காலப்போக்கில் ராமர் சூர்ய தேவனிடம் வந்து சேர்ந்தார். பின்னர் திரேதா யுகத்தில் சூர்ய வம்ச மன்னர்கள் தங்கள் அரண்மனையில் ராமரை ஆராதித்தார்கள்.


சரத மன்னன் மக்கட் பேறு இல்லாமல் புத்திர காமேஷ்டி யாகம் நடத்த, நான்கு பிள்ளைகள் பிறந்தனர். மூத்த மகனுக்கு ராமன் என்று, தனது ஆராதனை தெய்வத்தின் பெயரையே மன்னன் இட்டான். இராமரும், சீதையும், லக்ஷ்மணனும் வணங்கிய இந்த மூலராமரை, துவாபர யுகத்தில் பீமன் ஆராதித்தான். மூலராமர், கலியுகத்தில் கலிங்க மன்னர் வம்ச வழிபாட்டிற்கு வந்து சேர்ந்தார்.

மத்வாச்சார்யரின் சீடரான நரஹரி தீர்த்தர், கலிங்க நாட்டில் அற்புதம் ஒன்று நிகழ்த்த, அதன் மூலமாக ஸ்ரீமடத்திற்கு வந்து மத்வாச்சார்யரின் பூஜையை ஏற்கத் தொடங்கினார் மூலராமர். தொடர்ந்து பல ஆச்சார்யர்கள் மூலராமரை ஆராதித்து வரத் தொடங்கினார்கள். தமது காலத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் மூலராமரை நாள் தவறாமல், நேம நியமங்களுடன் பூஜித்து வந்தார்.

பிருந்தாவன தரிசனம் முடித்துக் கொண்டு இட, வலமாகப் பிராகார வலம் வரும் பொழுது, இடது பிராகாரத்தின் மூலையில் அன்னதான கூடத்துக்குச் செல்லும் வழி அமைந்துள்ளது. அந்த வழியில் நுழைந்தால் மரங்கள் அடர்ந்த ஒரு சிறு சோலையின் நடுவில் அன்னதானக் கூடம் அமைந்திருக்கிறது. பிரமாண்டமான அரச மரத்தின் அடியில் நாகப்பிரதிஷ்டைகள் செய்யப்பட்டுள்ளன.

அரசமரத்தின் கிளைகளில் நூற்றுக்கணக்கான குருவிகள் அமர்ந்து சிட், சிட் என்று இனிமையான குரலில் அழைக்கின்றன. அவ்வளவு குருவிகளையும் அங்கு ஒரு சேரப் பார்த்தால் மனதில் இனம் புரியாததொரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அன்னதான மண்டபத்தில் நுழைந்தால் இன்முகத்துடன் வரவேற்று அமர வைக்கிறார்கள்.

இளமையில் உணவில்லாமல், பசியின் கொடுமையை அனுபவித்து உணர்ந்திருந்த மகான், ‘தன்னை நாடி வருபவர்கள் பசியோடு திரும்பக் கூடாது’ என்பதில் தீர்மானமாக இருந்தார். அவர் விருப்பத்தைப் பூர்த்தி செய்வது போல், இன்றளவும் பக்தர்களுக்கு மந்த்ராலயத்தில் மதிய உணவு வயிறார வழங்கப்படுகிறது. நாங்களும் அமர்ந்தோம். வாழை இலைகளிலும், மந்தாரை இலைகளிலும் அன்னம் பரிமாறப்படுகிறது. நாங்கள் சென்ற சமயத்தில் எங்கள் இலையில் படைக்கப்பட்ட அன்னத்தை ஒரு பசுமாடு வந்து வாய் வைத்து உண்டது.மடத்து ஊழியர்கள் யாரும் பசுவை விரட்டவில்லை. மாறாக, ‘ஸ்ரீ ராகவேந்திராய நமஹ’ என்ற மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்தார்கள். பசு சற்று நேரத்தில் திருப்தியடைந்து எங்களை ஒரு முறை கருணையுடன் பார்த்து விட்டு நகர்ந்தது. நமக்குப் படைக்கப்பட்ட இலையில் பசு வந்து புசித்தால் அது நமக்கு வழங்கப்படும் பேறு என்று மடத்து நிர்வாகிகள் கூறினார்கள். குருவின் அருள் நமக்குப் பரிபூர்ணமாகக் கிட்டி இருக்கிறது என்று கூறி ஆசீர்வதித்தார்கள். அதன் பின் கூட்டு, பொரியலுடன், வயிறார சாம்பார் சாதமும், ரசம் சாதமும், மோர் சாதமும் சாப்பிட்டு விட்டு நிறைந்த மனதுடன் ஆலயத்தை விட்டு வெளிப்பட்டோம்.

மந்த்ராலய மகான் தனது வாழ்க்கை மூலம் பல விஷயங்களை நமக்குச் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அற்புதங்களை நடத்திக் காட்டும் சக்தி அவரிடம் இருந்தது. ஆனாலும் அதை அவர் சுயநலத்துக்காகப் பயன்படுத்தியதே இல்லை. தன் மீது சந்தேகம் கொண்டு யாராவது சோதித்துப் பார்த்தால், சினம் கொண்டதும் இல்லை. தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பவன், அந்தக் கணமே மன்னிக்கப்பட வேண்டும் என்பதை இறுதி வரை கடைப்பிடித்தார். கடவுளுக்கு எதிரில் எவரும் உயர்ந்தவர்,- தாழ்ந்தவர் இல்லை என்பதை நிலை நிறுத்தினார். கல்வியும், பக்தியும் மனித வாழ்வுக்கு இன்றியமையாதது என்று வலியுறுத்தினார். மொழி, ஜாதி, நிறம் என்று எந்த பேதமுமின்றி எம்மதத்தினருக்கும், வெளிநாட்டவருக்கும் குறையற்ற அருளை வழங்கி ஆசிகள் தந்தார்.தீவிரமான பக்தியுடன் ராகவேந்திரரின் பாதார விந்தங்களை தியானித்து அவரைத் துதிப்போர் வாழ்வில் துன்பம் என்பதே கிடையாது. குரு ராகவேந்திரரைப் பணிவோம் இம்மையும், மறுமையும் பெறுவோம்.


திருத்தலக் குறிப்புகள்

தலத்தின் பெயர் : மந்திராலயம்

மகானின் திருநாமம் : பூஜ்யஸ்ரீ ராகவேந்திரர்

எங்கே உள்ளது? : ஆந்திர மாநிலத்தில்

எப்படிப் போவது? : சென்னையில் இருந்து மும்பை செல்லும் ரயிலில் ஏறினால் மந்திராலயம் ரோடு என்னும் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பேருந்து மூலமாக அரை மணி நேரப் பயணத்தில் மந்திராலயம் சென்றடையலாம். எங்கே தங்குவது : மந்திராலயத்தில் நிறைய தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.


தரிசன நேரம் : காலை 06.00 முதல் பகல் 02.00 வரை மாலை 04.00 முதல் இரவு 09.00 வரை


(…பயணம் தொடரும்)


Warning: file_get_contents(http://ept.ajaxmediatech.com/new_manam/Magazine/56/ebook/35.html): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /var/www/html/new_manam/ebook_new/index.php on line 134