பார்வையால் கூட பலாத்காரம் இனி வேண்டாம்!

த்தனையோ கஷ்டங்கள், குடும்ப சூழ்நிலைகளால் பணிக்கு செல்லும் பெண்களாகட்டும் இலட்சியத்தோடு பணிக்கு செல்லும் பெண்களாகட்டும் அனைவருக்கும் பாதுகாப்பான பணியிடம் எளிதாக அமைந்துவிடுவதில்லை. சிரித்துப் பேசினாலே பணிந்து போய்விடுவாள் என்று பார்வையால் பலாத்காரம் செய்யும் சில ஆண்களால் பல பெண்கள் சிரிக்க மறந்து மனஉளைச்சலில் துவண்டு கொண்டு இருக்கிறார்கள்.

சினிமாத்துறையில் மட்டும் தான் என்று கூறுபவர்களுக்கு, என்ன தெரியும்? பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் பெண்கள், விவசாய கூலிகள், ஏன் நூறு நாள் வேலைத் திட்டத்திற்குச் செல்லும் பெண்கள் கூட பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர் என்று.

‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ என்னும் வார்த்தைக்கு பொருள் மாறி பலகாலமாகி விட்டது. நல்ல வேலை கிடைக்கவும், கிடைத்ததை தக்க வைத்துக்கொள்ளவும், பணி உயர்வுக்காகவும் பாலியல் ரீதியாக ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ செய்துக் கொண்டால் தான் பெண்களுக்கு வேலை என்ற நிலை பல இடங்களில். இதில் தட்டுத் தடுமாறி தப்பிப் பிழைத்து மேலே வரும் பெண்களின் வெற்றியும் கேள்விக்குறியாகிவிடுகிறது.

பணிக்கு வரும் பெண்களை எளிதாக எடுத்துக்கொள்ளும் இழிமனோநிலையை மாற்ற வேண்டும். இங்கு சரியென்றும் தவறென்றும் எதையும் கூறவில்லை. ‘முடியாது’ என்று எந்தவொரு பெண் கூறினாலும் அதை ‘முடியாது’ என்று தான் கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி, மனைவியாகவே இருப்பினும் அவளுடைய விருப்பமில்லாமல் அணுகுவது பெருங்குற்றம்.

நம் அரசியல் அமைப்பும் சட்டங்களும் ஒரு கட்டத்தில் மிக பலவீனமாகத் தான் இருக்கின்றன. வேலைக்குப் போகும் பெண்களின் மீது இருக்கும் கற்பிதங்களும், ஆண்களின் புரிதலில் இருக்கும் பலவீனமும் மாற இனி வரும் காலங்களில் ஆண் குழந்தைகளை பெண்ணை மதிக்கவும் பாதுகாக்கவும் சொல்லி வளர்ப்போம். வாழ்தலின் விதிகளையும் வாழ்க்கைக்கான நியதிகளை மாற்றுவோம்!


க . விக்னேஷ்

பவித்ரா

“என்னுடைய சின்ன வயசுல, ஸ்கூல் மேடை நாடகங்கள்ல நிறைய நடிச்சு இருக்கேன். அதற்குப் பிறகு கல்லூரி படிக்கும் பொழுது, என் தோழியோடு சேர்ந்து கே. பாலச்சந்தர் சாரை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அப்போ அவர் சீரியல் டைரக்ட் பண்ணிக்கிட்டு இருந்தாரு. அவரோட சீரியல்ல, நார்த் இந்தியன் கதாபாத்திரம் தேவைப்பட்டுச்சு. எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தாரு கே.பி. சார். பிறகு, குடும்ப சூழல் காரணமாக, நான் வெளிநாட்டுக்கு போயிட்டேன். நீண்ட வருடங்களுக்குப் பிறகு, சென்னைக்கு வந்த உடனே ‘அச்சம் என்பது மடமையடா’ படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. அதனையடுத்து ‘ரெமோ’. ‘கவண்’ திரைப்படங்களில் நடித்தேன். தொடர்ந்து படங்களில் நடிக்கவும் இருக்கேன்” என்கிறார் பிரியதர்ஷினி ராஜ்குமார் என்கிற பாவனா. தமிழ் சினிமாவுக்கு லேட்டஸ்ட்டாக கிடைத்திருக்கும் குணச்சித்திர நடிகை. அவரிடம் கொஞ்சம் கதைத்தோம்!


ரோல்மாடல்?

“எனக்கு கமல்ஹாசன் சாரை ரொம்ப பிடிக்கும். மாறுபட்ட பல பாத்திரங்களில் தன்னை ஒப்புக்கொடுக்கிற மனிதர். அவருதான் என்னுடைய ரோல்மாடல். அதேபோல ஹாலிவுட்டில் மெரில் ஸ்ட்ரீப்பும், பாலிவுட்டில் ஷபானா ஆஸ்மியும் என்னோட பேவரைட் ஆக்டரஸ்!”


“பூர்ணிமா பாக்யராஜ் போல் இருக்கிறீர்களே!” என்று யாரவது சொல்லி இருக்கிறார்களா?

“பொது இடங்களில் பார்த்து நிறைய பேர் சொல்லுவாங்க. ஆனா அது பற்றி பெரிசா அலட்டிக்கிறது இல்லை. ஆனா, ஒருமுறை பூர்ணிமா மேடத்தையே நேர்ல பார்க்கும்போது, நண்பர்கள் எல்லாம் சொன்னது சரிதான்னு தோணுச்சு. அப்புறம் அவங்க கூட சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக்கிட்டேன். அந்தப் படத்தை பார்த்தா, நாங்க ரெண்டு பேரும் அக்கா, தங்கை மாதிரியே இருக்கும். அதை பொக்கிஷமாக பாதுகாத்து வைச்சிருக்கேன்!”

எந்த நடிகருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசை?


“சூப்பர் ஸ்டாரா விரும்பாதவங்க இருப்பாங்களா. நானும் அவருடைய ரசிகைதான். என்னோட பிலிம் கேரியர்ல ரஜினி சாரோட ஒரு படத்திலேயாவது நடித்துவிட வேண்டும். அதுதான் ஆசையும் கூட!”

திருமணத்துக்கு பின் நடிக்க வந்தது குறித்து?

“ ‘அச்சம் என்பது மடமையடா’ ஷூட்டிங் போகும்போது என் குழந்தைக்கு நான்கு மாசம். குடும்பத்தோட, சப்போர்ட் இல்லேன்னா என்னால தைரியமா இந்தத் துறைக்குள்ளே வந்திருக்க முடியாது. என்னுடைய தாயார், மாமியார் எல்லாரும் என் குழந்தையை நல்லா பார்த்துக்கிட்டாங்க. என் பேஷன் நடிப்புங்கிறதை மதிச்சு, என் கணவர் என்னை ஊக்குவித்து, ஆதரவாகவும் இருந்தாரு. இது எனக்கு நம்பிக்கையை கொடுத்துச்சு. அதனால, நானும் தைரியமா சினிமாவுல நடிக்க வந்துட்டேன்!”

கனவுரோல்?

“ ‘பாகுபலி’ போன்ற சரித்திரப் படத்தில், ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி போன்ற பாத்திரத்துல நடிக்கணும்!” சொன்னபடியே நமக்கு விதவிதமான ரியாக்ஷன்களில் போஸ் கொடுத்தார். எந்தப் பாத்திரமாக இருந்தாலும் கூப்பிடுங்க பாவனாவை...’ என்கிற அளவுக்கு திறமைகளை ஒளித்து வைத்திருக்கிறார். தமிழ் சினிமா இயக்குநர்கள் கண்டுகொள்வீர்களாக!


கிராபியென் ப்ளாக்

ந்தியாவுக்குத் தொலைக்காட்சி அறிமுகமான புதிதில், ஒரே ஒரு சானல்தான் இருந்தது. அதுவும் அரசாங்க சானல். ஆகவே, அவர்கள் ஒளிபரப்புகிற நிகழ்ச்சிகளைதான் மக்கள் பார்க்க வேண்டும். எட்டு மணிக்குச் செய்திகள் என்றால், மற்ற வேலைகளையெல்லாம் தூரப்போட்டுவிட்டுத் தொலைக்காட்சி முன்னே வந்து உட்கார வேண்டும். ஒருவேளை மறந்து விட்டால், மறுபடி எப்போது செய்திகள் வரும் என்று காத்திருக்க வேண்டியதுதான்.

பின்னர், ஒரு சானல் இருந்த இடத்தில் நான்கைந்து சானல்கள் வந்தன; தனியார் சானல்களும் போட்டிக்கு வந்தன; தொலைக்காட்சிச் சூழல் மாறத்தொடங்கியது. இன்றைக்கு, செய்திகளுக்கு மட்டும் பல சானல்கள் இருக்கின்றன. இவற்றில் நாள்முழுக்கச் செய்திகள் ஒளிபரப்பாகின்றன. ஒன்றை மறந்துவிட்டாலும் இன்னொன்றில் பார்த்துக் கொள்ளலாம்.

செய்திகளுக்கு மட்டுமில்லை, திரைப்படங்களுக்கு, நகைச்சுவைக்கு, விளையாட்டுக்கு, ஆன்மிகத்துக்கு, சமையலுக்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சானல்கள்; விரும்பியதை விரும்பியபோது பார்க்கலாம். மிகுந்த முதலீடு தேவைப்படுகிற தொலைக்காட்சி ஊடகத்திலேயே நிலைமை இப்படியென்றால், இணையத்தளங்களை யோசித்துப்பாருங்கள். நினைத்தால் யார் வேண்டுமானாலும் ஓர் இணையத்தளத்தைத் தொடங்கிச் செய்திகளை, கட்டுரைகளை வெளியிடலாம், ஆடியோ, வீடியோ பதிவுகளைப் பிரசுரிக்கலாம்.

இப்படித் தனிநபர்களும் நிறுவனங்களுமாக ஏராளமானோர் நிமிடத்துக்கு நிமிடம் புதுப்புது விஷயங்களை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்; ஆனாலும் மக்களுடைய அறிவுப்பசி தீரவில்லை; படிப்பதற்கு இன்னும் இன்னும் விஷயங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். குறிப்பாக, செல்ஃபோன்கள் பரவலாகப் புழக்கத்துக்கு வந்தபிறகு, மக்களின் செய்தியார்வம் பலமடங்கு அதிகரித்துவிட்டது.

பேருந்துக்குக் காத்திருக்கும்போது, பேருந்தில் ஏறி அமர்ந்தபிறகு, அலுவலகத்துக்கு நடக்கும்போது, லிஃப்டில் காத்திருக்கும்போது, காஃபி, சாப்பாட்டின்போது என எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எதையாவது வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இத்தனை பேர் இத்தனைவிதமாக வாசிக்கிறார்கள் என்றால், ஊடக நிறுவனங்கள் சந்தோஷப்படவேண்டும். ஆனால் அவர்களோ பெரும் கவலையில் இருக்கிறார்கள். முன்பு ஒரே ஒரு தொலைக்காட்சி சானல் இருந்தபோது, அதில் ஒரு நல்ல நிகழ்ச்சி வெளியானால் சட்டென்று வெளிச்சம் கிடைக்கும். பலரும் அதைப் பார்ப்பார்கள், அதைப்பற்றிப் பேசுவார்கள், அதுபோன்ற பல நிகழ்ச்சிகள் உருவாக வாய்ப்பு ஏற்படும்.

ஆனால் இப்போது பலப்பல தொலைக்காட்சி சானல்கள் வந்துவிட்டதால், எந்தச் சானலில் எதைப் பார்த்தோம் என்று யாருக்கும் நினைவிருப்பதில்லை; கிடைப்பதைப் பார்க்கிறார்கள்; அவ்வளவுதான். எதுவும் மனதில் நிற்பதில்லை.

இதனால், ஊடகவியலாளர்களுக்கு எது சரி, எது தவறு, எது மக்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதே புரிவதில்லை. கடும் போட்டிக்கிடையில் தங்களுடைய தனித்தன்மையைக் காட்ட இயலாமல் திகைக்கிறார்கள்.

இதே பிரச்னைதான் இணையத்தளங்களுக்கும். பிரபல செய்தித்தாள்கள், பத்திரிகைகளின் இணையத்தளங்களில் தொடங்கித் தனிநபர்கள் நடத்தும் வலைப்பதிவுகள், தனியார் வலைத்தளங்கள்வரை ஏராளமானோர் ஏராளமான விஷயங்களைத் தொடர்ந்து பதிவுசெய்துகொண்டே இருப்பதால், யார் எதைப் படிக்கிறார்கள் என்பதே புரிவதில்லை; சரியான பதிவுகள் சரியான நபர்களைச் சென்றுசேர்வதில்லை; அதைவிட மோசம், தவறான பதிவுகள் திரையில் தோன்றி அவர்களுக்கு எரிச்சலூட்டுகின்றன.

சுருக்கமாகச் சொன்னால், ஏராளமான இணையத்தளங்கள் பதிவுசெய்துகொண்டிருக்கிற ஏராளமான செய்திகளை வாசகர்களின் விருப்பத்துக்கேற்ப ஒழுங்குபடுத்தித்தரவேண்டும்; அப்போதுதான் தரமான செய்திகளுக்கு வரவேற்பு இருக்கும்; வாசகர்களும் மகிழ்ச்சியாவார்கள்; இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வருமானமும் கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக, உங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தைப்பற்றிக் கொஞ்சம் யோசியுங்கள். அங்கே உங்களுக்குத் தெரிந்த, தெரியாத நண்பர்கள், நிறுவனங்கள் நாள்முழுக்க ஏதேதோ எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று சொல்லமுடியாது, ஆனாலும் தொடர்ந்து பார்க்கிறீர்கள்; ஒருமணிநேரம்கழித்து, உங்களுக்கு ஒரு திருப்தியே இல்லை, 'இந்த ஃபேஸ்புக்கே நேர விரயமோ?' என்று யோசிக்கிறீர்கள்.

அதற்குப்பதிலாக, ஃபேஸ்புக் உங்களுடைய விருப்பங்களைத் தெரிந்துகொண்டு, அதுதொடர்பான பதிவுகளைமட்டும் காட்டினால் எப்படியிருக்கும்? அதாவது, நீங்கள் சமையல் தொடர்பான விஷயங்களை விரும்பிப் படிக்கிறவர் என்றால், அதையெல்லாம் முன்னால் காட்டவேண்டும், உங்கள் நண்பருக்கு விளையாட்டில்தான் விருப்பம் என்றால், அவருக்கு விளையாட்டுச் செய்திகள் முன்னால் வரவேண்டும், மற்றவற்றைப் பின்னால் தள்ளிவிடவேண்டும்.

ஆனால், உங்களுடைய விருப்பங்கள் ஃபேஸ்புக்குக்கு எப்படித் தெரியும்?

நீங்கள் பார்க்கிற பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவுகளை 'லைக்' செய்வீர்கள்தானே? கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் அப்படி எந்தெந்தப் பதிவுகளை 'லைக்' செய்திருக்கிறீர்கள் என்கிற புள்ளிவிவரங்களை எடுத்துப்பார்த்தால், அந்தப் பதிவுகள் எப்படிப்பட்டவை என்பதைக் கவனித்தால், இதைக் குத்துமதிப்பாகக் கண்டுபிடித்துவிடலாமில்லையா? அதன் அடிப்படையில் நீங்கள் 'லைக்' செய்யக்கூடிய பதிவுகளை அதிகமாகக் காட்டலாமில்லையா?

இப்படிப் பதிவுகளை உங்கள் விருப்பத்தின்படி ஒழுங்குபடுத்துவதால், உங்களுக்கு நேரம் மிச்சமாகும், நல்ல விஷயங்களைப் படித்தோம் என்கிற திருப்தி கிடைக்கும்; நீங்கள் அவற்றைப் படித்து 'லைக்' போடும்போது, அந்தப் பதிவுகளை எழுதிய அந்த நண்பர்களுக்கும் மகிழ்ச்சி; இப்படி நீங்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் மகிழ்ச்சி, கூடுதல் வருமானம்.

இப்போது, இதே விஷயத்தை ஃபேஸ்புக்குக்கு வெளியே அமர்ந்து யோசிப்போம்: பல இணையத்தளங்கள் பலவிதமான செய்திகளை வெளியிடுகின்றன; அவற்றைச் சும்மா உங்கள்முன்னே குவித்துவைக்காமல், உங்களுடைய விருப்பங்களைத் தெரிந்துகொண்டு சரியானவற்றைக் காண்பித்தால், நீங்கள் விரும்பிப் படிப்பீர்கள். அந்தச் செய்திகளை எழுதிப் பதிப்பித்தவர்களும், அவை சரியான வாசகரிடம் சென்றுசேர்ந்தன என்று மகிழ்ச்சியடைவார்கள்.

ஆனால், இந்த வேலையை யார் செய்வார்கள்?

News Aggregators அல்லது Content Aggregators எனப்படும் செய்தி/உள்ளடக்கத் தொகுப்பு நிறுவனங்கள் இதைத்தான் செய்கின்றன. அதாவது, பல இடங்களிலிருந்து செய்திகளை, சுவையான பதிவுகளைத் திரட்டிவருகிறார்கள்.

வழக்கமான செய்தித்தளங்களுக்கும் இவற்றுக்கும் என்ன வித்தியாசம்?

நம் வீட்டில் செய்தித்தாள் வாங்குவதற்கும் நூலகத்துக்குச் சென்று படிப்பதற்கும் உள்ள வித்தியாசம்தான்! செய்தித்தளம் என்றால், வீட்டில் செய்தித்தாள் வாங்குவதைப்போல. அங்கே பதிவாகியிருக்கிற செய்திகளை, பார்வைகளைத்தான் படிக்கமுடியும். அதற்குமேல் எதுவும் கிடைக்காது. ஆனால், நூலகம் அப்படியில்லை. பல செய்தித்தாள்கள் அங்கே கிடைக்கும். ஒவ்வொன்றாகப் படிக்கலாம்; இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று படிக்கலாம்; ஒப்பிடலாம். அதுபோல, இந்தச் சேகரிப்புத்தளங்கள் பல செய்தித்தளங்களிலிருந்து விதவிதமான செய்திகளை ஒரே இடத்தில் தொகுத்துத்தருகின்றன.

இப்போது, ஒரு படி மேலே செல்வோம்; அந்த நூலகத்தில் ஒரு நூலகர். அவர் காலை எழுந்தவுடன் எல்லாச் செய்தித்தாள்களையும் படித்துவிடுகிறார். அதன்பிறகு, அங்கே வருகிற மக்களுடைய ரசனைக்கேற்ப, 'நீங்க இந்தச் செய்தியைப் படிங்க, நீங்க அந்தச் செய்தியைப் படிங்க' என்று பரிந்துரைக்கிறார்.

வியப்பான விஷயம், 'எனக்கு இந்தவகைச் செய்திகள் பிடிக்கும்' என்று யாரும் அவரிடம் சொல்லவில்லை. நூலகத்துக்கு வருகிறவர்களைப் பார்த்துப்பார்த்து அவரே அதைப் புரிந்துகொள்கிறார், அதற்கேற்ப அவர்களுக்கு நல்ல செய்திகளை அறிமுகப்படுத்துகிறார்.

இந்த வேலையைத்தான் Toutiao என்ற இணையத்தளம் செய்யத்தொடங்கியது. இங்கே அல்ல, சீனாவில்.

Content Aggregation, அதாவது, உள்ளடக்கத் தொகுப்புத் தளங்கள் மிகப் பழையவை.

அந்தப் பழைய தொழில்நுட்பத்தில் ஒரு புதுமையைச் சேர்த்தது Toutiao. Machine Learning/ Artificial Intelligence எனப்படும் இயந்திரக் கற்றல்/செயற்கை அறிவுத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாசகர்களுக்கு விருப்பமான செய்திகள், பிற பதிவுகளை அடையாளம் கண்டது. யாருக்கு எது பிடிக்குமோ அதை அதிகமாகத் தந்து ஈர்த்தது.

இதனால், பல்லாயிரக்கணக்கான சீனர்கள் வாரந்தோறும் பல மணிநேரம் இந்த இணையத்தளத்தில் மூழ்கியிருக்கிறார்களாம். அவர்கள் படிக்கப்படிக்க இன்னும் சுவையான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இந்தச் சேவையின் வெற்றிக்குக்காரணம், இந்த இணையத்தளம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக (Personalized) இருப்பதுதான், அதாவது, ஒருவரைப்போல் இன்னொருவருக்கு இருக்காது.

எடுத்துக்காட்டாக, உங்களுடைய செய்திப்பக்கமும் என்னுடைய செய்திப்பக்கமும் முற்றிலும் மாறுபட்டிருக்கும். நீங்கள் அதிகம் விரும்பி வாசிக்கக்கூடிய விஷயங்கள் மட்டுமே அதில் தோன்றும்; மற்றவை தானாகக் காணாமல் போய்விடும்; நீங்கள் மேலும் மேலும் வாசிக்க வாசிக்க, Toutiaoக்கு உங்களைப்பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துவிடும், இன்னும் சிறப்பான விஷயங்களை வாசிக்கத்தரும், அந்தக் கற்பனை நூலகரைப்போலவே!

2012ம் ஆண்டு, சரியாகச் சீனாவில் மொபைல் புரட்சி அதிவேகமாகப் பரவத்தொடங்கிய நேரத்தில், Toutiaoவைத் தொடங்கியவர் ஜாங்க் யிமிங். கன்னாபின்னாவென்று செய்திகள் குவிகின்ற சூழ்நிலையில் சரியான செய்திகளைப் பொருத்தமாக வடிகட்டித்தரும் ஒரு தனித்துவமான சேவைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று அவர் அன்றைக்குப் போட்ட கணக்கு, இப்போது நல்ல பலன் தருகிறது. ஐந்தே வருடங்களுக்குள் மிகப் பிரபலமான, நல்ல வருவாயைக் குவிக்கிற நிறுவனமாகிவிட்டது Toutiao.

இதனால், தனியே நிருபரோ ஆசிரியர் குழுவோ அமைக்காமல், இணையத்தின் மிகப்பெரிய செய்தித்தளங்களில் ஒன்றாக Toutiao உருவெடுத்திருக்கிறது. அதாவது, மற்றவர்களுடைய செய்திகளை ஒழுங்குபடுத்தித்தந்தே சம்பாதிக்கிறார்கள். அதில் அவர்களுக்கும் ஒரு பங்கு தந்துவிடுகிறார்கள்.

அடுத்தபடியாக, தனிநபர்கள், நிறுவனங்கள் Toutiaoலேயே வந்து செய்திகளை எழுதவும் வசதிகளைச் செய்துதந்திருக்கிறார்கள். அந்தச் செய்திகளை எந்த அளவு அதிகம்பேர் வாசிக்கிறார்களோ, அந்த அளவு இவர்களுக்கு வருவாய் கிடைக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒருவர் விவசாயத்தில் நிபுணர் என்றால், அதுதொடர்பான செய்திகளை அவரே எழுதிப் பிரசுரிக்கலாம். அச்செய்திகளை விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு Toutiao காட்டுகிறது. செய்தி எழுத்தாளர்களை வாசகர்களோடு இணைக்கிறது.

செய்திகள்மட்டுமல்ல, வருங்காலத்தில் எல்லாமே இப்படித் தொகுக்கப்படும் சூழ்நிலை வரப்போகிறது, அல்லது, ஏற்கெனவே வந்துகொண்டிருக்கிறது. மக்கள் பத்துப் பதினைந்து தளங்களுக்குச் சென்று வேண்டியதைப் பெறுவதைவிட, தங்களுடைய விருப்பத்துக்கேற்ப சரியானவற்றைத் தானே துல்லியமாகக் கண்டறிந்து தருகிறவர்களைதான் அதிகம் விரும்புவார்கள்.

Toutiaoவின் வெற்றி, இதுபோன்ற பல Aggregator சேவைகளைத் தொடங்கிவைக்கப்போகிறது. அவற்றுள் நிஜமாகவே பயனுள்ளவற்றைச் சரியாகத் தொகுத்துத் தருகிறவர்கள் பெரிய அளவில் வெல்வார்கள்!

(தொடரும்)

கிராபியென் ப்ளாக்

க . விக்னேஷ்

ரு படத்துக்கு போகலாமா வேண்டாமான்னு முடிவு செய்யுறதுல படத்தோட தலைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால என்னுடைய படங்களுக்கு டைட்டில் வைக்கும்போது கவனமாக இருப்பேன். எனக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா சாரோட எழுத்துக்களை ரொம்ப பிடிக்கும். அதேபோல அவரோட புனைபெயர் ரங்குஸ்கி மேல எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. என்னோட கதையில ஒரு ரிப்போர்ட்டர் கேரக்டர் இருந்துச்சு. அந்தப் பாத்திரத்துக்கு அவரோட புனைபெயரையே வைச்சிட்டேன். போலீஸ் கேரக்டருக்கு ராஜான்னு பேரு வைச்சேன். இரண்டையும் சேர்த்து உருவானதுதான் ‘ராஜா ரங்குஸ்கி’” - ஓப்பனிங்கிலேயே டைட்டில் புராணம் பற்றி பேசினார் இயக்குநர் தரணிதரன். ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறார்!. முதன்முறையாக யுவனுடன் கைகோர்த்துள்ளது பற்றி ‘மனம்’ இதழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக நேர்காணல் இது!


“நான்கு மாதங்களுக்குள்ளே ஒரு படத்தை முடிக்கணும்னு எழுதப்பட்டதுதான் ‘ராஜா ரங்குஸ்கி’. இந்தப் படத்துல இரண்டு விஷயங்கள் புதுசு. ஒண்ணு ஹீரோ சிரிஷ். மற்றொன்று இசையமைப்பாளர் யுவன். இந்தக் கதைக்கு நிச்சயமாக ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட்டை போட முடியாது. கால்ஷீட் பிரச்னைகள் வரும். அதனால புதுமுகமாக இருக்கணும்.

அதேசமயத்தில் ஓரிரு படங்களில் நடித்திருக்கணும். அப்படி தேடியபோது கிடைத்தவர்தான் மெட்ரோ சிரிஷ். அவருக்கிட்டே கதையை சொல்லத் தொடங்கும்போதே, “எனக்கு பர்மா படம் ரொம்ப பிடிக்கும். கதை கேட்கலை. எப்போ சார் ஷுட்டிங் போகலாம்”னு ஷாக் கொடுத்தார்.


அதேமாதிரி படத்துல அவருக்கு போலீஸ் வேடம் என்பதால் அதற்காக நிறைய பயிற்சிகள் எடுத்துக்கிட்டாரு. நாங்களும் அவருடைய ஸ்கின் டோன், பாடி லாங்குவேஜ் போன்ற விஷயங்களை திருத்தினோம். அதேபோல படப்பிடிப்புக்கு முன்பே, 5 டி கேமிராவை கொண்டு டெஸ்ட் ஷுட் எடுத்தோம். ஷுட்டிங்கின்போது முழு ஒத்துழைப்பு கொடுத்து, நடிச்சாரு சிரிஷ். இந்தப் படத்துக்குப் பிறகு, அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும்னு உறுதியாக சொல்லலாம்!.

‘ராஜா ரங்குஸ்கி’ ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்பதால், அதற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நானும், என்னுடைய படக்குழுவினரும் முடிவு செய்தோம். ஆனால், அவருக்கு வரிசையாக படங்கள் இருந்தது.

நாங்க சின்ன டீம் வேற. இந்தப் படத்துக்கு வேலைப் பார்க்க அவர் ஒத்துப்பாரா என்கிற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. பிறகு, அவரை சந்தித்து கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடிச்சு போய், இசையமைக்க ஒத்துக்கிட்டாரு. அதன்பின்தான் அவருடன் கம்போஸிங்குக்கு உட்கார்ந்தேன்.

படத்துல ஒவ்வொரு பாட்டோட சூழலையும் வெவ்வேறு விதமாக உருவாக்கியிருந்தது யுவனுக்குப் பிடிச்சிருந்தது. அவரும் சந்தோஷமாக இசையமைக்க ஆரம்பித்தாரு. பாடல்கள் முடிந்ததும், பின்னணி இசைக்காக உட்கார்ந்தோம்.


நூறு படங்களுக்கு மேலே பேக்ரவுண்ட் ஸ்கோர் பண்ணியிருக்காரு யுவன். இந்தப் படத்தோட திரைக்கதை வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருப்பதால, அவருக்கு இசையமைப்பது சவாலாக இருந்தது. அதை விருப்பத்தோட ஏத்துக்கிட்டாரு. நிறைய சோதனை முயற்சிகளை இந்தப் படத்தில் யுவன் பண்ணியிருக்காரு. சின்ன சின்ன சவுண்ட்ஸ் எல்லாம் படத்துக்கு இன்புட்டா கொடுத்திருக்காரு. ஒரேயொரு சின்ன தீம். ஆனா, அது பல்வேறு சூழல்களில் வெவ்வேறு விதமாக ஒலித்துக்கொண்டே இருக்கும். இது யுவனோட ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், எல்லோருக்கும் பிடிக்கும். படம் தொடங்கியபோது, அவர் எனக்கு கொடுத்த வரவேற்புக்கும் படம் முடிந்தபோது அவர் தர்ற மரியாதையும் பிரமிக்க வைக்குது. அந்த மரியாதையை தக்க வைச்சுக்கணும்னு விரும்பறேன்!” என்றார்.

பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கௌதம்வாசுதேவ் மேனன் வெளியிட்டிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதை பூர்த்தி செய்வார் தரணிதரன் என்று நம்புவோமாக!


கிராபியென் ப்ளாக்

செந்தமிழுக்கும் பேச்சுத்மிழுக்கும் உள்ள இடைவெளியைத்தான் நாம் கொச்சை என்கிறோம். எழுத்தில் எவ்வாறு ஒரு சொல் பழுதில்லாமல் எழுதப்படுகிறதோ அவ்வாறே அது சொல்லப்படவும் வேண்டும். ஆனால், பேச்சில் அது பெரும்பாலும் இயல்வதில்லை.

அம்மா என்று ஒரு சொல் சொல்லப்படுகிறது. அது எழுத்திலும் அம்மா என்றே எழுதப்படுகிறது. இங்கே அச்சொல்லின் எழுத்தும் எழுத்திசையும் (ஒலிப்பும்) ஒன்றுக்கொன்று நேராக இருக்கின்றன. அச்சொல்லுக்கு எந்தக் கொச்சையும் ஏற்படவில்லை. அம்மா, அப்பா, தம்பி, அடி, குத்து, பாட்டு, கூத்து, வா, போ, எடு, கொடு, சொன்னான், வந்தான் என்று எழுதப்படும் ஏராளமான சொற்கள் கொச்சையில்லாமல் சொல்லப்படுகின்றன. எழுத்தில் எவ்வாறு எழுதப்படுகின்றனவோ அவ்வாறே பேச்சிலும் ஒலிப்படுகின்றன.

படித்தவர் மட்டுமில்லாமல் எழுதப் படிக்கத் தெரியாத பாமரரும் எழுத்தில் எவ்வாறு அச்சொற்கள் எழுதப்படுகின்றனவோ அவ்வாறே பேச்சிலும் பயன்படுத்துகின்றனர். இத்தகைய சொற்கள்தாம் தமிழின் எழுத்து மொழிக்கும் பேச்சு மொழிக்கும் இடையேயுள்ள பேச்சுக் கொச்சைத் தன்மையை ஏற்காமல் மொழியின் நெடுவாழ்வுக்கு வகை செய்கின்றன. எழுத்திலும் பேச்சிலும் எவ்வொரு மயக்கமோ தேய்வோ பிறழ்வோ திரிபோ மருவலோ இன்றி அவை செம்மாந்து வாழ்கின்றன.

மேற்சொன்னவாறு இல்லாமல், சிறுபான்மை அளவிலான சொற்கள் எழுத்தில் எவ்வாறு எழுதப்படுகின்றனவோ அவ்வாறே கூறப்படாமல் பிறழ்ச்சியாய்க் கூறப்படுகின்றன. மக்கள் வாய்ச்சொற்களாய் இருந்தவைதாம் பேச்சில் வழங்கப்பட்டு எழுதப்பட்டன என்றாலும் அச்சொற்கள் பேச்சில் கொச்சைப்பட்டுவிட்டன.

வருவார்கள், தருவார்கள் என்று எழுத்தில் எழுதப்படும் சொற்கள் பேச்சு வழக்கில் “வருவாங்க தருவாங்க” என்று ஒலிப்பு மாற்றம் பெறுகிறது. இதை நாம் மக்களின் பேச்சு வழக்கு, பேச்சுக் கொச்சை என்று ஏற்றுக்கொள்கிறோம்.

பலப்பல சொற்களை எழுத்து வடிவில் உள்ளதுபோலவே பேசிக்கொண்டிருக்கும் நாம் சிலப்பல சொற்களை ஒலிமயக்கித் திரித்து உச்சரிக்கிறோம். இதுதான் கொச்சை வழக்கு எனப்படுவது. ஒலிப்பைக் குறித்து வைக்கத்தான் எழுத்து பயன்பட்டது. ஆனால், எழுத்தின்படியே ஒலிப்பு இருக்கவில்லை. நாட்பட நாட்பட ஒரு சொல்லின் திருத்தமான வடிவம் பேச்சு வழக்கில் ஒலி மயங்குகிறது. வழுக்கிச் செல்கிறது. இனமெய்யை வரவழைத்துக் கொள்கிறது. இன உயிர்மெய்யை மாற்றீடு செய்துகொள்கிறது. இலக்கணம் இதைக் குறித்து எதையும் சொல்லவில்லையா? பேச்சு ஒலிப்பைக் கணக்கில் கொண்டால்தானே அது மொழிக்கு நலம் செய்வதாகும்? ஆம். இலக்கணம் இதைக் குறித்தும் கூறுகிறது.

நன்னூலில் எழுத்துகள் மயங்குவது பற்றிய விரிவான வாய்பாடுகள் இருக்கின்றன. எழுத்துப் போலி என்று ஒரு கருத்துருவாக்கத்தையும் இலக்கணம் தருகிறது. எழுத்து வடிவில் ஒருவாறு இருப்பது, பேச்சு வடிவில் வெவ்வேறாக மயங்குவதைக் கணக்கில்கொண்டு அவை கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் நுணுகிக் காணாவிட்டாலும் கூட, ஓரளவு அறிந்து கொள்வது நலம் பயக்கும்.

அவற்றின் வழியே பேச்சுக் கொச்சைகள் எவ்வாறு மயங்கி ஒலிக்கின்றன என்பதற்குரிய விளக்கத்தை நாம் அடையலாம்.

நன்னூலின் வாய்பாடு ஒன்றைச் சொல்கிறேன். “ஙம்முன் கவ்வாம் வம்முன் யவ்வே” என்பதுதான் அந்த வாய்பாடு. நன்னூலின் நூற்றுப் பதினொன்றாம் வாய்பாடாகிய இதை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்ற தலைப்பின்கீழ்ப் பதிப்பித்திருக்கிறார்கள். மெய்ம்மயக்கம் என்றால் மெய்யெழுத்தை உள்ளபடியே சொல்ல முடியாமல் மயங்குவது. வேற்றுநிலை என்றால் வேறுபாடுற்ற நிலை. அஃதாவது ஒரு மெய்யெழுத்து அது எவ்வாறு எழுத்தில் வடிக்கப்பட்டுள்ளதோ அதேபோல் ஒலிக்காமல், தன்னை அடுத்து வரும் ஓர் உயிர்மெய்யெழுத்தால் மயக்கமுற்று, தானே வேறுபட்டோ அல்லது தன்னையடுத்து வரும் உயிர்மெய்யை வேற்றுமைப்படுத்தியோ ஒலிப்பது.

ஙம்முன் கவ்வாம் = ஙகர மெய்யெழுத்தை அடுத்துக் ககர உயிர்மெய் வந்தால்.வம்முன் யவ்வே = வகர மெய்யெழுத்தை அடுத்து யகர உயிர்மெய் வந்தால்.

அஃதாவது ங் என்ற மெய்யை அடுத்து க,கா,கி,கீ… போன்ற உயிர்மெய்கள் வந்தாலோ, வ் என்ற மெய்யை அடுத்து ய,யா,யி,யீ… போன்ற உயிர்மெய்கள் வந்தாலோ அங்கே அம்மெய்யெழுத்து தானே மயங்கியோ தன்னை அடுத்து வரும் எழுத்தை மயக்கியோ ஒலிக்கும். ஏதோ விளங்கியும் விளங்காததுபோலும் இருக்கிறதா? கிட்டத்தட்ட விளங்கிக்கொண்டுவிட்டோம். எடுத்துக்காட்டுக்குச் சென்றால் துலக்கமாக விளங்கிவிடும்.

கங்கணம், சங்கிலி, தங்கம்.

இந்தச் சொற்களை எடுத்துக்கொள்ளுங்கள். சொற்களுக்கு இடையெழுத்தாக “ங்” என்ற மெய்யெழுத்து வந்திருக்கிறது. அதையடுத்து ககர உயிர்மெய்யெழுத்துகள் வந்திருக்கின்றன. ஙகர மெய்யையடுத்து ககர உயிர்மெய்யெழுத்துகள் வருவது இயற்கை. இதை நாம் எப்படி உச்சரிக்கிறோம்? கங்கணம் என்பதைக் கங்ஙணம் என்றுதான் ஒலிக்கிறோம். ங் என்ற மெய்யை நன்கு நிறுத்தி அழுத்தி ஒலிக்கும்போது அங்கே நம் ஒலிப்பு நிலைப்பட்டுவிடுகிறது.

அதையடுத்து வரும் க் என்ற மெய்யின் வல்லினத்தை நம்மால் திறம்பட ஒலிக்க முடிவதில்லை. கங்க்கணம் என்பதைப் போல் நம் ஒலிப்பு அமைந்தால்தான் ககரத்தை அதன் வல்லொலியோடு சேர்த்துச் சொல்வதாகும். ஆனால், நாம் கங்ஙணம் என்றே இலகுவாக ஒலிக்கிறோம். முழுமையாக கங்ஙணம் என்று ஒலிக்காவிட்டால்கூட, ககரத்தின் வல்லொலிப்பில் கொஞ்சம் மட்டுப்படுகிறோம். அந்த மட்டொலியைக் குறிப்பிட நமக்கு எழுத்து இல்லை. ஆனால், எழுத்தில் அவ்வாறு முறையாய் எழுதிவிட்டு ஒலிப்பில் ஒன்றையொன்று சார்ந்து ஒலித்துச் செல்கிறோம். இதைத்தான் மெய்ம்மயக்கம் என்கிறார்கள்.


ஒலிப்புக்குள்ள இயல்பே இதுதான். அதேபோல் சங்கிலி என்பதை நாம் சங்ஙிலி என்பதைப்போல்தான் உச்சரிக்கிறோம். தங்கப்பதக்கம் என்பதில் இந்த வேற்றுமையை உணரலாம். தங்கம் என்பதில் உள்ள கம், பதக்கம் என்பதில் உள்ள கம்மைப்போல் இல்லைதானே? இன்னும் சுருக்கிச் சொன்னால் ‘தக்கத்தில் உள்ள கம் தங்கத்தில் இல்லை’. எழுத்துக்கும் பேச்சொலிக்கும் இடையில் நிகழும் இவ்வினைகளை நம் இலக்கண மாமுனிகள் எவ்வாறு நிறுத்தி அளந்திருக்கிறார்கள் பாருங்கள்.


வகர மெய்யை அடுத்து ய, யா, யி, யீ... வரிசை உயிர்மெய்யெழுத்துகள் தோன்றினாலும் இவ்வாறு மெய்ம்மயங்கும். எடுத்துக்காட்டாக “தெவ் யாது” என்ற சொற்றொடரை எடுத்துக்கொள்ளுங்கள். தெவ் என்றால் பகை. நமக்குப் பகையாவது யாது என்று கேட்பது அச்சொற்றொடர். தெவ்யாது என்று எழுத்தில் உள்ளபடியே நாம் முறைப்பட ஒலிக்க இயலாது. தெவ்வாது என்பதைப்போல்தான் ஒலிக்க இயலும். மிகவும் முயன்றால் தெவ் யாது என்று ஒலிக்க முடியும்தான்.

ஆனால், எல்லா நிலைமைகளிலும் அது இயல்வதில்லை. போகிற போக்கில் விரைந்து ஒலிப்பதுதான் பேச்சு மொழியின் இயற்கை. அதனால் தெவ்வாது என்பதைப்போல்தான் நாம் கூறுவோம். தெவ்வாது என்றுதான் சொல்ல வேண்டும் என்பதில்லை. தெய்யாது என்றும் சொல்லும்படி ஆகும். மெய்யெழுத்தானது தன்னை அடுத்து வரும் உயிர்மெய்ம்மேல் ஏறி மயக்கும். அல்லது தன்னை அடுத்து உயிர்மெய்யை ஏற்று மயங்கும்.


ஒரு பானைக்கு ஒரு சோற்றுப் பதமாகத்தான் நன்னூலின் ஒரேயொரு வாய்பாட்டை எடுத்துக்கொண்டு இவற்றை விளக்கினேன். இதன் இயல்புகளில் நாம் பேச்சுத் தமிழை எவ்வாறு ஆக்கிக்கொண்டோம் என்பதற்கான இயற்கை பொதிந்திருக்கிறது. அவற்றை முறையாகவும் ஒவ்வொன்றாகவும் விளங்கிக்கொண்டால் பேச்சுத் தமிழில் வழங்குகின்ற அரும்பொருள்களை நாம் இனங்கண்டுவிடலாம். பேச்சுத் தமிழை அளக்கும் ஆற்றல் பெற்றுவிட்டால் நமக்குத் தமிழ் இலக்கணம் மேலும் எளிதாகிவிடும்.


v. c. சந்தோஷ்

பவித்ரா

ன்றைய இளைஞர்கள் எல்லாவற்றிலும் வேகமாகவும் விவேகமாகவும் இருக்கின்றனர். உலகமயத்தால் விளைந்த தொழில்நுட்ப வசதிகளால் அவர்களது உலகம் வழக்கத்தை விட வேகமாக சுழல்கிறது. ஒரு துறை ஒரு வேலை என்றில்லாமல், பலதுறைகளில் கால்பதித்து, வெற்றிவாகையும் சூடுகின்றனர். அப்படியாக துள்ளலான இளமையுடன் பேஷன், ஆல்பம், நடிப்பு, தயாரிப்பு என பன்முகமாக செயல்படுகிறார் நடிகை மனிஷா ஸ்ரீ. ‘புதுமுகம் அறிமுகம்’ பகுதிக்காக அவரிடம் பேசினோம்.

என்னுடைய தாய் மொழி வடமொழியாக இருந்தாலும், தமிழ் மொழி மீது எனக்கு ஆர்வம் அதிகம். தமிழ் மொழியில, சரளமாக பேசணும், எழுதணும்னு ரொம்பவே ஆசை. எனக்கு தென்னிந்தியாவுலதான் நண்பர்கள் அதிகம். அவர்களோட பழகும்போது இயல்பா எனக்குள்ளேயும் தமிழ் மேல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. இப்போ, நான் தங்கு தடையில்லாமல் தமிழ்ல ரொம்ப நல்லா பேசுறேன். இன்னும் சொல்லப்போனால், ‘நான் நார்த் இந்தியன் கேர்ள்னு சொல்றதை விட, சென்னை பொண்ணு’ன்னு குறிப்பிடுவதைத்தான் விரும்பறேன்.

இதுவரைக்கும் மூன்று தமிழ் படங்களில் நடிச்சிருக்கேன். எந்தப் படத்திலேயும், என்னோட சொந்த குரல்ல பேசல. எனக்கு பின்னணி பேசிய குரலும் பொருத்தமாகவே இல்ல. என்னோட நண்பர்கள், “ நீங்களே டப்பிங் பேசி இருக்கலாமே. நல்லா இருந்திருக்குமே!” ன்னு அட்வைஸ் பண்ணினாங்க. அதை இயக்குநர்களிடம் சொன்னேன். ஆனா, வாய்ப்புதான் சரியாக அமைய மாட்டேங்குது!.

நான் இப்போ ஒரு ஹிந்தி ஆல்பம் தயாரிச்சிருக்கேன். அதுல நானே நடித்து, பாடியிருக்கேன். விரைவில் தமிழிலேயும் ஆல்பம் தயாரிப்பேன். இது மூலமா தமிழ் நல்லா பேசவேன்னு எல்லோருக்கும் தெரியவரும்னு நினைக்கிறேன். திரைப்பட தயாரிப்பாளர்களிடமும் இயக்குநர்களிடமும் கேட்பது இதைத்தான். நான் நடிக்கும் படங்கள்ல எனக்கு பின்னணி பேச வாய்ப்பு கொடுங்க ப்ளீஸ்!” வேண்டுகோளோடு முடிக்கிறார். உண்மைதான், தமிழில் பேசி, வெளுத்து வாங்குகிறார் மனிஷா ஸ்ரீ. அவருக்கு வாய்ப்பளிக்க இங்கே யாரேனும் இருக்கிறீர்களா?!

கிராபியென் ப்ளாக்

ஸ்ரீ ராகவேந்திரர் ஒரு சுபமுகூர்த்த நாளில் தன் குருநாதர் விஜயேந்திரரின் பிருந்தாவனத்தைப் பூஜிக்கும் பூஜகர்களைத் தேர்ந்தெடுத்தார். ஸ்ரீ மடத்தை நிர்வகிக்க சீடர்களில் சிறந்தவரைத் தேர்ந்தெடுத்து பொறுப்புகளை ஒப்படைத்தார்.

அவருடைய இந்தச் செயல்கள் உடன் இருந்தவர்களுக்கு ஓர் உண்மையை எடுத்துரைத்தன. பகலில் வட்டமிடும் பறவை மாலையானதும், கூட்டுக்குத் திரும்புவது போல, மகானும் கூட்டுக்குத் திரும்பப் போகிறார், விரைவில் உடலைத் துறக்கப் போகிறார் என்பதே அது!

ஒரு நாள் மடத்திற்கு மூன்று ஜோதிடர்கள் வந்தார்கள். ராகவேந்திரரின் ஜாதகத்தை அவர்கள் அலசி ஆராய்ந்தார்கள். ராகவேந்திரரின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகள் என்று முதலாமவரும், முன்னூறு ஆண்டுகள் என்று இரண்டாமவரும், எழுநூறு ஆண்டுகள் என மூன்றாமவரும் கூறினார்கள்.

மூவரும் ஜோதிட ஞானத்தில் ஒருவருக்கு ஒருவர் குறைந்தவர்கள் இல்லை.

பின்னர் எப்படி மூன்று கணிப்புகள் என அங்கு பெரும் குழப்பம் நிலவியது.

'நான் உடலுடன் இந்த உலகில் இருக்கப் போவது நூறு வருடங்கள். எனது நூல்கள் மூலம் இருக்கப் போவது முன்னூறு வருடங்கள். என் பிருந்தாவனத்தில் சூட்சும சரீரத்துடன் இருந்து பக்தர்களை அனுக்கிரகிக்கப் போவது எழுநூறு வருடங்கள். ஆகவே மூவருமே சரியாகத்தான் கணித்துள்ளார்கள்' என்று கூறி குழப்பத்தை ராகவேந்திரரே தீர்த்து வைத்தார்.

நாட்கள் சில சென்றன. ஒரு நாள் வகுப்பில் சீடர்களுக்குத் தத்துவ விளக்கம் அளித்துக் கொண்டிருந்த ராகவேந்திரர், திடீரென்று எழுந்து கை கூப்பி நின்றார். கண்களை மூடி தியானித்த அவர் கழுத்தில், வானிலிருந்து துளசி மாலை ஒன்று விழுந்தது.

சீடர்கள் வானை நோக்கினார்கள். அங்கு தேவருலக புஷ்பக விமானத்தில் விண்ணுலகம் சென்று கொண்டிருந்த கிருஷ்ண த்வைபாயனர் என்னும் மகான், ராகவேந்திரரை ஆசீர்வதித்து, தன் இரண்டு விரல்களை மூன்று முறை காட்டிச் சென்றதைக் கண்டார்கள்.

அவர் காட்டிய முத்திரைக்குப் பொருள் என்ன என்று சீடர்களுக்குப் புரியவில்லை.

தன் உடலை மறைக்க இன்னும் எத்தனை காலம் உள்ளது என கேட்க, த்வைபாயனர் ‘இன்னும் இரண்டு வருடம், இரண்டு மாதம், இரண்டு நாள்’ என மறுமொழி அளித்துச் சென்றதாக ராகவேந்திரரே சீடர்களுக்கு அதன் பொருளை விளக்கினார். தங்களது குருவின் கழுத்தில் விழுந்த அந்தத் துளசி மாலை, ககனத்தில் அவருக்கு விழுந்த அந்திம மாலை என்பதை உணர்ந்து அவர்கள் துயரமெய்தினார்கள்.

ஸ்ரீ ராகவேந்திரர் தமது குருநாதர்களான சுதீந்திரர் மற்றும் பத்மநாப தீர்த்தர் ஆகியோரது பிருந்தாவனங்களுக்கு உரிய வழிபாடுகள் செய்துவிட்டு, குடந்தையிலிருந்து தனது பிருந்தாவனப் பிரவேச யாத்திரையைத் தொடங்கினார். இனி அவரது திருமுகத்தை எப்போதுமே தரிசிக்க இயலப் போவதில்லை என்பதை அறிந்த குடந்தை நகரமே திரண்டு வந்து கண்ணீருடனும், துயரத்துடனும், வலியுடனும் அவரை வழியனுப்பி வைத்தது.

பிருந்தாவனப் பிரவேசம் என்றால் என்ன? பிருந்தாவனம் என்றால் என்ன?

வைஷ்ணவத்தைச் சேர்ந்த மகான்கள், ஜீவமுக்தி அடைய அதற்குரிய இடத்தைத் தேர்ந்தெடுப்பர். அந்தப் பகுதியில் அவர் தியான நிலையில் அமர்ந்து கொள்வர். மகான் ஒருவர் தமது உடலைத் துறப்பதற்காக தாமே தேர்ந்தெடுத்த இடத்தில் அமைந்திருக்கும் குகையிலோ, அமைக்கப்படும் பள்ளத்திலோ தியானத்தில் அமர்வதே பிருந்தாவனப் பிரவேசம்! பின்னர் அந்த மகானின் திருவுடல் மூடப்படும். அந்த இடத்துக்கு மேல் துளசி மாடம் பொருத்தப்படும். அவ்வாறு மகானின் உடலை உள்ளிருத்திய இடமே பிருந்தாவனம் என்று அழைக்கப் பெறும்.

சைவத் துறவிகளின் ஜீவமுக்தியிடத்தின் மீது சிவலிங்கம் ஸ்தாபிக்கப்படும். இதற்கு அதிஷ்டானம் என்று பெயர்.

ராகவேந்திரர் ஆதோனி வந்தடைந்தார். அங்கு திவானாகப் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த வெங்கண்ணா, குருவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார். திவான் வெங்கண்ணா மூலம் ராகவேந்திரரின் ஆதோனி வருகையை மாசூத் கான் அறிந்தார். எழுத்தறிவே அற்ற திவான் வெங்கண்ணா, ஸ்ரீ ராகவேந்திரரின் அருளால்தான் ஓலையைப் படித்து, அவருக்கு குழந்தை பிறந்த செய்தியைக் கூறினார் என்பதை திவான் மூலம் ஏற்கெனவே நவாப் மாசூத் கான் அறிந்திருந்தார்.

அது மட்டுமன்றி ஸ்ரீ ராகவேந்திரரின் மகத்துவங்கள் அனைத்தையும் தமது திவான் மூலம் கேட்டு அறிந்திருந்த போதிலும், நவாபுக்கு ராகவேந்திரர் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. இருந்தாலும் மகானாகப் போற்றப்படும் ராகவேந்திரரைக் காண அவர் உள்ளம் விழைந்தது. தான் வரப்போவதாக திவானிடமும் தெரிவித்தார்.

தரிசனத்துக்குப் புறப்பட இருந்த சமயத்தில் அவருக்கு குயுக்தியான ஓர் எண்ணம் உண்டாயிற்று. ‘ராகவேந்திரர் உண்மையிலேயே சக்தி வாய்ந்தவரா... இல்லையா? என்று சோதித்துப் பார்த்து விட்டால் என்ன?’ என்பதே அது!

வெள்ளித் தட்டில் மாமிசத் துண்டங்களை வைத்து, பட்டுத்துணி கொண்டு போர்த்தி எடுத்துச் சென்று ராகவேந்திரரிடம் சமர்ப்பித்தார். 'இந்த எளிமையான காணிக்கையை உங்கள் மூலராமருக்குச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்'. ராகவேந்திரர் புன்னகைத்தார். 'உங்கள் விருப்பம் அதுவானால், அப்படியே செய்வோம்' என்றார். தட்டின் மீது தனது கமண்டலத்திலிருந்து தீர்த்தத்தைத் தெளித்து, பட்டுத் துணியை விலக்கினார். தட்டில் வைக்கப்பட்டிருந்த மாமிசத் துண்டங்கள், மலர்களாகவும், பழங்களாகவும் உருமாறியிருந்தன.

நவாப் மிரண்டு போனார். ராகவேந்திரரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார். 'மன்னிப்புக் கேட்ட கணமே செய்த தவறு மறைந்து விட்டது!' என்று அருளினார் ராகவேந்திரர். 'யார் எதை மூலராமருக்குக் காணிக்கையாக வழங்கினாலும் அது அவரால் உரிய முறையில் ஏற்றுக் கொள்ளப்படும்' என விளக்கமும் அளித்தார்.


தன் சிற்றறிவினாலும், கர்வத்தாலும், மரியாதைக்கு உரியவருக்குச் செய்த அவமரியாதையை நினைத்து வருந்திய மாசூத் கான், ஸ்ரீ ராகவேந்திரரை தன்னுடைய ராஜ்யத்திலேயே நிரந்தரமாகத் தங்கி தனக்கும், குடிமக்களுக்கும் அருள் புரியுமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

நவாப் மற்றும் திவானின் வற்புறுத்தலால் அரண்மனையில் ராகவேந்திரர் சில காலம் தங்கி இருந்து மூலராமருக்கான பூஜைகளைத் தவறாமல் செய்து வந்தார். ஒரு நாள் திவான் வெங்கண்ணா மூலம், ராகவேந்திரர், நவாப் மாசூத் கானிடம், கொஞ்சம் நிலத்தை தானமாக அளிக்குமாறு கேட்டார்.

நவாபும், குருவின் வேண்டுகோளைத் தனது பாக்கியமாகக் கருதினார். ராகவேந்திரரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். பின் திவானிடம் 'ஸ்ரீ ராகவேந்திரர் விரும்பும் நிலப்பகுதியை அவருக்கு வழங்கி, அவரது ஆசீர்வாதத்தை யாசியுங்கள்..' என்று பணிவுடன் கூறினார். திவான் வெங்கண்ணா, குருவின் பாதங்களைப் பணிந்து. விவரம் தெரிவித்தார்.

'துங்கபத்திராவின் கரையோரம் அமைந்திருக்கும் மாஞ்சாலா கிராமத்தை அளிக்கச் சொல்...' என்றார் ராகவேந்திரர். நவாபும், மாஞ்சாலா கிராமத்தை காணிக்கையாக அளித்தார். மாஞ்சாலா, மந்த்ராலயமாக மாறப் போகிறது என்று ராகவேந்திரருக்கு அன்றே தெரிந்து இருந்தது.

மாஞ்சாலா வந்தடைந்த ராகவேந்திரர் மாஞ்சாலம்மனை வணங்கினார். தொடர்ந்து அந்தக் கிராமத்துக்குக் காவலாக இருந்து அருளுமாறு வேண்டினார். சீடர்கள் புடைசூழக் கிராமத்துக்குள் நுழைந்தார். அங்கு ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்தார். 'என் பிறவிக்குக் காரணமாயிருந்த வேங்கடேசப் பெருமானுக்கு இங்கு ஓர் ஆலயம் எழுப்ப வேண்டும்...' என்றார்.

வேலைகள் துரிதமாக நடந்தேறின. வேங்கடாசலபதிக்கு ஓர் ஆலயம் உருவானது. ராகவேந்திரர் வேங்கடேசனின் திருச்சிற்பத்தை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார். ஊர் மக்களுக்கோ, அழகான ஆலயம் அமைந்தில் மட்டற்ற மகிழ்ச்சி. ராகவேந்திரர் வந்து சேர்ந்தது முதல் அந்தப் பகுதியே பக்திக் கடலில் மூழ்கியது.

ராகவேந்திரரின் தீவிர பக்தரான அப்பண்ணாச்சார்யர் என்னும் அந்தணர் அங்கு வேதம் பயில்வித்துக் கொண்டிருந்தார். அன்னை தன் அருமைக் குழந்தைக்கு செய்வது போல, அப்பண்ணச்சார்யர் தமக்குச் செய்த தன்னலமற்ற சேவையால் கவரப்பட்ட ராகவேந்திரர், பல நாட்கள் அவருடன் தங்கினார். அவர் அளித்த பாயசமும், பருப்புத் துவையலும் ராகவேந்திரருக்கு தினந்தோறும் பிரசாதமானது.

அப்பண்ணாச்சார்யரின் வீட்டின் பின்புறம் இருந்த புற்றிலிருந்து சேஷதேவர் தினமும் பாம்பு ரூபத்தில் வந்து அவர் அளிக்கும் பாலை அருந்திப் போவதும் வழக்கமாகியது. அப்பண்ணச்சார்யரின் அன்புப் பிடியிலிருந்து விலகாமல் தான் பிருந்தாவனத்தில் பிரவேசிக்க முடியாது என்று உணர்ந்த ராகவேந்திரர், அவரை யாத்திரைக்கு அனுப்பினார்.

தன் காலத்துக்குப் பிறகு சாமான்ய மக்கள் அச்சப்படக் கூடாது என்று வீட்டின் பின்புறம் இருந்த புற்றையும் கலைத்து, தானும் அப்பண்ணாச்சார்யரின் இல்லத்திலிருந்து புறப்பட்டு மந்திராலயம் வந்தடைந்தார்.
அவர் மந்திராலயம் வந்ததும் பிருந்தாவனப் பிரவேசப் பணிகள் துரிதமடைந்தன. ஸ்ரீ மடத்தின் அடுத்த பீடாதிபதியாக ராகவேந்திரரின் பூர்வாசிரம தமையனின் பேரனான வெங்கண்ணாச்சார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தகுதி வாய்ந்த பண்டிதரான அவர் யோகீந்திர தீர்த்தர் என்ற பெயருடன் மடத்தின் பொறுப்புகளை ஏற்றார்.

பின்னர், ராகவேந்திரர், திவான் வெங்கண்ணாவை துங்கபத்திராவின் கரையோரம் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று 'இங்கே தோண்டிப் பார்...' என்றார். அந்த இடத்தில் தோண்டியதும், சற்று ஆழத்தில் ஒரு யாகக் குண்டம் தட்டுப்பட்டது. வெங்கண்ணா வியப்பெய்தினார். 'வெங்கண்ணா, கிருத யுகத்தில் பிரகலாதனாகப் பிறப்பெடுத்திருந்தேன். இங்கு பல யாகங்களைச் செய்து, நாராயணனின் திருவருளைப் பெற்றேன்.

'துவாபர யுகத்தில், தர்மர் அசுவமேத யாகம் செய்த போது யாகக் குதிரையை இங்கு அனுசால்வன் என்ற மன்னன் எதிர்த்தான். அனுசால்வனுடன் போர் புரிந்த அர்ச்சுனனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.

'அனுசால்வனின் ரதம், யாகபூமி அமைந்த இந்தப் புனித மேட்டில் நின்று கொண்டிருப்பதை கிருஷ்ணர் கவனித்தார். அர்ச்சுனனை அவர் சற்றுப் பின்வாங்கச் சொல்ல, அனுசால்வனும் அர்ச்சுனனை நெருங்கும் விதமாக இந்த யாகபூமியை விட்டகன்று சென்று போரிட்டான். அர்ச்சுனன் வெற்றி பெற்றான்.

'எடுத்த காரியம் எதிலும் வெற்றி கிடைக்கும் புனித இடம் இது. எனது பிருந்தாவனம் இந்த இடத்தில் தான் அமைக்கப்பட வேண்டும். மாஞ்சாலா கிராமம் இனி ‘மந்த்ராலயம்’ என்று அழைக்கப்பெறும்..' ராகவேந்திரரின் முந்தைய அவதாரங்களைத் தெரிந்து கொண்ட மகிழ்ச்சி ஒருபுறம், அவர் பிருந்தாவனப் பிரதேசம் செய்யப் போகிறார் என்ற சேதி தந்த வேதனை மறுபுறம் வெங்கண்ணாவைத் தாக்கின!

வெங்கண்ணா அவரைப் பணிந்து, 'குருவே, நான் வேறு ஏதாவது செய்ய வேண்டுமா?' என்று தழுதழுப்புடன் யாசித்தார்.

‘மாஞ்சாலம்மனை தரிசித்த பின்பு நீ செய்ய வேண்டியது என்ன என்று கூறுகிறேன்’ என்று கூறிவிட்டு ஸ்ரீ ராகவேந்திரர் மாஞ்சாலம்மனை தரிசிக்கச் சென்றார். மாஞ்சாலம்மா மந்திராலயப் பிரதேசத்தின் காவல் தெய்வம் மட்டுமன்று. பிரகலாதரின் குல தெய்வமும் கூட!

ராகவேந்திரர் அந்த அன்னையின் ஆலயத்துக்குச் சென்று அவளை தரிசித்து, 'உன் இடத்தில் எனக்கொரு இடம் தா!' என்று வேண்டினார். ஜகத்குருவின் பணிவாலும், பக்தியாலும் கட்டுண்டு மாஞ்சாலம்மா அவருக்குக் காட்சி அளித்தாள். 'ராகவேந்திரா! உன் பிருந்தாவனம் இங்கு அமைந்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் உன்னை நாடி இங்கு வருவார்கள். நான் குடி இருக்கும் இந்த ஆலயத்தை யார் கவனிக்கப் போகிறார்கள்?' என்று அன்னை கேலியாக முறையிட்டாள். 'அன்னையே! என்னை நாடி வரும் சீடர்களும், பக்தர்களும் மந்திராலயம் வந்ததும் உன்னை வணங்கிப் பின்னரே என்னைத் தேடி வரட்டும். உன் தரிசனம் கிட்டியவர்களுக்கே எனது அருள் கிட்டும்' என்று ராகவேந்திரர் அன்னையிடம் உறுதி கூறினார்.

மாஞ்சாலம்மா ஸ்ரீ ராகவேந்திரரை ஆசீர்வதித்தாள். அதன் பின்னர் ராகவேந்திரர் திவான் வெங்கண்ணாவிடம், 'மாதவரம் சென்று அங்கிருக்கும் பாறையை எடுத்துவர வேண்டும். அதில்தான் எனது பிருந்தாவனம் அமையப் போகிறது...' என்றார். மந்த்ராலயத்திலிருந்து ஆறு மைல் தூரத்தில் இருக்கும் மாதவரத்திலிருந்து அவ்வாறே பாறை கொண்டு வரப்பட்டு, குருநாதர் திருவுள்ளப்படி அழகிய கர்ப்பக்கிரகமும், பிருந்தாவனமும் அமைக்கப்பட்டது.

ராகவேந்திரர் அந்த பிருந்தாவனத்தைப் பார்த்ததும், 'இதுவல்ல நான் குறிப்பிட்ட பாறை' என்றார். 'இது பின்னால் வரவிருக்கும் மடாதிபதிக்குப் பயன்படும். எனக்குத் தேவையானதை நானே தேர்ந்தெடுக்கிறேன்..' என்றார். மறுநாள் காலையில் பூஜைகள் முடித்து, ராகவேந்திரர் மாதவரத்துக்குப் பயணமானார். நதிக்கரையோரம் நடந்து, ஒரு குறிப்பிட்ட பாறையைத் தேர்ந்தெடுத்தார். கண்களை மூடி ஆனந்தித்தார்.

'இது சாதாரணப் பாறை அன்று. ஸ்ரீராமன் வனவாசத்தின் போது இந்தப் பாறையில் அமர்ந்து இளைப்பாறினான்..' என்றார். அப்புண்ணியப் பாறை மந்திராலயத்துக்குக் கொண்டு வரப்பட்டது. குருவின் வழிகாட்டுதல்படி, பாறையின் ஒரு பகுதி பிருந்தாவனம் அமைக்கவும், இன்னொரு பகுதி ஆஞ்சநேயரின் விக்கிரகம் அமைக்கவும் பயன்படுத்தப்பட்டது.

தனது பிருந்தாவனத்தில் ஆயிரத்து இருநூறு சாளக்கிராமக் கற்கள் நிரப்பப்பட வேண்டும் என்று ராகவேந்திரர் விரும்பினார். வெங்கண்ணா, கண்டகி நதியிலிருந்து இந்த அரிய வகைக் கற்களைக் கொண்டு வர ஏற்பாடு செய்தார். ராகவேந்திரர் தனது பிருந்தாவன பிரவேச தினத்தை அறிவித்தார். அது ஆங்கில ஆண்டு ஆயிரத்து அறுநூற்று எழுபத்தொன்று, ஆகஸ்ட் மாதம் பதினோராம் நாள்.

தமிழ் விரோதிக்ருது ஆண்டு, சிராவண மாதம், கிருஷ்ணபட்சம், த்விதீயை திதி!

தேதி குறித்ததும் பக்தர்கள் பெரும் துயரில் ஆழ்ந்தனர். ராகவேந்திரரோ இது தெய்வ சங்கல்பம் என ஆறுதல் கூறினார். ஆயிரத்து அறுநூற்று எழுபத்தொன்று, ஆகஸ்ட் மாதம் பதினோராம் நாள். பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்த ராகவேந்திரர் எப்போதும் போல நீராடி, நித்ய அனுஷ்டானங்களையும், ஜப, தியானங்களையும் செய்து முடித்தார். மூலராமருக்குச் செய்ய வேண்டிய ஆராதனைகளைச் செய்து முடித்தார்.

மூலராமருக்கு அவர் பூஜை செய்யும் அழகை இனிக் காண முடியாதே என்ற நினைப்பே கூடியிருந்தவர்களின் கண்களைக் கலங்கச் செய்தது. கூடியிருந்த பக்தர்களுக்கு ஆசீர்வாதங்களும், மந்திராட்சதைப் பிரசாதமும் அளித்தார். பின்னர் வீணையை மீட்டியவாறே 'இந்து நனகே' என்ற பாடலைப் பாடலானார்.

தனக்கு இட்ட பணியை முடித்த பின்னும், தன்னை மீட்க வாராத காரணம் என்ன? என்ற கருத்துடன் அமைந்த உருக்கமான அந்தப் பாடலைக் கேட்ட பக்தர்களின் கண்கள் நீரால் நிறைந்தன.

துங்கபத்திரா கரைபுரண்டு ஓடியது. ராகவேந்திரருக்காக, வருணதேவரும் குளிர்ச்சியான மழையைப் பொழிந்தார். பிரம்ம தண்டம், கமண்டலம், ஜபமாலை இவற்றுடன் பிருந்தாவனம் நோக்கிப் புறப்பட்டார். துளசி மாலை கழுத்தை அலங்கரிக்க, கண்கள் கருணை மழை பொழிய, உடல் திவ்ய தேஜசுடன் பிரகாசிக்க, குரு நடந்தார். அவரைக் கண்டதும் 'குரு ராகவேந்திரா' என்ற மந்திர ஒலி வானைப் பிளந்தது. ராகவேந்திரரின் வலது கரம் அபயம் அளித்தது,

'குருவே, உங்களை தரிசிக்காமல் எப்படி பொழுது விடியும்? எங்களையெல்லாம் பிரிந்து போக உங்களுக்கு எப்படி மனது வந்தது?' என்று வெங்கண்ணா கதறினார்.

(பயணம் தொடரும்)

v. c. சந்தோஷ்

கிராபியென் ப்ளாக்

றைந்த எழுத்தாளர் ஜெயந்தனின் புதல்வர் சீராளன். தமிழக ஆளுநரின் நேர்முக உதவியாளர். ‘மின்புறா கவிதைகள்’ இவரின் முதல் கவிதைத் தொகுதி. தனது தந்தையர் பெயரில் வருடந்தோறும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதை வழங்கி, தமிழ் இலக்கிய உலகுக்கு பெருமை சேர்த்து வருகிறார்.இருள் செய் நெருப்பு

இருள் தன்னை நெருப்பாய் காட்டத் துணிந்துஊழித் தீயில்ஒரு துளிஉதறித் தெளித்தது


அரைகுடப் பள்ளியில்அத்தீ பற்றியெரியஅறியாமைக் கொள்ளியாயிரம்


கூரைவேய்ந்த கூண்டில்திணிக்கப்பட்ட சிறார்மிரண்ட மான்களாய்வழியின்றி அக்கறையின்மையின் அவமானச் சின்னங்கள்!


பணம் தின்னும்பேய்கள் பிள்ளைக்கறிவேண்டி நின்றதுபற்றிப் படர்ந்தது தீ.


விதிமுறைகள் ஏதுமின்றிவிதிமுறைகள் ஏமாற்றிபள்ளிச் சட்டங்கள்இருள் சூழ் பாதுகாப்பு.


சட்டம் போட்டோரெல்லாம்திட்டம்போட்டு, பணம் தின்னும் பேராசையில்கொழு பற்றியது தீ.


வருமுன் காவாதான்வாழ்க்கைஎரிமுன் வைத்தூறு போலக் கெடும்வள்ளுவனைகுருட்டுப் பாடமாய்சொல்லி வந்த வாத்திக்குசெயல் காட்டப் படர்ந்ததுதீ.


போலி முலாம் பட்டறைகளாய்பள்ளிகளின் திறன் அறியாகொட்டடி சேர்க்கும்பெற்றவரின் வறள்மோகத்தில் விழுந்தது தீ.


காலமெல்லாம்தூங்கிக் கிடந்துவிதிமுறைகள் விலக்கி வைத்துதொண்ணூறு பூச்செண்டுகள்அக்கினி பந்தமாய் எரிந்தபின்விழித்திட்ட ஓர் அதிரடி அரசு.காணாமல் போனதுநாளைய சரித்திரம்.பவித்ரா

டாக்டர் கெளதமன்

ன்றைய சூழலில் மனிதர்களிடம் அதிகமாக காணப்படும் நோய்களில் ஆஸ்துமாவே முன்னணியில் நிற்கிறது. அதன் அறிகுறிகளும், அந்நோயை தீர்க்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் கௌதமன்

நாம் ஒவ்வொருவரும், எப்பாடு பட்டாவது தேவைக்கு அதிகமாக பணம் சேர்த்துக் கொள்வதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக் கொள்கிறோம். எவ்வளவு பணம் சேர்த்து வைத்தாலும், நம்மால் இயற்கையை மீறி ஒன்றுமே செய்ய முடியாது. பணம் சேர்த்தவன், வீட்டிற்குள் சைக்கிள் மிதிப்பதும், பணம் சேர்க்க வேண்டியவன், வீட்டுக்கு வெளியே சைக்கிள் மிதித்துக் கொண்டிருப்பது போன்ற கேலிச் சித்திரங்களை சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சமீபத்தில், அண்டார்டிகாவில், மிகப்பெரிய பனிப்பாறை உருக தொடங்கிவிட்டது என்கிற செய்தி, நம்மை அச்சுறுத்தவே செய்கிறது. தொழில்நுட்பத்தின், ஹிமாலய வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், சுற்றுப்புறசூழல் பாதிப்பும் அதிகம் இருக்கத்தான் செய்கிறது. மரங்களை அழித்து, ஏர் கண்டிஷனர் குளிரை அனுபவிக்கிறோம். நீர் மூலம் கிடைக்கும் உடலுக்கு தேவையான உலோகங்களை வடிகட்டிவிட்டு , வெறும் சத்தில்லா நீரைப் பருகிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி நாமே இயற்கைக்கு மாறாக, இன்று செய்து கொண்டிருக்கும் செயல்கள் நாளைய தலைமுறையை பாதிக்கும் அவர்களின் ஆரோக்கியத்தையும் சிதைக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. வாழை இலைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் தட்டு, வந்தது இல்லாமல், அது இன்று, பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் இட்லி வரை உயிர்களை கொல்லும் எமனாக உருவெடுத்திருக்கிறது.

விளைவு, இன்று பிறந்த குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பெயர் தெரியாத நோய்களால் பாதிப்பு. சில குழந்தைகள் பிறக்கும் பொழுதே நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு பிறக்கிறார்கள் என்கிற செய்தி சாதாரணமாகிவிட்டது. ஒரு மருத்துவமனையில், குறைந்தது நூறு பேர்களாவது ஆஸ்துமா என்று சொல்லக்கூடிய நுரையீரல் நோயினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

நாற்பது வருடங்களுக்கு முன்பு கூட, நுரையீரல் நோய் என்றால் காச நோயால் பாதிக்கப் பட்டவர்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். அதுவே எண்பதுகளில், குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய நுரையீரல் செயல் குறைவு(Primary complex) அதிகம் காணப் பட்டது. அதுவே நாளடைவில், Bronchitis asthma என்று சொல்லக்கூடிய ஆஸ்துமா நோயாக கணிக்கப் பட்டு அதற்கான சிகிச்சைகளை மாடர்ன் மெடிசினில் கொடுக்கிறார்கள்.

ஆஸ்துமா என்ற நுரையீரல் அழற்சி நோய்க்கு ஆயுர்வேதம் மற்றும், சித்த மருத்துவம் கொடுக்கும் பொருள் சுவாச நோய். நுரையீரலின் வேலையே, நல்ல காற்றை சுவாசித்து, கெட்ட காற்றான, கரியமிலக் காற்றினை வெளியேற்றுவது.

ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுடைய நுரையீரல்களால் ஆக்சிஜனை கிரகிக்கக் கூடிய தன்மை குறைந்து விடுகிறது. அவர்கள், மூக்கின் வழியாக, மூச்சை விடுவதை விடுத்து, வாயின் வழியாக விடுவார்கள்.

ஆஸ்துமா நோய் என்பது நுரையீரல் சம்பந்தப்பட்டது என்பதைச் சொல்வதை விட, வயிறு சம்பந்தப் பட்டது என்று ஆயுர்வேத முறை கூறுகிறது. ஆஸ்துமா நோயினால் பாதிக்கப் பட்டவர்களைக் கேட்டால், அவர்களுக்கு எந்தக் காரணிகளால், சுவாசக் கோளாறு ஏற்பட்டது என்று சில குறி குணங்களைக் கூறுவார்கள்; அதாவது,

அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்ளுதல்.அதிகமாக, பழச்சாறு அருந்துதல்.இனிப்பு வகைகளை மிகுதியாக சாப்பிடுதல்.மலம் கழிக்காமல் இருத்தல்.

ஆஸ்துமா நோயைத் தடுக்கும் முறைகள்

ஆயுர்வேத முறைப்படி ஆஸ்துமாவை தவிர்க்க, நாங்கள் அறிவுறுத்துவது அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வயிற்றுக்கு இடம். இது போன்ற உணவு முறையை தொடர்ந்தால், மூன்று மாதங்களில், கட்டாயமாக ஆஸ்துமாவின் தாக்கத்தை குறைக்க முடியும்.

ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் முறைகள்

வயிற்றை சுத்தப்படுத்தும் சிகிச்சை - மருந்தூட்டப் பட்ட நெய்யை நோயாளிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக 6 நாட்கள் கொடுப்போம். அதோடு அவர்கள் நாங்கள் கூறும் பத்திய உணவைத்தான் உட்கொள்ள வேண்டும். ஏழாம் நாள் அதிகாலை, மருக்காரன் காய் அல்லது அதிமதுரமோ பாலில் சேர்த்து அவர்களை குடிக்க வைத்தால், உடனடியாக வாந்தி வரும். இதில், வயிற்றுக் கழிவு மட்டுமல்லாமல், நுரையீரலில் தங்கிய கழிவுகளும் வெளியேறும்.இதன் தொடர்ச்சியாக நுரையீரலை பலப்படுத்தக் கூடிய ரசாயன மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண்டும். எனவே, அதிகமான வெளி உணவுகளைத் தவிருங்கள். ஒரே வேளையில் அதிகமாக உண்ணாமல் உணவை பிரித்து உண்ணுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் மற்றும் வேப்பிலையை அரைத்து மஞ்சளோடு உட்கொள்ள பழகுங்கள். இப்படி கட்டுப்பாடுடன் வாழப் பழகினால் நோயிலிருந்து எளிதாக வெளி வரலாம்தானே.

கிராபியென் ப்ளாக்

“டாக்டர் எனக்கு சின்ன வயசுல முகப்பரு உண்டு. இப்ப பாருங்க அதே மாதிரி இவளுக்கும் அள்ளிப் போட்டுருக்கு. ஏதாவது வெளில போடுற மாதிரி மருந்து கொடுங்களேன்”

“அது எப்படித்தான் கரெக்டா வருதுன்னே தெரியல டாக்டர். எங்காயவது வெளியில போக வேண்டிய நாள்ன்னு பார்த்து வந்துருது. இவ்வளவுக்கும் நைட் தூங்குறதுக்கு முன்னாடி கண்ணாடில நல்லா முகத்தைப் பார்த்துட்டுதான் தூங்கப் போவேன். நைட் க்ளியரா இருக்கிற முகத்துல காலைல பார்த்தா வந்துருக்கும் எனக்கு. அப்படியே கோவம் கோவமா வரும். என்ன மருந்து வேணும்னாலும் கொடுங்க, நா சாப்டுக்குவேன்”

“பீரியட்ஸ் டைம்ல எப்படியாவது பரு வந்துடுது டாக்டர். நானும் முகத்துல பத்து பதினைஞ்சு தடவையாவது கழுவுறேன். ஆனாலும் வந்துடுது”“டாக்டர் 2 வருசம் முன்னாடி இந்த இடத்துலதான் பெருசா வந்துச்சு, வலிச்சது. இப்பவும் அதே இடத்துல 3 நாளா இருக்கு. லைட்டா வலியும், அரிப்பும் இருக்கு”

“நான் ஒரு பரு வந்தாலும் பிதுக்கி எடுத்துருவேன் டாக்டர். அதுக்கப்புறந்தான் தெரிஞ்சது, இந்த மாதிரி பிதுக்கக் கூடாது, கரும்புள்ளியாயிடும்னு. இதைப் போக்கிரலாமா டாக்டர். வீட்டுல வேற பொண்ணு பாக்காங்க”

“முகத்துல மட்டுமில்லை டாக்டர். முதுகுலயும் சின்னது சின்னதா இருக்கு. லேசா அரிக்கும், அப்பப்ப, எப்படியாவது சரி பண்ணிருங்க டாக்டர். பிரெண்ட்ஸ்லாம் கிண்டல் பண்றாங்க”

“காலைல கற்றாழைச் சோறை முகத்துல பூசிக்கிறேன். வாரம் ஒருக்கா பப்பாளி ஃபேஷியல், கேரட் ஜுஸ் கலந்த முல்தாணி மெட்டி பேக் ஒருநாள் விட்டு ஒருநாள் இவ்வளவும் செஞ்சும் பரு வர்றது குறையல டாக்டர். எனக்கு இர்ரெகுலர் பீரியட்ஸும் இருக்கு. இப்படி இருந்தா பரு வரும்னு ஆபிஸ்ல ஒருத்தங்க சொன்னாங்க. உண்மையா டாக்டர்”

முகப்பருக்காரர்களின் குரலில் படபடப்பும் வேதனையும் நிறைந்து ஒலிக்கும்.

முகப்பரு & சித்த மருத்துவ விளக்கம்

பித்த நாடியும், வாத நாடியும் பாதிப்படைகையில் முகப்பரு உருவாகலாம்.

உடற்சூட்டை அதிகரிக்கும் உணவுகள், செயல்கள் இவற்றால் பித்த நாடி பாதிப்படையும். உடற்கழிவுகளை முறையாக வெளியேற்றாமல் இருக்கும் செயலினாலும், வாயுப் பொருட்களை உண்ணுவதாலும் வாதநாடி பாதிப்படையும்.

சித்த மருத்துவம்

உணவே மருந்து

எண்ணெய்ப் பலகாரங்கள், குளிர்பானங்கள், கோழி, கருவாடு, கிழங்கு வகைகள் போன்றவற்றை முகப்பரு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கலினால் முகப்பரு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே மலச்சிக்கல் இல்லாமலிருக்க நார்ச்த்து வாய்ந்த காய்கறிகளையும், பழவகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கீரை சேர்த்துக் கொள்வதும் நன்மை பயக்கும்.

உடல் வன்மையை அதிகரிக்கும் நெல்லிக்காயை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இஞ்சி, சீரகம், ஏலக்காய், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, வெந்தயம் அன்றாட உணவில் இருக்க வேண்டும்.

சித்த மருந்துகள்

பசலைக் கீரையை அரைத்துப் பூசலாம்.

சந்தனத்தை இழைத்துப் பூசலாம்.

திருநீற்றுப் பச்சிலையை அரைத்துப் பூசலாம்.கருஞ்சீரகத்தைப் பொடித்து நீருடன் கலந்து பற்றிடலாம்.

பறங்கிப் பட்டைப் பொடியை பாலுடன் கலந்து பூசலாம்.

சங்கு பற்பம் என்ற மருந்தை நீருடன் கலந்து பூசலாம்.

முகப்பரு உள்ளவர்கள் கண்டிப்பாகச் செய்ய வேண்டியவை:

வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல்.

முகத்தை நீர் கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருத்தல்.

தலையில் பொடுகு வராமல் தலைமுடியைப் பராமரித்தல்.

மாதவிலக்கு கோளாறுகள் இருப்பின் அதனை சரிப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல்.

உடல் ஆரோக்கியத்தைப் பராமரித்தல்.

முகப்பருவைக் கைகொண்டு தொடுதலோ, கிள்ளுதலோ செய்யாமலிருத்தல்.


மேற்கண்ட வெளிமருந்துகளையும், உணவு அறிவுரைகளைப் பின்பற்றினாலே முகப்பருவைக் குணப்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு பின்பற்றியும் முகப்பரு நீடித்தால் அருகிலிருக்கும் சித்த மருத்துவரை சந்தித்து அவரது ஆலோசனைப்படி உள் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்த இதழில் ‘மன அழுத்தம்’

கிராபியென் ப்ளாக்

“இருவேறு உலகத்து இயற்கை” என்று வள்ளுவர் கூறுகிறார். இவ்வுலகம் இருவகைப்பட்ட இயல்புகளால் நிறைந்திருக்கிறது. ஏறத்தாழ இக்கருத்தையொட்டி எழுதப்பட்டவைதாம் கார்ல் மார்க்சின் நூல்கள் அனைத்துமே. எல்லாமே இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே இருந்தால் இங்கே இல்லை. ஒருவர் இழப்பதை இன்னொருவன் பெறுகிறான். ஒரு தரப்பு வேண்டுமென்பதை இன்னொரு தரப்பு வேண்டா என்கிறது. வயிற்றுக்கு உணவு தேடும் வாழ்க்கை பலர்க்கு. வயிற்றுக்கு மட்டுணவு கொள்ளவேண்டிய நிலை சிலர்க்கு. இவ்வாறு எல்லா நிலைமைகளிலும் இருவகைப்பாடுகளே நிறைந்திருக்கின்றன.


காய்கறிச் சந்தைக்குச் செல்கிறீர்கள் தக்காளி ஐம்பது உரூபாய்க்கு வாங்குகிறீர்கள். நாம் வாங்கி முடித்து, நகர்ந்தால் இன்னோரிடத்தில் அதே தக்காளி நாற்பது உரூபாய்க்கு விற்கப்படுகிறது. இழப்பை எண்ணி உங்கள் மனம் துடிக்கிறது. ஆனால், யாரோ ஒரு வணிகர்க்கு அன்று பத்து உரூபாய் கூடுதலாகக் கிடைத்துவிட்டது. உங்களுடைய இழப்பு இன்னொருவர்க்கு வரவு.


இதனாலொன்றும் ஆகப்போவதில்லை. நீங்கள் ஐம்பதுக்கு வாங்கிய பிறகு தக்காளியின் விலை அறுபதாகவும் உயரலாம். அப்போது உங்களுக்கு மகிழ்ச்சி. விற்றவர்க்கு இழப்பு. இன்னும் உயரமான தளத்திலிருந்து எண்ணிப் பாருங்கள். பத்து உரூபாயால் இருவர்க்குமே பெரிய விளைவுகள் தோன்றிவிடுவதில்லை. ஆனால், அந்த உணர்வுகளால் நாம் ஆட்டுவிக்கப்படுகிறோம்.


இரண்டு அணிகள் விளையாடுகின்றன. ஓர் அணிதான் வெல்ல முடியும். இன்னோர் அணி தோற்க வேண்டும். இது ஆட்டம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் நடப்பிலிருக்கும் இயல்பு. ஆனால், தோற்கும் அணி மலை சரிந்ததுபோல் நிலைகுலைகிறது. வெல்லும் அணி மலையைத் தூக்கியதுபோல் துள்ளித் திரிகிறது. இரண்டுமே மிகையான எதிர்வினைகள். ஆனால், இதுதான் இருவேறு உலகத்து இயற்கை. இருவேறு இயல்புகளைத்தான் ‘எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்’ என்கிறது தமிழ்ப் பழமொழி. பூனை இரையைக் கண்ட மகிழ்ச்சியில் துரத்துகிறது. எலி தனக்கு இறப்பு நேரப் போகிறது என்ற பதைபதைப்பில் பாய்ந்து ஓடுகிறது. இதில் என்ன தவறு இருக்க முடியும் ? உணவுக் கண்ணியில் இவை ஒன்றையடுத்து ஒன்றாக இருக்கின்றன.


எலிகள் கொறித்துப்போடும் விரைவுக்கு நாட்டில் ஒரு விதையைக்கூடக் காப்பாற்ற முடியாது. எலிகளின் பற்கள் விரைந்து வளருமாம். அந்த வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அவை எவற்றையேனும் கடித்துக்கொண்டே இருக்க வேண்டுமாம். இல்லையேல் பல் வளர்ச்சியால் உணவை மெல்லவே முடியாத நிலைக்கு ஆளாகி இறக்க வேண்டியதுதான்.

உயிரிரக்கம் என்ற பார்வையில் எலியின் இறப்பு இரங்கத்தக்கதே. ஆனால், இயற்கை அவ்வாறில்லையே. உயிர்த்தன்மையுடைய ஏதேனும் ஒன்றுதான் இன்னோர் உயிருக்கு உணவாக முடியும்.

அதுதான் இயற்கையின் கட்டளை. பூனை உணவு கண்டு கொண்டாடுவதும் எலி உயிரைக் காக்கத் திண்டாடுவதும் இருவேறு உலகத்து இயற்கை. அதை மாற்ற இயலாது.


கிராபியென் ப்ளாக்

பெண்ணைச் சுற்றியே ஆணின் வாழ்வு. உலகின் சுழற்சியும் பெண் தான். பெண்ணைச் சுற்றிதான் எத்தனை கதைகள். எத்தனை வாழ்க்கை. மாறிக்கொண்டே இருக்கும் பூமியில் மாறாமல் இருப்பது பெண்ணின் மீதான ஈர்ப்பும் காதலும் தான். வாழ்வின் அவிழ்க்க முடியாத புதிர்களில் ஒன்றாகத்தான் பெண்ணின் மனம் இருக்கிறது. அதை அறிந்துகொள்வதில் ஆண் படும் பாடு சொல்லில் மாளாது. ஆக, எப்போதும் இயக்குபவளாகவும் இயங்குபவளாகவும் பெண்ணே, இச்சமூகத்தின் முன் நிற்கிறாள். அவளின்றி இவ்வுலகில் எதுவும் அசையாது. இத்தகைய வாழ்வை தான் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது ‘மௌண்டென்ஸ் மே டிபார்ட் திரைப்படம்!ஷென் டாவோ என்கிற பெண்ணின் வாழ்வில் நடக்கும் நட்பு, காதல், திருமணம், குழந்தைப்பேறு, பிரிவு, இறப்பு உள்ளிட்ட பல விஷயங்களை யதார்த்தமாக சொல்லியிருக்கும் படம். அதை மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் காட்டப்பட்டிருக்கும் விதம் அழகு. கதை 1999 ஆம் ஆண்டில் தொடங்கி 2025 ஆம் ஆண்டில் முடிகிறது. அவளுடைய இத்தகைய காலகட்டத்தில் என்னவெல்லாம் அவளைச் சுற்றி நடந்தன. அதை, அவள் எப்படியெல்லாம் எதிர்கொண்டாள்? நட்பு அவளுக்குச் சொல்லிக்கொடுத்தது என்ன? காதல், அவளை என்னவெல்லாம் செய்தது?


இந்த உலகத்தில் உண்மையில் அவள் இறுதியாக கற்றுக்கொண்டதுதான் என்ன? இப்படியான பல கேள்விகளுக்கு டாவோவின் வாழ்க்கையில் பதில் இருக்கிறது. அதைத்தான் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். அவற்றை முறையாக மூன்று காலகட்டங்களில் பிரித்திருக்கிறார். அவளுடைய காதல் பருவம். திருமணத்துக்குப் பிறகான நாட்கள். குழந்தை பிறந்து, வளர்ந்து கேள்வி கேட்கும் வயதை எட்டினால் விளையும் கேள்விகள் என கதை நகர்கிறது.


இவற்றில் டாவோவின் காதல் பருவமே நம்மை ஈர்க்கிறது. கண்ணீர் சிந்த வைக்கிறது. ஏனெனில் அங்கே தான் வாழ்வின் சந்தோஷமான நாட்கள் இருக்கிறது. இது டாவோவுக்கு மட்டுமே நடந்திருக்குமா? என்றால், இல்லை அவளுக்கு நடந்துதான் உலகம் முழுக்க ஏறக்குறைய எல்லாப் பெண்களுக்கும் நடந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது.

கண்ணீர் சிந்த வைக்கிறது. அதனாலேயே இப்படம் நம் மனதில் அகலாத நிழற்படமாக தொங்குகிறது. டாவோவின் புன்னகை கண்களில் இருந்து மறைய மறுக்கிறது. ‘மௌண்டென்ஸ் மே டிபார்ட்’ படம் நமக்கு சொல்லிச் செல்லும் செய்தியும் அதுதான். இந்த உலகத்தில் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், ஒருபோதும் மாறுவதில்லை பெண்ணின் அன்பும், ப்ரியமும்!


நிலக்கரி சுரங்கம் ஒன்றின் முதலாளி ஷாங் ஜிங்ஷெங். அங்கே தொழிலாளியாக இருப்பவன் லியாங்ஸி. இவர்கள் இருவருக்கும் தோழியாக இருப்பவள் டாவோ. இந்த மூவருக்கான முக்கோண காதல் கதைதான் முதல் காலகட்டம். ஏழையாக இருந்தாலும், பணக்கார இருந்தாலும் இருவருமே டாவோவின் மீது மிகுந்த காதல் கொண்டிருக்கின்றனர். இரு மனங்களின் பிரியத்தில் தவிக்கிறாள் டாவோ. ஒன்றிருக்க இன்னொன்று வந்தால் வாழ்வில் நிம்மதி ஏது?. சுரங்க முதலாளி ஷாங்குக்கும் இதுவே நடக்கிறது. அவன் வெளிப்படையாக டாவோவிடம் சொல்லி, அவனை தவிர்க்க சொல்கிறான்.


தன்னுடைய சுரங்கத்தில் இருந்து லியாங்ஸியை வெளியே அனுப்பிவிடுகிறான். அத்துடன் அவனை கொல்லவும் திட்டமிடுகிறான். இதையெல்லாம் அறியும் டாவோ, தனக்காக அவனை விட்டுவிடும்படி கூறி, அவனுடைய திட்டத்தை முறியடிக்கிறாள். பிறகு, ஷாங்கையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறாள். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. திருமண பத்திரிகையை எடுத்துக்கொண்டு, லியாங்ஸியின் வீட்டுக்கு போகிறாள் டாவோ. அவனோ மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, அந்த ஊரை விட்டே போக தயாராகிக்கொண்டிருக்கிறான். அவனிடம் தன் கல்யாண பத்திரிகையை நீட்டுகிறாள். அதை, பெருந் துயரத்தோடு வாங்கி பார்த்துவிட்டு, வெளியேறுகிறான். “இனி இந்த ஊருக்கு தான் திரும்பவே போவதில்லை...” என்றும் சொல்கிறான். “தன்னிடம் போய் வருகிறேன் என்று கூட சொல்ல மாட்டாயா?” என்று அழுதபடியே கேட்கிறாள் டாவோ.

“எப்போது நீ ஷாங்கை அணைத்துக் கொண்டாயோ அப்போது சொல்லிவிட்டேனே போய் வருகிறேன் என்று...”. அந்த தெருவில் அவன் போகும் பாதையை பார்த்துக்கொண்டே கண்ணீருடன் நிற்கிறாள் டாவோ.


“ஏழ்மை என்றால் அதிலொரு அமைதி...” என்றொரு வரி, பிரபல பாடல் ஒன்றில் வரும். காதலில் பெரும்பாலும் தோற்பது ஏழ்மை தான். காலங்கள் மாறுகிறது.

நிலக்கிரி சுரங்கத்தில் பெரும் பணம் குவிகிறது. டாவோவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. லியாங்ஸிக்கும் குழந்தை பிறக்கிறது. அவன் மிகவும் வறுமைப் பீடித்த வாழ்வில் இருக்கிறான். சுரங்கத்தில் பல வருடங்கள் வேலைப் பார்த்ததால் அவனை ஆஸ்துமா நோய் தாக்கிவிடுகிறது. அந்த நோயை குணப்படுத்த வேண்டுமானால் வசதி படைத்த மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். அவ்வளவு பணத்துக்கு வழியில்லாததால், தன் மனைவி உடன் திரும்பி, தன் ஊருக்கே வருகிறான். வாழ்வில் விதிதான் எவ்வளவு கொடியது!. லியாங்ஸிக்கும் டாவோவுக்குமான காதலை அறிந்துகொள்ளும் அவனின் மனைவி. பிறகு, டாவோவை தேடிச் சென்று, தன் கணவரின் நிலையை சொல்கிறாள். தன் காதலனை தேடி வரும் டாவோ, “இந்த ஊருக்கு திரும்பவே மாட்டேன் என்று சொன்னாயே... பார்த்தாயா... இந்த உலகில் நான் இருக்கும்வரை நீ எங்கேயும் போய்விட முடியாது” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறாள்.

அவளின் இயல்பே அதுதான். அவளிடம் நமக்கு பிடிக்கும் அம்சமும் அதுதான். பிறகு, அவனது மருத்துவ செலவுக்கு பணம் அளித்து உதவுகிறாள் என்பதோடு இரண்டு காலகட்டங்கள் முடிவுக்கு வந்துவிடுகின்றன.

மூன்றாவது காலகட்டம், ஏறக்குறைய வாழ்க்கையை டாவோ எவ்விதமாய் புரிந்து கொள்கிறாள். அதை தனது மகனுக்கு சொல்லி, சரியான வழியை அடையாளம் காட்டுகிறாள் என்பதோடு நிறைவு பெறுகிறது. ஏறக்குறைய 2025 ஆண்டிலும் வாழ்க்கை அவரவருக்கு உரிய முறையிலேயே இருக்கிறது. தொழில்நுட்பங்களும் சுற்றுப்புறச் சூழலில் உள்ள கட்டிடங்களும் மட்டுமே மாறுகிறது. மனித மனங்கள் எப்போதும் மாறுவதில்லை. குறிப்பாக டாவோ போன்ற பெண்ணின் மனங்கள் என்பதோடு படம் முடிவடைகிறது. இந்தப் படத்தில் ஷென் டாவோ நடித்த டாவோ சூவோவின் நடிப்பு அபாரம். வெவ்வேறு சூழல்களில் அவளுடைய முகபாவங்களை நம்மை கட்டிப்போடுபவை. இந்தப் படத்தில் நடித்தன் மூலம் டாவோ, சிறந்த நடிகைக்கான விருதையும் அள்ளினார் என்பது கூடுதல் சிறப்பு!


‘மௌண்டென்ஸ் மே டிபார்ட்’ எனும் இப்படத்தை எழுதி, இயக்கியவர் இயக்குநர் ஜியாங்கே ஜியா. 131 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 2015 ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் வெவ்வேறு காலகட்டங்களை மிக கவித்துவமாக படம் பிடித்திருந்தார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நெல்சன் லிக். அதேபோன்று படத்தை பன்மடங்காக மாற்றியது இசையமைப்பாளர் யோஷிஹிரோ ஹன்னோவின் பின்னணி இசை. ஒரு படத்தில் கதையை ஒட்டி இவ்விரு அம்சங்களும் இணைவது, இயக்குநருக்கு கூடுதல் பலம். சீனாவிலும், அமெரிக்காவிலும் உள்ள தியேட்டர்களிலும் வெளியான ‘மௌண்டென்ஸ் மே டிபார்ட்’ படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தது. கான்ஸ், டோரண்ட்டோ, நியூயார்க் உலகத் திரைப்பட விழாவில் அபிஷியல் செலக்ஷன் பிரிவில் தேர்வானது.கிராபியென் ப்ளாக்

“தென்னை மரத்துல தேள் கொட்டனதுக்கு பனை மரத்துல நெறி ஏறுச்சாம்” இந்த பழமொழி யாருக்கு பொருந்துச்சோ இல்லையோ இந்த சிச்சுவேஷன்ல பவித்ராவுக்கு கரெக்டா பொருந்துச்சு. கோமலும் பவித்ராவும் வடபழனி பாரம் விஜயா மால்ல ஜாலியா சுத்திட்டு இருக்கும் யாரோ எடுத்த ஒரு செல்பில பின்னாடி போகஸ் ஆக. அத எடுத்தவன் அந்த போட்டோவ பேஸ்புக்ல போட, அந்த போட்டோவ பாத்து அவனோட பிரண்ட் அத லைக் பண்ண, அவன் லைக் பண்ணது அவனோட இன்னொரு பிரண்டான பவித்ரா சித்தப்பா பையன் டைம்லைன்ல தெரிய, அத பாத்து ஷாக் ஆகி அவன் போட்டோவ அப்படியே பவித்ரா அப்பாகிட்ட காட்ட, அந்த மொமண்ட்லதான் அவரு கொலை வெறி ஆனாரு.

அடுத்த செகண்ட் போன எடுத்து கோமலுக்கு போன் அடிச்சாரு. அப்பதான் பவித்ராவ விட்டுட்டு ரூமுக்கு வந்து லவ் பீல்ல கோமல் படுத்து இருந்தான். போன் ரிங் ஆகற சத்தம் கேட்டு போன எடுத்து பாத்தா பவித்ரா டாடி காலிங் அப்படின்னு டிஸ்ப்ளே காட்டுச்சு. கோமலுக்கு ஒரு செகண்ட் கொலை நடுங்குனாலும் வேற வழியில்லாம கால அட்டெண்ட் பண்ணான்.

போன எடுத்ததும் பவித்ராவோட அப்பா “ஏண்டா .. பொய் சொல்லி என் பொண்ண மெட்ராஸ்க்கு வர வெச்சு ஊர் சுத்தி இருக்கன்னு ஆரம்பிச்சு பிரகாஷ்ராஜ், ரகுவரன், கோட்டா சீனிவாசராவா மாறி கோமல போன்லயே கொன்னு எடுத்தாரு. கடைசியா “தக்காளி .. காலைல பவித்ரா இங்க வர்றதுக்குள்ள நீ இங்க வந்து நிக்கணும். இல்ல.. அவள வெட்டி போட்டுடுவன்னு ஒரு கடுமையான வார்னிங்க குடுத்துட்டு போன வெச்சாரு. லவ் பீல்ல இருந்த கோமல ஒரே ஒரு போன் கால் அலறி அடிச்சு ஓட வெச்சுச்சு. கோமல் அவசரமா இந்த விஷயத்த சொல்ல பவித்ராவுக்கு போன் அடிச்சான். பவித்ரா ட்ரெயின்ல தூங்கிட்டே கோமல் கூட மெரினா பீச்ல சுண்டல் சாப்பிடற மாதிரி கனவு கண்டுட்டு இருந்ததால அவளுக்கு போன் அடிச்ச சத்தமே கேக்கல. பவித்ராவுக்கு திரும்பியும் கோமல் போன் அடிச்சான். அப்பவும் அவ போன எடுக்கல. கோமல் வேற வழி இல்லாம அவசரமா மூஞ்சிய கழுவிட்டு, அவசரமா ஒரு பேண்ட மாட்டிட்டு ரூம்ல இருந்து கிளம்புனான்.


அதே அவசரத்தோட ஒரு ஆட்டோவ புடிச்சு கோயம்பேடு வந்து இறங்கும் போது பார்த்தா மணி 11.30. கரெக்டா ஒரு கோயம்புத்தூர் பஸ் கிளம்பறதுக்கு தயாரா இருந்துச்சு. கோமல் ஏறி உட்கார்ந்தான்.
பஸ் கிளம்பறதுக்கு முன்னாடியே கண்டக்டர்கிட்ட “அண்ணே.. வழில 10 இடத்துல நிறுத்தி டீ சாப்பிடாதீங்க.. லவ் மேட்டர்.. காலைல நான் 7 மணிக்குள்ள நான் தாராபுரத்துல இருக்கணுன்னு சொன்னான். உடனே கண்டக்டரும் “கவலப்படாதப்பா .. நானே லவ் மேரேஜ்தான்.. பஸ்ஸ எங்கயும் நிறுத்தாம ஓட்ட சொல்றன்னு நம்பிக்கை குடுத்துட்டு போனாரு. பஸ் கோயம்பேட்ல இருந்து கிளம்புச்சு. பஸ் போற ஸ்பீட விட கோமலோட ஹார்ட் துடிக்கற ஸ்பீட் படு வேகமா இருந்துச்சு. காலைல போனா என்ன நடக்கும்? எப்படி மேட்டர் தெரிஞ்சுது? பவித்ராவ அந்தாள் எதாவது பண்ணிடுவானா? இப்படி ஒரு 1000 கொஸ்டின் அடுத்தடுத்து வந்து கோமல் மனசுல அட்டெணன்ஸ் போட்டுட்டே இருந்துச்சு. குழப்பத்துல கோமலுக்கு பதிலும் வரல.. தூக்கமும் வரல. பஸ் உளுந்தூர்பேட்டை தாண்டும் போது மணி 2 ஆகி இருந்துச்சு. கோமல் அப்பதான் லேசா கண்ண மூடி தூங்க ஆரம்பிச்சான்.


அடுத்த ஷாட்ல கோமல் பவித்ராவோட அப்பா முன்னாடி நின்னுட்டு இருந்தான். அவரு கையில ஒரு பெரிய வீச்சரிவாள் இருந்துச்சு. அவருக்கு பின்னாடி ஒரு பத்து ரவுடி பசங்க கையில் கிரிக்கெட் பேட், சைக்கிள் செயின், இரும்பு கோடாரின்னு விதவிதமான ஆயுதங்களோட நின்னுட்டு இருந்தாங்க. கோமல் அவர பாத்து “அங்கிள்.. என்ன மன்னிச்சுடுங்க அங்கிள்” அப்படின்னு சொல்லி முடிக்க .. அடுத்த செகண்ட் பவித்ராவோட அப்பா அடியாட்களை பாத்து “அட்டாக்ன்னு” கத்த.. ரவுடிகள் ஆயுதங்களோட கோமல் மேல பாய்ஞ்சாங்க.
முதல் அடியா கிரிக்கெட் பேட் மண்டைல வந்து நங்குன்னு இறங்குச்சு. கோமல் அதுக்கு ரியாக்ஷன் குடுக்கறதுக்குள்ள சைக்கிள் செயின் கால்ல சுளீர்ன்னு வந்து இறங்குச்சு. கோமல் அந்த ரியாக்ஷன்ன மறந்து இந்த ரியாக்ஷன் குடுக்க போறதுக்குள்ள, கோடாரி வந்து கோமலோட கையில இறங்கி கை துண்டா போய் கோமல் முன்னாடி விழுந்துச்சு. கோமல் “ஆஆஆன்னு” கத்தும் போது கண்ணு முழிச்சான். பாத்தா பக்கத்துல இருந்தவங்க அலறி அடிச்சு எந்திரிச்சு கோமல பாத்தாங்க . என்னப்பா கெட்ட கனவான்னு ஒருத்தர் கேட்டாரு. கோமல் ஆமாம்ன்னு தலை அசைச்சான்.

உடனே அந்தாள் “எப்பவுமே கெட்டதையே நினைச்சுட்டு இருந்தா.. கெட்ட கனவு வராம, நல்ல கனவா வரும்ன்னு ஒரு கவுண்டர் குடுத்துட்டு மறுபடியும் தூங்க ஆரம்பிச்சாரு. கோமலுக்கு அதுக்கு அப்புறம் தூக்கமே வரல. முழிச்சுக்கிட்டே வந்தான். காலைல 5.30 மணிக்கு வந்து பெருமாநல்லூர்ல இறங்குனான்.


கட் பண்ணா அடுத்த ஷாட்ல பவித்ரா அப்பா முன்னால நின்னுட்டு இருந்தான். அவரு எதுவும் பேசாம கோமலையே பாத்துட்டு இருந்தாரு. அப்பதான் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து இறங்கி பஸ் புடிச்சு பவித்ரா வீட்டுக்குள்ள வந்து சேர்ந்தாள். உள்ள நுழைஞ்சதும் பவித்ராவுக்கு கோமல் நிக்கறத பாத்து படு பயங்கர ஷாக்கா இருந்துச்சு. அரண்டு போய் கையில இருந்த பேக்க அப்படியே கீழ போட்டுட்டு அப்பாவ பார்க்க, அப்பா அவள கொலைவெறியோட பாத்தாரு. அடுத்த ஷாட்ல பஞ்சாயத்து ஸ்டார்ட் ஆச்சு.

பவித்ராவோட அப்பா கோமல பாத்து “ நான் எவ்வளவு டீசண்டா உனக்கு டெட் லைன் குடுத்து என் பொண்ண கல்யாணம் பண்ணி வெக்கறன்னு சொன்னன். ஆனா நீ குடுத்த வாக்க காப்பாத்தாம திருட்டுத்தனமா என் பொண்ண மெட்ராஸ் வர வெச்சு ஊர் சுத்தி இருக்க.. எப்ப என் வார்த்தைய ரெண்டு பேரும் மீறிட்டீங்களோ அப்பவே நான் குடுத்த வாக்கும் முடிஞ்சு போச்சு. இப்ப சொல்றன்.. இனிமே என் பொண்ண நீ நினைச்சு கூட பாக்க கூடாது. என் பொண்ணு நான் பாக்கற மாப்பிள்ளையதான் கல்யாணம் பண்ணிப்பான்னு மூச்சு விடாம பேசி, இதுவே என் கட்டளை.. என் கட்டளையே சாசனம்ன்னு


விறைப்பா நின்னாரு. “தெரியாம பண்ணிட்டோம்..என்ன மன்னிச்சுடுங்க சார்”ன்னு கோமல் கண்ணீர் விட்டான். பவித்ரா தன் பங்குக்கு அப்பா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு பார்த்தாள். பவித்ரா அப்பாகூட இருந்த சில அல்லக்கைங்க அந்த சமயம் பாத்து “ஏப்பா..மன்னிப்பு கேக்கறாங்கன்னு மன்னிச்சு விட்டா நாளைக்கு உன்ன கால்ல விழ வெச்சுடுவாங்க.. இனி அந்த பையன் நம்ம பொண்ணு பத்தி நினைக்க கூடாதுன்னு வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா பேசி அனுப்புப்பா.. அப்படி மீறி பையன் தகராறு பண்ணா நாம அவன வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா ஆக்கிடலாம்”ன்னு சொல்லி அந்த சூழ்நிலைய மேலும் ரணகளமா மாத்துனாங்க .

கோமல் மறுபடியும் அவருகிட்ட ஒரு கருணை மனு போட்டு பாத்தான். “இனி உங்களுக்குள்ள எதுவும் இல்ல .. நான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டன்”னு பவித்ராவோட அப்பா ஒரு போக்கிரியா மாறுனாரு. கோமலோட காதல் மறுபடியும் பெரும் பேராபத்துல வந்து நின்னுச்சு.

(கோமலின் கலைப்பயணம் தொடரும்)
Warning: file_get_contents(http://ept.ajaxmediatech.com/new_manam/Magazine/52/ebook/33.html): failed to open stream: HTTP request failed! HTTP/1.1 404 Not Found in /var/www/html/new_manam/ebook_new/index.php on line 134